10/30/2021

நல்லாட்சிக் காலத்தில் மட்/களுவன்கேணியில் 300 ஏக்கர் காணி ஊழல்- பா.உ சந்திரகாந்தன் காட்டம்

நல்லாட்சிக் காலத்தில் களுவன்கேணி பகுதியில் 300 ஏக்கர் காணிகள் ஏறாவூர் மற்றும் காத்தான்குடியை சேர்ந்தவர்களால் பிடிக்கப்பட்டு சிங்கப்பூர் நிறுவனத்துக்கு விற்பனை செய்த மிகப் பெரிய ஊழல் நடைபெற்றதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
அதனை அன்றிருந்த அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.Speech by Sivanesathurai Chandrakanthan, Chief Minister of Eastern Province  - Sri Lanka - YouTube
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணியில் எரிபொருள் நிலையம் மற்றும் ஐஸ் உற்பத்தி நிலையங்களுடனான மீனவர் கட்டடம் நேற்று (26) மாலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் குரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய  சந்திரகாந்தன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்  

“நல்லாட்சிக் காலத்தில் இப்பகுதியில் பெருமளவு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய காணி ஊழல் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று 300 ஏக்கருக்கும் அதிகமான காணியை காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் 50 ஏக்கர்களாக பிரித்து சிங்கப்பூர் நிறுவத்துக்கு விற்பனை செய்த மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.

“இப்பகுதியில் உள்ள ஐஸ் தொழிற்சாலை காணி மற்றும் இராணுவ முகாம் காணிகளை அடைத்து விற்பனை செய்யும் வரைக்கும் இங்கிருந்த அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். இது எங்களது காலத்தில் நடைபெறவில்லை நல்லாட்சிக் காலத்திலேயே நடைபெற்றது. அப்பகுதியில் மிகப்பெரும் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

“பாரம்பரிய கிராமங்களையும் கலாசாரங்களையும் தொழிலையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் சும்மா பேசிக்கொண்டிருக்காமல் சிந்தனை ரீதியான மாற்றத்தை கொண்டு முன்னேற வேண்டும்” என்றார். 

thamil mirror

»»  (மேலும்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்கொட்லாந் சென்றடைந்தார்.

ஊழுP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியம் நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்கொட்லாந்தின் க்லாஸ்கோ நகரைச் சென்றடைந்தார்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் அந்நாட்டு நேரப்படி இன்று (30) பிற்பகல் 12.40 மணிக்கு கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அம்மையார் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார்.

காலநிலை மாற்றம் மற்றும் அதற்கு முகங்கொடுத்து செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நாளை (31) தொடக்கம் நவம்பர் 12 வரை க்லாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது.
நவம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகள் உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

“காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்” என்று நடைபெறுகின்ற இம்மாநாட்டில் 197 நாடுகளின் அரச தலைவர்கள் அரச பிரதிநிதிகள் புத்திஜீவிகள் வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் இருபத்தையாயிரம் பேர் கலந்துகொள்ளவுள்ளனர். 

ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற மாநாடுகளில் இதுவே மிகப் பெரிய மாநாடாகக் கருதப்படுகிறது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சூரியசக்தி காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
»»  (மேலும்)

10/28/2021

22,000 கி.மீ நில எல்லையைப் பாதுகாக்க சீனா புதிய சட்டம்

14 நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் தனது 22,000 கி.மீ நீளம் கொண்ட நில எல்லையில் பாதுகாப்பை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை விவரிக்கும் தனது முதல் தேசிய அளவிலான சட்டத்துக்கு சீனாவின் நாடாளுமன்றமாகச் செயல்படும் தேசிய மக்கள் மன்றத்தின் (NPC) நிலைக்குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. எல்லை

"எல்லையில் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தவும், வலுப்படுத்தவும், உறுதிப்படுத்தவும்" வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நில எல்லைச் சட்டம் வரும் ஜனவரி 1-ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது.

