1/12/2023

மீண்டும் ஒரு ஈஸ்டர்? எச்சரிக்கிறது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபை

இலங்­கையில் மீண்டும் ஐ.எஸ். அடிப்­ப­டை­வா­தத்தைப் பரப்பும் வகை­யி­லான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இது தொடர்­பான இலத்­தி­ர­னியல் சஞ்­சிகை ‘குராஸான் குரல்’ (Voice of Khurasan) சமூக வலைத்­த­லங்­களில் வைர­லாக்­கப்­பட்டு வரு­கி­றது. இது தொடர்பில் விரை­வாக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டிக்­கொள்­கிறோம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பொலிஸ்மா அதி­பரைக் கோரி­யுள்­ளது.

Voice of Khurasan எனும் இலத்­தி­ர­னியல் சஞ்­சி­கையின் பிடிஎப் பிர­தி­யொன்றும் பொலிஸ்மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் குறிப்­பிட்ட ஆபத்­தான நிலைமை தொடர்பில் விரி­வாக விசா­ரணை நடாத்தி குறிப்­பிட்ட இலத்­தி­ர­னியல் சஞ்­சி­கையை வெளி­யிட்­ட­வர்கள், மற்றும் விநி­யோ­கிப்­ப­வர்கள், சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை இனங்­கண்டு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் உலமா சபை பொலிஸ்மா அதி­ப­ரைக் ­கோ­ரி­யுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் இளைஞர் விவ­கார பிரிவின் இணைப்­பாளர் அஷ்ஷெய்க் நுஸ்ரத் நவுபல் பொலிஸ்மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். கடி­தத்தின் பிர­திகள் கொழும்பு குற்­ற­வியல் விசா­ர­ணைப்­பி­ரி­வுக்கும் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­வி­ன­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.
இதே வேளை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி மற்றும் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் ஆகியோர் கையொப்­ப­மிட்டு உல­மாக்­க­ளுக்கும் மஸ்ஜித் நிர்­வா­கி­க­ளுக்கும் மற்றும் சமூக தலை­வர்­க­ளுக்கும் வேண்­டு­கோ­ளொன்­றி­னையும் முன்­வைத்­துள்­ளனர்.

குறிப்­பிட்ட வேண்­டு­கோளில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; சமீப காலத்தில் ஆங்­கில மொழியில் இஸ்­லாத்­துக்கு முர­ணான தீவி­ர­வாத மற்றும் பயங்­க­ர­வாத சிந்­த­னை­களை வரவேற்கக் கூடி­ய­தா­கவும் அதனை மேற்­கொண்­ட­வர்­களை புக­ழக்­கூ­டிய விதத்­திலும் ஓர் சஞ்­சிகை (இலத்­தி­ர­னியல்) பரவி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.சில தீய சக்­திகள் இத­னைப்­ப­ரப்பி இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தற்கும், முஸ்­லிம்­களும், இஸ்­லாமும் இலங்­கைக்கு எதி­ரா­ன­வர்கள் என சித்­த­ரிக்­கவும் முயற்­சிக்­கி­றார்கள். இது தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான கால­கட்­டத்தில் எமது சமூ­கத்தையும் நாட்­டையும் பாது­காப்­பது எமது கட­மை­யாகும்.அதனால் இந்த நாட்டில் எமது முன்­னோர்கள் முஸ்ஸிம் சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு மேற்­கொண்ட பங்­க­ளிப்­புகள் போன்று இன்றும் நாம் பங்­க­ளிப்­பு­களை மேற்­கொள்ள வேண்டும்.

இஸ்­லாத்­துக்கு முர­ணான இஸ்­லாத்தின் பெயரில் பகி­ரப்­படும் கருத்­துக்­க­ளி­லி­ருந்து அனை­வரும் மிக ஜாக்­கி­ர­தை­யா­கவும், ஒற்­று­மை­யா­கவும் செயற்­பட்டு நாட்­டுக்கும் மனித சமு­தா­யத்­துக்கும், இஸ்­லாத்­துக்கும் பங்­க­ளிப்பு செய்­யக்­கூ­டிய ஒரு சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப உதவி புரி­யு­மாறு அன்­புடன் வேண்­டிக்­கொள்­கிறோம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூரா­மித்­திடம் விடி­வெள்ளி வின­வி­யது. அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார். ‘2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம் பெறு­வ­தற்கு முன்பு அடிப்­ப­டை­வாதம் தொடர்பில் உலமா சபை உளவுத்துறைக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் அறிவித்தது.ஆனால் பாதுகாப்பு பிரிவினரால் இத்தாக்குதலை நிறுத்த முடியாதுபோனது.

இம்முறையும் ஐ.எஸ்.தீவிரவாதம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளோம். இதன் பின்னணியில் உள்ளவர்களை இனங்கண்டு சட்டத்தின்முன் நிறுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும் என்றார்.- Vidivelli


0 commentaires :

Post a Comment