ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த அக்டோபர் 26ம் தேதி விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டார்.
இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதுடன், அதில் 13 உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இலங்கையில் சர்ச்சையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படும் பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இந்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன், 9 சிங்களவர்களும், 4 முஸ்லிம்களும் இந்த செயலணியில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இந்த செயலணியில் ஒரு தமிழர் கூட இடம்பிடிக்கவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வர்த்தமானி அறிவித்தலில் மூன்று தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமலிங்கம் சக்கரவர்த்த கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் இந்த செயலணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment