தனியார் ஊடகம் ஒன்றுடனான நிகழ்ச்சியில் பேசிய பசில் ராஜபக்சஇ
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களுக்காக தியாகம் செய்ததாகவும் ஆனால் அதன் விளைவாக துன்பங்களை அனுபவித்ததாகவும் கூறினார்.
மேலும் “இதேபோன்ற தியாகத்தை நீங்களும் செய்வீர்களா?” என வினவிய போது அதற்கு பதிலளித்த பசில் “அந்த நேரத்தில் தேவை ஏற்பட்டால் எனது இரட்டை குடியுரிமையை கைவிடுவேன். எனினும்இ தற்போது அவ்வாறான தேவை இல்லை” என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி பீதி அடையாமல் இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்திருந்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்திருக்க முடியும் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment