12/03/2022

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள்


தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள்

மட்டக்களப்பின் பல பகுதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் என்பவருக்கு எதிராகவே இத் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப் பிரசுரத்தில் சுரண்டப்பட்ட பணம் எனும் தலைப்பில் தர்மலிங்கம் சுரேஸ் ஒரு மஹா திருடன் 
அந்தப் பணத்தை மாவீரர்களின் குடும்பத்தினருக்கு திருப்பிக் கொடுத்துவிடு
அண்ணன் சங்கப்பிள்ளை அவர்களே நீங்கள் வீரர்களுக்கு முன்மாதிரி எனவும் அச்சிடப்பட்டுள்ளது.

மாவீரர் நிகழ்வுகளை ஒட்டி வெளிநாடுகளில் வாழும் புலி பினாமிகளாலும் தமிழீழ அனுதாபிகளாலும் கோடிக்கணக்கான பணங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது தெரிந்ததே.

0 commentaires :

Post a Comment