12/08/2022

சேற்றிலே இறங்கி விவசாயம் செய்யும் தொழிலாளவர்க்கம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது- சந்திரகாந்தன்-இராஜாங்கஅமைச்சர்

சேற்றிலே இறங்கி விவசாயம்செய்யும் தொழிலாளவர்க்கம் இன்று மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் இரண்டு ஏக்கர்,மூன்று ஏக்கர் என்று செய்யும் சிறு ஏழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளுகின்றனர் என பாராளுமன்றத்தில் சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
 அவர்களுக்கு வியாபாரம் செய்கின்ற உரம் வழங்குகின்ற ,எரிபொருள் வழங்குகின்ற, மற்றும் உழவு இயந்திர பாகங்களை வழங்குகின்ற இறுதியாக விளைச்சலை அதாவது நெல்லை கொள்வனவு செய்கின்ற  மில் உரிமையாளர்கள் என்று ஐம்பது அறுபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  பெரும் பணக்கார நிறுவனங்களாக மாறுகின்ற போது இந்த ஏழை விவசாயி மட்டுமே, இந்த விவசாய  வர்க்கம் மட்டுமே   மிகமோசமான நிலைக்கு பாதிப்புக்குள்ளாகின்றது. 

அதற்கு காரணமென்ன அவர்களது விளைச்சலுக்குரிய உத்தரவாத விலை இல்லாமையால் நெல்லை நியாயமான விலைக்கு விற்கமுடியாத நிலையில் உள்ளனர். ஆகையால் நாம் விவசாயத்தைக்காப்பாற்ற வேண்டுமானால் விவசாயிகளைக்காப்பாற்ற வேண்டுமானால் அரச கொள்கையில் சரியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். 

உதாரணமாக இரண்டு ஏக்கர், இரண்டரை ஏக்கர் விவசாயம் செய்யும் சிறுவிவசாயிகளுக்கு தகுந்த முறையிலான கொள்வனவுக்கான உத்தரவாத விலையை நிர்ணயம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் விவசாயம் அழிந்துபோவதோடு எதிர்காலத்தில் விவசாயிகளும்கூட இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை யாராலும் தடுக்க முடியாது போகும் என விவசாய அமைச்சுமீதான வரவு செலவு திட்ட உரையின்போதே மேற்படி குறிப்பிட்டார்.












0 commentaires :

Post a Comment