12/26/2022
| 0 commentaires |
வாழும்போதே வாழ்த்துவோம்" சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா!
12/24/2022
| 0 commentaires |
தந்தை பெரியார் வரலாற்று குறிப்புகள்--சிறு அறிமுகம்
தந்தை பெரியார்
1879
ஈ.வே.ராமசாமி (தந்தை பெரியார்) தமிழ் நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் 1879ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 17ஆம் திகதி பிறந்தார் .
1889
தனது பாடசாலை கல்வியை 1889ஆம் ஆண்டு பத்தாவது வயதில் நிறுத்தினார். அதனால் அவரை பெற்றோர் வியாபாரத்தில் ஈடுபடுத்தினர்.
1898
தனது 19ஆவது வயதில் நாகம்மாள் என்பவரை திருமணம் செய்தார். இரு வருடங்களின் பின் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.அக்குழந்தை ஐந்தாவது வயதில் இறந்தது.அதன்பின்னர் அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.
1904
தனது 25வது வயதில் துறவறம் பூண்டு காசி, கல்கத்தா போன்ற இடங்களுக்கு சென்றார். பின்னர் அவரை அவரது தந்தை அதிலிருந்து மீட்டெடுத்தார்.
1911
பெரியாரின் தந்தை மரணமானார்.
1914
ஈரோடு நகரமன்றத்தின் தவிசாளரானார். அத்தோடு ஈரோடு நகரத்தின் கெளரவ மஜிஸ்ட்டேட் உட்பட்ட 28 கெளரவ பதவிகளை வகித்தார்.
1919
நகர மன்ற தவிசாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
1920
அனைத்துவித கெளரவ பதவிகளையும் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.
1921
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரானார்.
1922
மதுவிலக்கு (கள்ளுக்கடை மறியல்) போராட்டத்தில் ஈடுபட்டதனால் சிறைபிடிக்கப்பட்டார். அவரோடு மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் ஆகியோரும் சிறைபிடிக்கப்பட்டனர்.
1922
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தெரிவானார். பெரியாரது ஈரோடு இல்லம் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பின் அலுவலகமாக மாறியது.
1924
இந்தியாவில் முதல் முறையாக சத்தியாக்கிரகம் நடத்தினார். கேரளத்தில் வைக்கம் மகாதேவர் ஆலயம் முன்பாக தீண்டாமை ஒழிப்புக்காக அது நடாத்தப்பட்டது.
அதனால் இருமுறை சிறை சென்றார்.
அப்போராட்டத்தில் வெற்றி பெற்றதனால் வைக்கம் வீரர் என்னும் சிறப்பு பட்டம் பெற்றார்.
1925
சமுதாயத்திலுள்ள சாதி வேறுபாடுகளை களைய சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். அதனை பிரச்சாரம் செய்ய குடியரசு வார இதழை தொடங்கினார்.
1927
சாதி முறைமைகளை ஆராதிக்கும் "வர்ணாச்சிரமம் தர்மத்தை " ஒழித்தால்த்தான் தீண்டாமைக்கொடுமைகள் ஒழியும் என்று காந்தியோடு கடுமையான வாதம் புரிந்தார்.
1928
புரட்சி என்னும் அர்த்தம் கொண்ட "ரிவோல்ட்" என்னும் ஆங்கில இதழை தொடங்கினார்.
1929
முதலாவது சுயமரியாதை மாநாட்டை செங்கல்பட்டில் கூட்டினார். இந்த மாநாட்டில் அண்ணாத்துரை ஒரு மாணவனாக கலந்து கொண்டார்.
1929
பெரியார் மலேசியா சென்று சுயமரியாதை பிரச்சாரம் செய்தார்.
1930
ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டை கூட்டினார்.
1931
விருது நகரில் மூன்றாவது சுயமரியாதை மாநாட்டை கூட்டினார்.
1932
இலங்கை, எகிப்து,ரஸ்யா,கிரீஸ்,துருக்கி,ஜெர்மனி,ஸ்பெயின், பிரான்ஸ்,போத்துக்கல்,இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று திரும்பினார். லண்டனில் 50.000 தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
1933
மனைவி நாகம்மை இறந்தார்.
