கிழக்குப் பல்கலைக்கழக கலை-கலாசார பீட புதிய மாணவர் ஒன்றிய நிர்வாகம் தெரிவாகியுள்ளது. கோவிட் தோற்றுப் போன்ற பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 21,22,23…..ஆகிய தினங்களில் பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக நாடாத்தப்பட்ட தேர்தல் மூலம் இத்தெரிவானது இடம்பெற்றுள்ளது.
இப்புதிய மாணவர் ஒன்றியமானது முன்னொருபோதும் இல்லாதவாறு அமையப்பெற்றுள்ளமை ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகின்றது. அதாவது இம்முறை இவ்வொன்றியத்துக்கு தெரிவாகியுள்ள தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட ஏனைய அனைத்து உறுப்பினர்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகும். இது குறித்து மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவுகின்றது.
அதனடிப்படையில் தலைவர் நவரெட்னராஜா ஜெயராஜ், செயலாளர் குணசேகரம் மதுசாந், உபதலைவர் நிர்மலராஜ் தர்சன்,பொருளாளர் சிவகுமார் சுதர்சன், எடிட்டர் நிறோஜினி வினாயகம் என்பவர்களோடு மற்றும் எட்டு உறுப்பினர்களையும் கொண்டமைந்ததாய் திகழ்கின்றது இப்புதிய கலைப்பீட மாணவர் ஒன்றியம்.
இத்தெரிவுகளின் பின்னர் எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவித்த மாணவர் ஒருவர் "இது ஒரு வரலாற்றுச் சாதனை,நாங்கள் மிகமிக உற்சாகமாக இருக்கின்றோம், எமது பிரதேசத்தின் தேவைகளைப் புரிந்து கொண்ட ஒரு ஒன்றியமாக நாம் உறுதியுடன் செயற்படவுள்ளோம்" என்று மகிழ்ச்சி ததும்ப கருத்துரைத்தார்.
இது குறித்து நாம் மேலும் மாணவர்களிடையே வினவியபோது பல அதிர்ச்சிதரும் தகவல்கள் எமக்கு கிடைத்தன. கடந்தகால ஒன்றியதெரிவுகளின் போது தலைவர் செயலாளர் போன்ற பொறுப்புகளுக்கு தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்து மாணவர்களே தெரிவாகி வந்தமையையும் அது மிக நுட்பமான வகையில் திட்டமிடப்பட்டு நிறைவேற்றுப் பட்டுவந்ததாகவும் அறியமுடிந்தது.
எனவேதான் இம்முறை அந்த தொடர் வஞ்சக வலையிலிருந்து தாம் மீண்டிருப்பதாகவும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
0 commentaires :
Post a Comment