11/09/2021

இலங்கையிலும் கனமழை: இதுவரை 6 பேர் பலி

 

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.இலங்கையிலும் கனமழை: 6 பேர் பலி

வெள்ளப் பெருக்கு மற்றும் மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, புத்தளம், காலி, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4300ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இயற்கை பேரிடர்களால் இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

0 commentaires :

Post a Comment