1934
"பகுத்தறிவு" நாளிதழை தொடங்கினார்.
1935
நீதிக்கட்சிக்கு ஆதரவளிக்க தொடங்கினார்.
1936
பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மாள் மறைந்தார்.
1937
"கட்டாய ஹிந்தி மொழி" எதிர்ப்பு மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்தினார்.
1938
சென்னையில் கூடிய தமிழ் நாடு பெண்கள் மாநாடு "பெரியார்" என்னும் சிறப்பு பட்டத்தை வழங்கி கெளரவித்தது.
ஹிந்தி திணிப்பை எதிர்த்து மாபெரும் கிளர்ச்சி செய்தமையால் இரண்டு வருட சிறைவாசம் செல்ல நேர்ந்தது.
ஆந்திர பிரதேசத்தில் அவர் சிறையிருக்கும் போதே நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1940
டாக்ட்ர் அம்பேத்காரை பம்பாய் சென்று சந்தித்து உரையாடினார்.
1944
பெரியார் தலைமையிலான நீதி கட்சி "திராவிடர் கழகம்"என்னும் பெயர் மாற்றம் பெற்றது.
1949
பெரியார் மணியம்மையை மணந்தார்.
அண்ணாத்துரை அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து பெரியார் தலைமையிலான திராவிடக்கழகத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
1950
பெரியார் அவருடைய "பொன்மொழிகள்" நூலுக்காக ஆறு மாதகால சிறைத்தண்டனை பெற்றார்.
1951
பிற்படுத்தப்பட்டடோர் நலனுக்காக கிளர்ச்சி செய்து இந்தியாவின் அரசியல் அமைப்பினை முதல் முறையாக திருத்தச் செய்தார்.
1954
இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் தமிழ் நாட்டில் காமராஜர் முதல்வராவதை ஆதரித்தார்.
1967
திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் அண்ணாத்துரை முதலமைச்சரானதும் பெரியாரிடம் நேரில் சென்று சந்தித்து ஆசிகளும் வாழ்த்துரையும் ஆலோசனைகளும் பெற்றுக்கொண்டார்.
1968
வட இந்தியாவில் உள்ள லக்னோ மாநகரில் நடைபெற்ற சிறுபான்மையோர் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
1970
சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ பெரியாருக்கு விருது வழங்கி கெளரவித்தது.
( "பெரியார் நவீன காலத்தின் தீர்க்கதரிசி,தென்கிழக்காசியாவின் சோக்ரடீஸ்,சமூகசீர்திருத்தத்தின் தந்தை,
அறியாமை,மூடநம்பிக்கை,அர்த்தமற்ற சம்பிரதாயம், மானமிழந்த பழக்கவழக்கங்கள் என்பவற்றில் கடும் எதிரி"-யுனெஸ்கோ)
1973
சென்னையில் தனது இறுதி சொற்பொழிவையாற்றினார்.
மாபெரும் சிந்தனையாளர் பெரியார் டிசம்பர்-24ஆம் நாள் தனது 95 வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
அப்போதைய முதல்வர் கருணாநிதியின் விசேட ஆணைப்படி பெரியாரது பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு அரச மரியாதைகள் வழங்கப்பட்டடன.
1974
தமிழ் நாடு அரசால் வாங்கப்பட்ட.கப்பலுக்கு "தமிழ் பெரியார்" என்னும் பெயர் சூட்டப்பட்டு பெரியார் கெளரவிக்கப்பட்டார்.
1975
ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டு பெரியார்-அண்ணா நினைவாலயமாக்கப்பட்டது.
1978
முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சியில் பெரியார் நூற்றாண்டு விழா தமிழ் நாடு முழுக்க மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்திய மத்திய அரசாங்கம் பெரியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது சிறப்பு முத்திரை ஒன்றை வெளியிட்டது.
பெரியாருடைய தமிழ் எழுத்து சீர்திருத்தத்தினை எம்ஜிஆர் தலைமையிலான தமிழ் நாடு அரசு அமுலாக்கியது.
1980
தமிழ் நாடு சட்டடசபை மண்டபத்தில் தந்தை பெரியாரின் உருவச்சிலை நிறுவப்பட்டது.
1984
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவினால் வருடாந்த பெரியார் விருது ஒன்று உருவாக்கப்பட்டு தமிழக அரசினால் சமூகநீதி போராளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
12/22/2022
| 0 commentaires |
தமிழ் தேசிய அரசியல்- தேவையில்லாத ஆணிகள்
ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார்.
| 0 commentaires |
வீதி மறியல் போராட்டத்தில் மாணவர்கள்- விரைந்து சென்ற பிள்ளையான்
மட்/கதிரவெளி விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் காணப்படும் ஆசிரியர் குறைபாடுகளை நீக்கக்கோரி வீதிக்கு இறங்கிய மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
12/20/2022
| 0 commentaires |
'விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி' - 9 பேரை கைது செய்த என்.ஐ.ஏ
போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட ஒன்பது பேரை இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகமை கைதுசெய்துள்ளது.
சி. குணசேகரன் என்ற குணாவும், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணாவும் சேர்ந்து போதைப் பொருள் கும்பல் ஒன்றை நடத்திவந்ததாக என்.ஐ.ஏ தெரிவிக்கிறது.
இவர்களுக்கான போதைப் பொருளை, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹாஜி சலீம் என்பவர் அனுப்பிவந்துள்ளார். இந்த போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கும்பல், இந்தியாவிலும் இலங்கையிலும் செயல்பட்டதாகவும் இரு நாடுகளிலும் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றதாகவும் என்.ஐ.ஏ. தெரிவிக்கிறது.
இது தொடர்பான ஒரு வழக்கை கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று தாமாக முன்வந்து என்.ஐ.ஏ. பதிவுசெய்தது.
இது தொடர்பாக என்ஐஏவின் டி.ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார் தலைமையிலான அணி ஒன்று திருச்சி சிறப்பு முகாமில், கடந்த ஜூலை 20ஆம் தேதி சோதனைகளை நடத்தியது.
இந்த சோதனைகளின்போது, மொபைல் போன்கள், சிம் கார்டுகள், ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவ்கள், லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதற்குப் பிறகு நேற்று, திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சி. குணசேகரன், புஷ்பராஜா, முகமது அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்செக, ஸ்டான்லி கென்னடி ஃபெர்ணான்டோ, லாடியா சந்திரசேன, தனுக்க ரோஷன், வெள்ளசுரங்க்க, திலீபன் ஆகிய ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
12/19/2022
| 0 commentaires |
தமிழரசுக்கட்சிக்கு ஆண்டுவிழா ஒரு கேடு
வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழினத்தை வன்முறைவழிக்கு அழைத்துச்சென்று, ஆயுதப்போராட்டத்துக்கு தலைமைகொடுக்கமுடியாமல் ஐந்துவருடங்கள் மக்களைக் கைவிட்டு அரச விருந்தினர்களாக தமிழ்நாட்டில் சுகபோகவாழ்க்கை வாழ்ந்துவிட்டு, லட்ஷக்கணக்கான மக்களின் கொலைகளுக்கும் கோடிக்கணக்கான சொத்துக்களின் அழிவுக்கும் வித்துட்டது தமிழரசுக்கட்சியே.
12/16/2022
| 0 commentaires |
நம்பிக்கைதான் வாழ்க்கை- டானியல் ஒடேகா
| 0 commentaires |
நிலச்சரிவில் மலேசியாவில் 16 பேர் பலி! மேலும் பலரரைக் காணவில்லை!
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது முகாம்களில் தங்கியிருந்த குழந்தைகள் உட்பட குறைந்தது 16 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள படாங் காளி (Batang Kali) டவுன்ஷிப் பகுதியில் உள்ள ஒரு பண்ணை தங்குமிடத்தில் வெள்ளிக்கிழமை (19:00 GMT வியாழன்) பிற்பகல் உள்ளூர் நேரம் 3 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது அதனுள்ளே சில குடும்பங்கள் தங்கள் கூடாரங்களில் தூங்கிக் கொண்டிருந்ததாக அறிய முடிகிறது.
