தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருதல் தொடர்பான சிபாரிசுகளை முன்வைப்பதற்கான கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிப் பிரதிநிதிகள் இன்று பங்கேற்றுள்ளனர்.
அவ்வேளையில் தற்போதைய விகிதாசார தேர்தல் முறையில் உள்ள பல நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு புதிதாக உருவாக்க இருக்கின்ற தேர்தல் சீர்திருத்தமானது தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறையை கொண்ட கலப்பு பொறிமுறை ஒன்று உருவாவதற்கான திட்டம், பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் 35 வீதம் உறுதிசெய்யப்படுதல், புலம்பெயர் தொழிலாளர்களதும் காவலில் உள்ளோரதும் வாக்களிக்கும் உரிமையை உத்தரவாதம் செய்தல், போன்ற முன்மொழிவுகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வமர்வில் கட்சியின் தலைவர் சிவ சந்திரகாந்தன் பா.உ, பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், உபசெயலாளர் ஜெயராஜ், கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி மங்களேஸ்வரி ஷங்கர் மற்றும் திரு செழியன் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
0 commentaires :
Post a Comment