10/01/2021

நவகிரி வீதியமைப்பு பணிகள் ஆரம்பம்

57 மில்லியன் ரூபா செலவில் அமையவுள்ள போரதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 2 கிலோமீட்டர் நீளமான நவக்கிரி நகர் பாதைக்கான ஆரம்ப பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. Peut être une image de 1 personne, position debout, plein air et arbre

 யுத்தத்தின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேச செயலகங்களுள் ஒன்றாகிய போரதீவுப்பற்று பிரதேச செயலக மக்களின் வாழ்க்கைத்தரத்தினையும், வாழ்வாதாரத்தினையும் கட்டியெழுப்பும் வகையில்  அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி பணிகளின் தொடர்ச்சியாக 2 கிலோமீட்டர் நீளமான நவகிரி நகர் வீதியினை 57 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கான ஆரம்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்ட  பிரதேசங்களில் இவ்வுட்கட்டமைப்பு வசதிகள் மூலம் விவசாயம், பண்ணை வளர்ப்பு, கைத்தொழில் போன்றவற்றை அதிகம் நம்பி வாழும் அப்பிரதேச மக்கள் தமது உற்பத்திகளை உரிய முறையில் சந்தைப்படுத்த முடியும் என்பதுடன், தமது பொருளாதார நடவடிக்கைகளையும் தங்குதடையின்றி மேற்கொள்வதுடன், பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை நடவடிக்கைகளை மாரிகாலங்களிலும் தடையின்றி மேற்கொள்ள முடியும். 

உலகநாடுகளே பொருளாதார ரீதியில் ஸ்தம்பிதம் அடைந்துள்ள இவ் இறுக்கமான சூழ்நிலையிலும் இதுபோன்ற பணிகளை கெளரவ.சந்திரகாந்தன் முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது. 

0 commentaires :

Post a Comment