ஒரு லட்ஷம் அரச நியமனம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் 124 பேருக்கான நியமனம்
ஜனாதிபதியின் சுபீட்ஷத்தின் நோக்கு வறுமை ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வருமானம் குறைந்த ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் 124 பேருக்கான பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் கோரளைப்பற்று வடக்கு வாகரை, ஏறாவூர்பற்று செங்கலடி, மண்முனை மேற்கு வவுணதீவு, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை போன்ற பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 124 பேருக்கான பயிலுனர் நியமனக் கடிதங்களை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் வழங்கி
வைத்தார்.
குறித்த வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக 48 நியமனங்களையும், இரண்டாம் கட்டமாக124 நியமனங்களுமாக இதுவரை 172 நியமனங்கள் இதுவரை சந்திரகாந்தன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment