ஒரு சிறந்த தலைமைக்குரிய சிறப்பம்சம் என்பது விமர்சனங்கள்,ஆலோசனைகள் எங்கிருந்து வந்தாலும் அவை குறித்து பரிசீலித்து நடவடிக்கைகளை எடுப்பது என்பதாகும். அந்த பண்பினை தமிழக முதல்வரிடம் அடிக்கடி காணமுடிகின்றது.
இலங்கை நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களில் அக்கறைகொண்டு ஈழத்தமிழர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக கடந்த மாதம் அவர் அறிவித்திருந்தார்.
அவ்வேளை இப்படி தமிழர் சிங்களவர் என்று பிரித்தறிந்து உதவி செய்வது வரவேற்கத்தக்கதல்ல என்கின்ற ஆட்சேபனைக்குரல்கள் அதுவும் ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடியவர்களிடமிருந்தே எழுந்தது. திராவிடமுன்னேற்ற கழகத்தின் தோழமைகளின் ஊடாக அவை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவ்விமர்சனங்களின் தாற்பரியத்தை புரிந்துகொண்டு 'தங்களது உதவிகள் முழு இலங்கை மக்களுக்குமானது' என்று தீர்மானித்து அறிக்கை வெளியிட்டுள்ளது மட்டுமன்றி தங்களது பிழையான அணுகுமுறையை இத்தகைய விமர்சனங்களின் அடிப்படையில் மாற்றிக்கொண்டுள்ளதாகவும் இன்று சட்டசபையில் பகிரங்கமாக அறிவித்துள்ளார் முதல்வர்.
ஒரு தலைமைக்குரிய சிறப்பான பண்பு இது. பாராட்டுக்கள் முதல்வர் அவர்களே!
அரசின் அனுமதி கிடைத்தவுடன் இலங்கை மக்களுக்காக வழங்கப்படவுள்ள பொருட்களாவன…..
*80 கோடி இந்திய ரூபாய்கள் பெறுமதியான 40 ஆயிரம் தொன் அரிசி,
பருப்பு போன்றவை.
*28 கோடி இந்திய ரூபாய்கள் பெறுமதியான 137 வகையான மருந்துப்பொருட்கள்.
* 15 கோடி இந்திய ரூபாய்கள் பெறுமதியான 500 தொன் எடையுள்ள 'குழந்தைகளுக்குரிய பால்மா' பவுடர்
தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றிகள்.
0 commentaires :
Post a Comment