மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அது பற்றிய ஒரு விரிவான ரிப்போர்ட் இது.
மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அந்தத் தேர்வித் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
இந்தக் குழுவில் சமூக சமத்துவதற்கான மருத்துவர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், முன்னாள் துணை வேந்தர் எல். ஜவஹர் நேசன், மருத்துவத் துறைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட 9 பேர் இடம்பெற்றிருந்தனர்.
நீட் தேர்வானது சமூக, பொருளாதார, கூட்டாட்சி அரசியலை எவ்விதத்தில் பாதித்திருக்கிறது, அரசுப் பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற, நகர்ப்புற ஏழைகளை இந்தச் சேர்க்கைமுறை எவ்விதத்தில் பாதித்திருக்கிறது என்பதை ஆராய்வது, அப்படித் தடைகள் இருந்தால் அந்தத் தடைகளை நீக்குவதற்கான வழிகளைப் பரிந்துரைப்பது, மாணவர்களைத் தேர்வுசெய்ய நீட் தேர்வு சமத்துவமான வழிதானா என்பதை ஆராய்வது, காளான்களைப் போல முளைத்து வரும் நீட் பயிற்சி மையங்கள் தமிழகக் கல்வி முறையின் மீது ஏற்படும் தாக்கத்தை ஆராய்வது போன்றவை இந்தக் குழுவின் பணிகளாக வரையறுக்கப்பட்டிருந்தன.
0 commentaires :
Post a Comment