மைலந்தனைக்கான கிராமத்துக்கான
3 மில்லியன் பெறுமதியான குடிநீர் வழங்கும் திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்மூலம் நீண்டகாலமாக அப்பகுதி மக்களுக்காக இருந்து வந்த குடிநீர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன், கிரான் பிரதேச செயலாளர் திரு ராஜ்பாபு , மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் செயலாளரும், சட்டத்தரணியும், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான மங்களேஸ்வரி சங்கர். சமுதாய நீர் வழங்கல் மாவட்ட பொறியியலாளர் திரு பிரதீபன் போன்றோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
0 commentaires :
Post a Comment