நூற்றுக்கணக்கான மீட்புப் பணி ஊழியர்கள் சேறும் சகதியுமாகிப் போன சம்பவ பகுதியை அடைந்து நிலச்சரிவில் சிக்கியிருந்த உயிர் பிழைத்தவர்களை பார்த்தனர். இந்த முகாமில் 90க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
12/15/2022
| 0 commentaires |
இராஜாங்க அமைச்சரினால் மீனவர்களுக்கு தோணிகள் வழங்கப்பட்டன
12/14/2022
| 0 commentaires |
காணி மாஃபியாக்களுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் அரசகாணி அபகரிப்புகளுக்கு எதிராக இன்று ஒர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. அரசகாணிகளை தவறானவழிகளில் கையகப்படுத்தியும் போலி ஆவணங்களை தயார்பண்ணியும் நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் மட்டக்களப்பில் காணி மாபியாக்களினால் அபகரிக்கப்பட்டுவருகின்றன. கடந்த 'நல்லாட்ச்சி'காலத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் அரச காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்த உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
| 0 commentaires |
மண்ணை சுரண்டினால் மனிதன் அழிவான்
ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் 50 பில்லியன் டன் மண்ணையும், கற்களையும் பூமியில் இருந்து சுரண்டுகின்றனர் என்று சமீபத்திய ஐநா ஆய்வு கூறுகிறது. நீரிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் சுரண்டப்படும் பொருள் மண்ணே.
ஆனால் நீர் போல அரசுகள் மற்றும் தொழிற்துறை இதை முக்கிய மூலவளமாகக் கருதுவதில்லை. இந்தப் போக்கு விரைவில் மாற வேண்டும். கூடுதல் கண்காணிப்பு, விநியோகச்சங்கிலி, எடுக்கப்படும் மண் மூலம் இழக்கப்படும் தாவர விலங்கினங்களுக்கு சமமான இழப்பீடு, சமத்துவமற்ற மண் சுரண்டலிற்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ நா அறிக்கை வலியுறுத்துகிறது.
கட்டுமானம் முதல் தகவல் தொடர்பு வரை
தொழிற்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானம் முதல் தகவல் தொடர்புத்துறை உட்பட பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதாரமாக இருப்பது மண்ணே. இந்நிலையில் மண் குறித்த அடிப்படைப் புரிதலும், அதன் மதிப்பும் உணரப்பட வேண்டும் என்று ஐ நா ஆய்வுக் குழு வலியுறுத்துகிறது.
மனித குலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் மண்ணை நம்பியே இருக்கும்போது அது அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெற்ற பொருளாக மதிக்கப்பட வேண்டும் என்று ஐநா சூழல் திட்டத்தின் உலக வள தகவல் தரவு மைய (Global Resource Information Database) இயக்குனரும், ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான பாஸ்கல் பெடுஸி (Pascal Peduzzi) கூறுகிறார்.
மற்ற வளங்கள் போலவே மண்ணும் கட்டுப்பாடு இல்லாமல் சுரண்டப்பட்டால் அது மறைந்து போகும். இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழு கூறுகிறது.
மண்ணை மதிக்கத் தெரியாத மனிதன்
மற்ற தாதுப்பொருட்கள் போலவே மண்ணும் கருதப்பட வேண்டும். பூமியில் தாதுக்கள், நீர், எண்ணெய் மற்றும் வாயு போன்றவற்றிற்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பும், முக்கியத்துவமும் மண்ணிற்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நியூ கேஸில் (Newcastle) பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மற்றொரு ஆசிரியர் கிறிஸ் ஹாக்னி (Chris Hackney) கூறுகிறார்.
கருந்துளை
ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கினால் மண் வணிகம் குறித்த தகவல்கள் பெரும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. மண் வியாபாரம் தொடர்பான தரவுகளைச் சுற்றிலும் ஒரு கருந்துளை (blackhole) நிலவுகிறது. இது தொடர்பான உலக மதிப்பிடல் தகவல் வலையமைப்பின் (Global Aggregates information network) புள்ளிவிவரங்களின்படி மண்ணை ஆதாரமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தயாரிப்பு கடந்த ஆண்டு 4.9% உயர்ந்துள்ளது.
