இன்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.சி.சந்திரகாந்தன் அவர்களால் 123 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவற்றில் 32 துவிச்சக்கர வண்டிகள், 52 தையல் இயந்திரங்கள், 28 விவசாயஉபகரணங்கள், 11சிற்றுண்டிச்சாலை உபகாரங்கள் போன்றன அடங்கும.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின்கீழ் கிராமத்துக்கான 3 மில்லியன். வட்டாரத்திற்கான 4 மில்லியன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான 100 மில்லியன் வேலைத் திட்டங்களின் கீழ் வாழ்வாதார மேம்பாட்டு உதவித் திட்டங்கள் மாவட்டம் பூராகவும் சந்திரகாந்தன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.