12/12/2022

தங்கப் பதக்கம் வென்ற மட்/சிறைச்சாலை




திறந்த தேசிய மட்டத்திலான கராத்தே தொடரில் மட்டக்களப்பு சிறைச்சாலை சார்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன் தலைமையில் பதக்கங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளமை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இத் திறந்த போட்டியானது வென்னப்புவ கொழும்பு எனும் இடத்தில் 11.12.2022 அன்று இடம்பெற்றது.

 குறித்த போட்டியில் சிறைச்சாலைகள் திணைக்களம் சார்பில் பலர் பங்கு பற்றியிருந்தனர். அதிலும் மட்டக்களப்பு சார்பில் அத்தியட்சகரும் மற்றும் உத்தியோகத்தர் குபேந்திரன் என்பவரும் பங்குபற்றி தலா இரு பதக்கங்கள் வீதம் நான்கு பதக்கங்களை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வெற்றியானது மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு நிகழ்வுகள் ஸ்தம்பித்து இருந்த நிலையில் குறித்த அத்தியட்சகரின் வருகைக்கு பின் மீண்டும் துளிர்விடும் தொடங்கியுள்ளது. ஆகவே இனி வரும் காலங்களில் மென்மேலும் வெற்றிகள் பல மலரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நன்றி
தமிழன் நவா

0 commentaires :

Post a Comment