2020ல் 42.2 பில்லியன் டன் என்ற அளவில் இருந்து இது 2021ல் 44.3 பில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. உலகளவில் சுரண்டப்படும் மண் குறித்த துல்லியமான விவரங்கள் கிடைக்கவில்லை. அதைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவைப் பற்றி மட்டுமே விவரங்கள் கிடைக்கின்றன என்று ஐ நா கூறுகிறது.
மண் சுரண்டினால் சூழல் அழியும்
வரையறை இல்லாமல் தொடரும் மண் சுரண்டலால் உயிர்ப்பன்மயத் தன்மைக்கு இழப்பு ஏற்படுகிறது. புயல்களின்போது இயற்கை அரணாக இருக்கும் மண் குன்றுகள், மேடுகள் அழிவதால் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரிக்கிறது. இது மீனவர் சமுதாயத்தைப் பாதிக்கிறது. எரிபொருள் தகராறுகளுக்கும் வழிவகுக்கிறது. காலநிலைச் சீரழிவிற்கும் முக்கிய காரணமாகிறது. கான்க்ரீட் உற்பத்தி, உலகில் அதிகளவில் கார்பன் உமிழும் தொழிலாக மாறியுள்ளது.
தாவர விலங்கினங்களின் அழிவு
மண் மற்றும் சரளைக்கற்கள் சுரண்டலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவப்புப் பட்டியல் தாவர விலங்கினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை 24,000 இனங்களுக்கும் கூடுதல். என்றாலும் இன்னமும் மண்ணிற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
மண் என்னும் மகத்தான இயற்கைச் செல்வம் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கும், சட்டரீதியிலான கட்டமைப்புகளுக்கும் இடையில் உள்ள விரிசல்களுக்கும் பிளவுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது என்று மண் ஆய்வாளர், மண் சொல்லும் கதைகள் (Sand stories) என்ற அமைப்பின் ஆசிரியர் மற்றும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான கரன் பெரேரா (Kiran Pereira) கூறுகிறார்.
மாற்றுவழிகள்
மண் சுரண்டலைத் தடுக்க மாற்று வழிகள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது. கட்டுமானப் பொருட்கள், மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 2050ம் ஆண்டிற்கு முன் உலக மக்கட்தொகை 10 பில்லியனைத் தாண்டும். அப்போது உலக மக்களில் 70% பேர் நகரங்களிலேயே வாழ்வர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மண் மீதான மனிதனின் மோகம் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவில்
தர நிர்ணயமும் விதிமுறைகளும் ஒழுங்காகப் பின்பற்றப்படாத இந்தியா போன்ற நாடுகளில் மண்ணிற்கு கிராக்கி அதிகம் உள்ளது. இந்தியாவில் மட்டும் 2020 முதல் மண் சுரண்டல் தொடர்பான வன்முறைகள் மற்றும் விபத்துகளில் அரசு ஊழியர்கள் உட்பட நானூறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வியட்நாம் மெக்காங் (Mekong) டெல்ட்டாவில் கொரோனா கொள்ளைநோய் காலத்தில் சட்டவிரோத மண் சுரண்டல் அதிகரித்துள்ளது.
மண் எடுத்தல் தொடர்பான சர்வதேச விதிமுறைகள் உருவாக்கப்பட்டால் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசுகளால் எளிதில் செயல்படமுடியும் என்று கிறிஸ் ஹாக்னி கூறுகிறார்.
மண் சுரண்டினால் மனிதன் அழிவான்
மிதமிஞ்சிய நிலத்தடி நீரை எடுப்பதால் டெல்லி, பாக்தாத் உட்பட உலகில் பல நகரங்களும் மண்ணிற்கடியில் புதைந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மண் சுரண்டலை இதேபோல் தொடர்ந்தால் நாளை ஆறு, குளம், ஏரி போன்ற இயற்கை நீர்நிலை அமைப்புகளே இல்லாமல் போய்விடும். மண் என்னும் மகத்தான வளத்தின் மதிப்பை உடனடியாக மனிதன் உணராவிட்டால் அவனை அழிக்கும் மாபெரும் பேரிடராக விரைவில் அது மாறும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் ரவிச்சந்திரன்
நன்றிகள் *கீற்று