1/18/2022

எஸ். பி. கனகசபாபதி (கனக்ஸ்) அவர்கள் மறைந்தார்.

துயர் பகிரும் செய்தி.
-----------------------------------------

 எஸ். பி. கனகசபாபதி (கனக்ஸ்) அவர்கள் மறைந்தார்.


திருக்கோவிலை பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவர். 

கனக்ஸ் ஒரு மிகச் சிறந்த சமூக சேவையாளராவர். கனடா தமிழ் கலாச்சாரச் சங்கம், உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் - கியூபெக், சுவாமி விபுலாநந்த கலை மன்றம், பாடும் மீன்கள் சமூகம், சிடாஸ், எமது சமூகம் என்று கனடாவில் இயங்கும் பல பொது அமைப்புகளில் இணைந்து பணியாற்றியவர்.

கனடா தேசத்தில் மடடக்களப்பு கூத்தின் ஆட்ட நிகழ்விற்கு முதல் முக்கியமானவர். எழுத்தாளர், கதாசிரியர், கவிஞர், கலைஞர், வெளியீட்டாளர், பதிப்பாசிரியர், தமிழறிஞர் என்று பல துறைகளில் பணியாற்றியவர். கல்கிதாசன்,கனக்ஸ், என்ற பெயர்களில் பல நூல்கள் எழுதியவர். க. தா. செல்வராஜகோபால் (ஈழத்துப் பூராடனார்) அவர்களுடன் இணைந்து மட்டக்களப்பு வரலாற்று நூலை இரண்டு பாகங்களாக வெளியிட்டவர். சுவாமி விபுலாநந்தரிலும், ஈழத்து பூராடனாரிடத்திலும் மிகவும் கண்ணியம் மிக்க பற்றுக் கொண்டவர்.
பிறந்த ஊரில் மிகுந்த பற்றுக்கொண்டவர்.

அன்னாரின் மறைவில் துயருறும் குடும்ப உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் உண்மைகள் இணையத்தளம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றிகள்* 
தகவல்கள் முகநூல்- கோவிலூர் செல்வராஜன்

0 commentaires :

Post a Comment