மட்/வவுணதீவு பிரதேச கல்வி வலைய அலுவலகத்துக்குள் நேற்றைய தினம் இந்து குருவானவர் ஒருவர் எதிர்கொண்ட அவரது உடை குறித்த அறிவுறுத்தல்கள் மேற்படி கேள்வியை எழுப்பத் தூண்டியது.
கோட்டைக்கல்லாறு 'அம்பாறைவில்' பிள்ளையார் ஆலயத்தில் பிரதான குருவாக கடந்த ஆண்டுகளாக சேவையாற்றிவருபவர் ரதிகர சர்மா என்னும் மதகுருவாகும். அதேவேளை இவர் மட்/அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தின் கல்விசாரா பணியாளராகவும் இருந்து
வருகின்றார். மேற்படி அவரது அரச பணி சம்பந்தமாக நேற்றயதினம் செய்வாயன்று மட்/வவுணதீவு பிரதேச கல்வி வலைய அலுவலகத்துக்குள் சென்றுள்ளார்.
அவ்வேளையில் அங்கிருந்த உயரதிகாரி ஒருவரால் 'குறித்த குருக்கள்மாருக்குரிய உடையுடன் அலுவலகங்களுக்கு வரக்கூடாது' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அதிகாரியின் இந்த நடவடிக்கையானது எவ்வளவுதூரம் சரியானது? அப்படியானால் பணியில் இருக்கும் ஏனைய மத குருமார்கள் தமது குருமாருக்குரிய ஆடைகளுடன் அரச அலுவலங்கங்களுக்குள் நுழைவதில்லையா? என்கின்ற கேள்விகளை பாதிக்கப்பட்டவர் எழுப்புகின்றார்.
கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினராகவும் மக்களிடையே பிரபலமானவராகவும் இருக்கும் தனக்கே இந்த கதியென்றால் சாதாரண இந்து குருமாருக்கு என்ன நடக்கும்? என்பது அவரது ஆதங்கமாகவுள்ளது.
0 commentaires :
Post a Comment