கிராமத்துக்கு கிராமம்,வீட்டுக்கு வீடு நீதிமன்ற அபிமானத்துக்கு வட மாகாண மக்களுக்கான நீதிக்கான அணுகல் எனும் தலைப்பில் வடமாகாணம் முழுக்க நடமாடும் சேவையொன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி,வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கடந்த 26ம் திகதி முதல் 31 ம் திகதி வரை நீதியமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.
இதில் சட்ட தகராறுகளை தீர்ப்பதற்கான சட்ட ஆலோசனைகள், நிலம் மற்றும் சொத்து தகராறுகள் தொடர்பான தீர்வுகள், மத்தியஸ்த்த செயல்முறை மற்றும் தகராறு தீர்க்கும் மாற்று முறைகளை அறிமுகப்படுத்தல், போதைப்பொருள் தடுப்பு,சட்டம் மற்றும் நல்லிணக்கம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல், காணாமல் போனார் தொடர்பான முறைப்பாடுகளை விசாரனை செய்தல்,சொத்து சேதங்களிற்கான இழப்பீடு வழங்குதல்,நல்லிணக்கம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களுடன் திறந்த உரையாடல்,கிளிநொச்சி புதிய நீதிமன்ற வளாகம் மற்றும் மாங்குளம்,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு நீதிமன்ற கட்டிடங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தல்,தொழில் பயிற்சி வழிகாட்டுதல்கள்,அடையாள அட்டைகள்,பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்த்தல். போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகள் நிவர்த்தி செய்யப்பட்டன.
சட்ட உதவி ஆணைக்குழு,தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம்,இழப்பீட்டுக்கான அலுவலகம்,பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் தேசிய அதிகாரசபை, கடன் நிவாரண சபைகள் திணைக்களம்,சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களம்,புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் பணியகம், மத்தியஸ்த்த சபைகள் ஆணைக்குழு , சிறைச்சாலைகள் திணைக்களம்,காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்,ஆட்பதிவுத் திணைக்களம்,பதிவாளர் நாயகம் திணைக்களம்,மாகாண காணிகள் திணைக்களம்,பனை அபிவிருத்தி சபை,சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபை ஆகிய பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும் ஒருமித்து இப்பங்களிப்பினைச் செய்தன.
சிறைச்சாலைகள் திணைக்களம் சார்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், ஆணையாளர்கள், அத்தியட்சகர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் வழிநடத்தலில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் திரு ந.பிரபாகரன் என்பவரால் போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் நல்லிணக்கம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல் நிகழ்சி திட்டம் திறம்பட நடத்தி செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு கருத்தரங்குகளிலும் 300 தொடக்கம் 500 மாணவர்கள் பங்கு பற்றி தங்கள் வரவேற்பை தெரிவித்திருந்தனர். மற்றும் இது போன்ற நிகழ்வுகளை தங்கள் பாடசாலைகளிலும் நடத்துமாறு இக் கருத்தரங்குகளுக்கு வருகைதந்த ஏனைய அதிபர்கள் கோரியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment