9/27/2021

தாலிபன்களின் எச்சரிக்கை

சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச் சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.தாலிபன்கள் 2001இல் ஆட்சியை இழந்தபின் முடிதிருத்தும் நிலையங்கள் ஆப்கனில் பிரபலமாகின

முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தாலிபன் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது.

இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தலைநகர் காபூலில் உள்ள முடிதிருத்தும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறிய பின்னர் ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றினர்.

அப்பொழுது தாலிபன்கள் முன்பு ஆட்சி செய்த 1996 - 2001 காலகட்டத்தில் இருந்ததைப் போலல்லாமல் தற்போதைய ஆட்சி மிதமானதாக இருக்கும் என்றும் தாலிபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

சனிக்கிழமையன்று ஹெராத் மாகாணத்தில் ஆள் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் பொது வெளிகளில் தொங்கவிடப்பட்டிருந்தன.

0 commentaires :

Post a Comment