களுவன்கேணி பிரதேச மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த இயந்திரப்படகுகளுக்கான எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் ஐஸ் உற்பத்தி நிலையம் போன்றவற்றினை நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மட்/பா.உ கெளரவ.சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து இதுபோன்ற பல ஐஸ் உற்பத்தி நிலையங்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விருத்தி செய்வது தொடர்பாக அமைச்சருடன் பா.உ.சந்திரகாந்தன் கலந்துரையாடினார்.
0 commentaires :
Post a Comment