நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் குறித்த நபர் காத்தான்குடி - 01 ஐ சேர்ந்த ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டவர் எனவும் இவரே குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர்இ தனது 7 வயதில் வெளிநாடு சென்று பின்னர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளார்.
இவர் கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 சகோதரங்களை கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக பிறந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இவருடைய ஒரு பெண் சகோதரியும் தந்தையாரும் கனடாவில் வசிக்கும் நிலையில்இ ஏனைய இரண்டு சகோதரர்களும் கட்டார், சவுதியில் வசிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 commentaires :
Post a Comment