எல்லைப் பாதுகாப்பு மற்றும் அண்டை நாடுகளுடனான தகராறுகளை நிர்வகிக்கும் சீன ராணுவத்தின் பணியை இந்தச் சட்டம் முறைப்படுத்துகிறது. இதற்காக சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டுபவர்களுகளைத் தடுப்பது, காவல் கருவிகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்த ராணுவத்துக்கு அனுமதி வழங்குகிறது.

எல்லை கடந்திருக்கும் ஆறுகள் மற்றும் ஏரிகளைப் பாதுகாப்பதற்கும், நீர் வளங்களை உத்திசார்ந்து பயன்படுத்துவதற்கும் தேசிய அரசுக்கு கடமை இருப்பதாகவும் அது கூறுகிறது.

»»  (மேலும்)

களுவன்கேணியில் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் ஐஸ் உற்பத்தி நிலையங்கள் திறந்துவைப்பு.

இயந்திரப்படகுகளுக்கான  எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் ஐஸ் உற்பத்தி நிலையங்கள் திறந்துவைப்பு.New Cabinet: Douglas Devananda appointed Minister of Fisheries - Ceylon  Today
களுவன்கேணி பிரதேச மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த இயந்திரப்படகுகளுக்கான  எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் ஐஸ் உற்பத்தி நிலையம் போன்றவற்றினை நேற்றைய தினம்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மட்/பா.உ கெளரவ.சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து இதுபோன்ற பல ஐஸ் உற்பத்தி நிலையங்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விருத்தி செய்வது தொடர்பாக அமைச்சருடன் பா.உ.சந்திரகாந்தன் கலந்துரையாடினார்.
»»  (மேலும்)

124 பேருக்கான நியமனம் பா.உ சந்திரகாந்தன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

Peut être une image de 1 personne et vêtements d’extérieurஒரு லட்ஷம் அரச நியமனம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் 124 பேருக்கான நியமனம்
ஜனாதிபதியின் சுபீட்ஷத்தின் நோக்கு வறுமை ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வரும்  வருமானம் குறைந்த ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் 124 பேருக்கான பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில்  கோரளைப்பற்று வடக்கு வாகரை, ஏறாவூர்பற்று செங்கலடி, மண்முனை மேற்கு வவுணதீவு, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை போன்ற பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 124 பேருக்கான பயிலுனர் நியமனக் கடிதங்களை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் வழங்கி வைத்தார்.
குறித்த வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக 48 நியமனங்களையும், இரண்டாம் கட்டமாக124 நியமனங்களுமாக இதுவரை 172 நியமனங்கள் இதுவரை சந்திரகாந்தன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

10/12/2021

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: திமுக, அதிமுக வெற்றி நிலவரம்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகிவருகின்றன. Tamil Nadu District Map - Infoandopinion

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் திமுக 23 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வென்றுள்ளன. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்தில் வென்றுள்ளன.

மாவட்ட ஊராட்சி வார்டுகளில் மூன்றை திமுக கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

»»  (மேலும்)

10/11/2021

நூல் வெளியீடு

'பாராளுமன்றத்தில் திலகர்' - தொகுதி 1
2015 ஆம் ஆண்டு ஆற்றிய 11 உரைகளின் தொகுப்பு பி.ஏ.காதர் அவர்களின் முன்னுரையுடன் வெளிவருகிறது
களம் : ZOOM இணையச் செயலி
காலம் : 16-10-2021
நேரம் : மாலை 7 மணி - இலங்கை
பங்கு கொள்ள ஆர்வம் உள்ள நண்பர்கள் நேரத்தைத் திட்டமிட்டுக்கொள்ள வசதியாக இந்த முன்கூட்டிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Peut être une image de 1 personne et texte qui dit ’களம் zoom மாலை 7:00 மணிக்கு 2021 அக்டோபர் பாராளுமன்றத்தில் 16 திலகர் தொகுதி தலைமை: மு. சிவலிங்கம் உரைகள்: à®…®. யோதிலிங்கம் (யாழ்ப்பாணம்) மின் புத்தக எம். ஆர். ஸ்டாலின் ஞானம் (பிரான்ஸ்) ஏ.பி.எம்.இத்ரிஸ் (மட்டக்களப்பு) வெளியீட்டு அரங்கம் தமிழகன் (இந்தியா) பாரா ராளுமன்றத்தில் திலகர் T ARI உரைகள் 2015 ஏற்புரை: மல்லியப்புசந்தி திலகர் நிகழ்ச்சி நெறிப்படுத்தல்: அசுரா பாகயா பதிப்பகம்’

»»  (மேலும்)

10/07/2021

லட்சத்தீவில் கைதான கடத்தல் கும்பலுக்கும் சீமானுக்கும் தொடர்பா? - என்.ஐ.ஏ விசாரணை

என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். `சற்குணன் மூலமாக சீமானுக்கு பெரும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன,' என்கிறார் கே.எஸ்.அழகிரி.

லட்சத்தீவின் மினிக்காய் (Minicoy) கடற்கரையில் கடந்த மார்ச் மாதம் ஏ.கே 47 துப்பாக்கிகள், 1000 கிலோ தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக நடந்த விசாரணையின் முடிவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். அந்த 6 பேர் அளித்த தகவலின்பேரில் இலங்கையை சேர்ந்த சற்குணன் என்கிற சபேசன் குறித்து தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள்களையும் ஆயுதங்களையும் கடத்தி விடுதலைப் புலிகள் அமைப்பை புதுப்பிக்கும் வேலைகளில் சற்குணன் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை, வளசரவாக்கத்தில் தங்கியிருந்த சற்குணனின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு  சட்னிக் கதை ! | வினவு

இது தொடர்பாக, கடந்த 6ஆம் தேதி என்.ஐ.ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ` அக்டோபர் 5 ஆம் தேதியன்று புலிகளின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் சற்குணன் என்கிற சபேசன் கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார். அதன்மூலம் கிடைத்த பணத்தை புலிகள் அமைப்பின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் புலிகள் அனுதாபிகளோடு அவர் சதிக் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

»»  (மேலும்)

10/01/2021

நவகிரி வீதியமைப்பு பணிகள் ஆரம்பம்

57 மில்லியன் ரூபா செலவில் அமையவுள்ள போரதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 2 கிலோமீட்டர் நீளமான நவக்கிரி நகர் பாதைக்கான ஆரம்ப பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. Peut être une image de 1 personne, position debout, plein air et arbre

 யுத்தத்தின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேச செயலகங்களுள் ஒன்றாகிய போரதீவுப்பற்று பிரதேச செயலக மக்களின் வாழ்க்கைத்தரத்தினையும், வாழ்வாதாரத்தினையும் கட்டியெழுப்பும் வகையில்  அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி பணிகளின் தொடர்ச்சியாக 2 கிலோமீட்டர் நீளமான நவகிரி நகர் வீதியினை 57 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கான ஆரம்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்ட  பிரதேசங்களில் இவ்வுட்கட்டமைப்பு வசதிகள் மூலம் விவசாயம், பண்ணை வளர்ப்பு, கைத்தொழில் போன்றவற்றை அதிகம் நம்பி வாழும் அப்பிரதேச மக்கள் தமது உற்பத்திகளை உரிய முறையில் சந்தைப்படுத்த முடியும் என்பதுடன், தமது பொருளாதார நடவடிக்கைகளையும் தங்குதடையின்றி மேற்கொள்வதுடன், பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை நடவடிக்கைகளை மாரிகாலங்களிலும் தடையின்றி மேற்கொள்ள முடியும். 

உலகநாடுகளே பொருளாதார ரீதியில் ஸ்தம்பிதம் அடைந்துள்ள இவ் இறுக்கமான சூழ்நிலையிலும் இதுபோன்ற பணிகளை கெளரவ.சந்திரகாந்தன் முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது. 

»»  (மேலும்)