12/29/2021

கிளிநொச்சியில் உழவர் சந்தை

கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
.................

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கு அமைய உழவர் சந்தையை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கணடாவளை மற்றும் பரந்தன் கமநல சேவைகள் திணைக்களங்களை இரண்டாகப் பிரித்து வினைதிறனான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளது.

கிளிநொச்சி, இரணைமடு கமக்காரர் அமைப்பின் சமேளனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(28.12.2021) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் காணிப் பதிவுகளை ஒழுங்குபடுத்தி பூரணப்படுத்தல், காணி அபிவிருத்தி சபைகளை வினைத் திறனாக இயங்க வைத்தல், கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை, நீர்வழங்கல் செயற்பாடு உட்பட பல்வேறு விடயங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து ஒவ்வொரு விடயங்களையும் விரிவாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, விவசாயிகள் தமது உற்பத்திகளை நியாயமான முறையில் விற்பனை செய்து உச்சபட்சமான நன்மைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், உழவர் சந்தை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்றைய கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது. 

இதுதொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான வளாகத்தின் ஒரு பகுதியில் உழவர் சந்தையை தற்காலிகமாக ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதியை சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிப் பெற்றுக் கொடுத்தார்.

அதேபோன்று, நெத்தலியாறு தொடக்கம் ஆனையிறவு வரையான சுமார் 16 கிலோ மீற்றர் நீளமான கண்டாவளை உவர் நீரேரிக்கு அணை கட்டப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசணத் திட்டத்திற்கு மின்சாரத்தினை பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

12/25/2021

மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்ட இளைஞன்

இன்று மாலை மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டைக்கு புறப்பட்ட புகையிரதத்தினால்  இளைஞனொருவனர்  மோதுண்டுள்ளார். மட்டக்களப்பு  மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்விபத்தில் சிக்கியவராவார். விபத்தில்  காலும் கையும் துண்டாக்கப்பட்டுள்ளதகாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








»»  (மேலும்)

12/16/2021

மட்/மாநகர ஆணையாளராக மீண்டும் மாணிக்கவாசகர் தயாபரன்



மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக மீண்டும் மாணிக்கவாசகர் தயாபரன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன் இன்று (15) பி.ப. 3 மணியளவில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிருவாக சேவையின் முதல்தர வகுப்பைச் சேர்ந்த மாணிக்கவாசகம் தயாபரன் நீண்டகால சேவை அனுபவத்தினைக் கொண்டவராவார்.


மாநகர ஆணையாளர் மாணிக்கவாசகர் தயாபரன் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வின்போது மாநகர பிரதி ஆணையாளர் உதயகுமார் சிவராஜா மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் பெரும் வரவேற்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


»»  (மேலும்)

12/06/2021

பிரியந்தவின் உடற்பாகங்கள் தாங்கிய பேழை ஏற்றப்பட்டது

பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி ​படுகொலைச்செய்யப்பட்ட இலங்கை பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று மாலை 5 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்படும்
பாகிஸ்தான் லாகூ​​ரியிலிருந்து புறப்படும் யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் மூலமாக அவரது உடற்பாகங்கள் தாங்கிய பேழை எடுத்துவரப்படவுள்ளது.

அந்தபேழை இலங்கை அதிகாரிகளிடம் பாகிஸ்தானில் வைத்து கையளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.

»»  (மேலும்)

12/04/2021

பாகிஸ்தான் கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையர்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிரியந்த குமார தியவடன

இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற நபர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடன கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான இவர், 2010ம் ஆண்டு முதல் பாகிஸ்தானிலுள் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார் என்று பிபிசி தமிழ் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பாக முக்கியக் குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

»»  (மேலும்)

12/01/2021

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவ ஜனாதிபதி செயலணிக்கு தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் நியமனம்

 இலங்கை














இலங்கையின் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி ஜனாதிபதி செயலணியொன்று நியமிக்கப்பட்டது.

16 உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த செயலணியில், தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் இடம்பிடிக்காமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என மூவின சமூகங்களும் வாழ்ந்து வரும் நிலையில், அந்த மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு சொந்தமான தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன.

எனினும், ஜனாதிபதியினால் 16 பேரை கொண்டு நியமிக்கப்பட்ட செயலணியில், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடம்பிடிக்காமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அடையாளம் காணப்படும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை பாதுகாத்தல் மற்றும் மீள் நிர்மாணம் செய்து, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான நடைமுறைகளை பின்பற்றுதல், தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்கள் காணப்படும் நிலங்களை அளவீடு செய்து, அவற்றை சட்ட ரீதியிலான இடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்களை இந்த செயலணி செய்வுள்ளது.

இவ்வாறான எதிர்ப்புகள் வலுப்பெற்று வந்த பின்னணியில், சுமார் ஒரு வருடமும் ஐந்து மாதங்களும் கடந்த நிலையில், இந்த செயலணிக்குள் சிறுபான்மை சமூகத்தினர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த செயலணியில் ஏற்கனவே இடம்பிடித்திருந்த நில அளவையாளர் நாயகம் டப்ளியூ.எம்.எஸ்.பீ.தென்னக்கோன், அரர சேவையிலிருந்து ஓய்வுப் பெற்ற நிலையில், அந்த வெற்றிடத்தை நிரம்பும் வகையில் புதிய நில அளவையாளர் நாயகம் ஆரியரத்ன திஸாநாயக்க செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஓய்வுப் பெற்ற மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினராகவும், விரிவுரையாளர் முபிசால் அபுபக்கர் செயலணியின் முஸ்லிம் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், குறித்த செயலணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


»»  (மேலும்)

இந்திய கடற்படை தலைமை தளபதியானார் அட்மிரல் ஆர். ஹரி குமார்

இந்திய கடற்படை











இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக அட்மிரல் ஆர். ஹரி குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்திய கடற்படை தலைமை தளபதியானார் அட்மிரல் ஆர். ஹரி குமார்


41 வருடங்களாக கடற்படை சேவையில் இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவி ஓய்வு பெறுவதையொட்டி அவரிடம் இருந்து புதிய பொறுப்பை ஹரி குமார் ஏற்றுக் கொண்டார்.

தலைமைத் தளபதி பொறுப்பேற்கும் முன்பு மேற்கு கடற்படைப் பிராந்திய தளபதியாக ஹரி குமார் பணியாற்றினார்.

1962ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பிறந்த ஹரி குமார், 1983ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி இந்திய கடற்படை பணியில் சேர்ந்தார். தனது 38 வருட அனுபவத்தில் இந்திய கடலோர காவல் படையின் சி-01 கப்பல், இந்திய கடற்படைக்கு சொந்தமான நிஷாங்க், கோரா, ரன்வீர், விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட் ஆகியவற்றின் கமாண்டர் ஆக பதவி வகித்துள்ளார்.

»»  (மேலும்)