மட்டக்களப்பு சிறைச்சாலையில் கரோயின் போதைபொருள்
நேற்று (11.03.) மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்வையிட வந்த ஒருவர் கரோயின் போதைபொருளை அக்கைதிக்கு கொடுக்க முற்பட்ட வேளை கைதாகியுள்ளார். சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பின் விளைவாக குறித்த சந்தேகநபர் போதைப்பொருளுடன் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காத்தான்குடியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க அரபாத் என்பவரே இவ்வாறு கைதானவர் ஆகும்.
மட்டக்களப்பு நிருபர்