9/27/2021

தாலிபன்களின் எச்சரிக்கை

சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச் சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.தாலிபன்கள் 2001இல் ஆட்சியை இழந்தபின் முடிதிருத்தும் நிலையங்கள் ஆப்கனில் பிரபலமாகின

முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தாலிபன் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது.

இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தலைநகர் காபூலில் உள்ள முடிதிருத்தும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறிய பின்னர் ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றினர்.

அப்பொழுது தாலிபன்கள் முன்பு ஆட்சி செய்த 1996 - 2001 காலகட்டத்தில் இருந்ததைப் போலல்லாமல் தற்போதைய ஆட்சி மிதமானதாக இருக்கும் என்றும் தாலிபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

சனிக்கிழமையன்று ஹெராத் மாகாணத்தில் ஆள் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் பொது வெளிகளில் தொங்கவிடப்பட்டிருந்தன.

»»  (மேலும்)

9/23/2021

யாழ்ப்பாணத்தில் தலித் மக்களின் வாழ்விடங்கள் மீது சாதிய அட்டகாசம்

டானியலும் சண்முகதாசனும் தேவை 
————————————————



DALIT ATTACK: Two arrested for attack on Dalit teen



வட்டுக்கோட்டைப் பகுதியில் நடந்த உயர்சாதியினரான வெள்ளாள இனத்தின் அடாவடித்தனங்கள் தொடர்பான வீடியோ ஒன்றைப் பார்த்தேன்.

தமிழ்பேசும் வெள்ளாள இனத்தவர்கள் சிங்கள பொலிசார் ஆதரவோடு மோட்டார் சைக்கிள்களில் வந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள்மேல் தாக்குதல் நடாத்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.
இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டபோதும் பொலிசார் உயர்சாதியினரின் அழுத்தம் காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்படி வேறு சம்பவங்கள் நடந்தால் அரசாங்கம் நடாத்தும் ஆவா குழு என ஊளையிடும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இப்படியான அடாவடித்தனங்களைக் கண்டுகொள்வதில்லை.

இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் படுகொலை சிங்களக் குடியேற்றம் என ஊளையிடுபவர்கள் இவற்றை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் போன டக்ளஸ் தேவானந்தாகூட கண்டு கொள்வது இல்லை.

எனது சகோதரர் கூட  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினராக இருக்கிறார். இப்படி கூட்டமைப்புக்கு வாக்குகள் சேகரிக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் பலர் இருந்தும் சமூகம் தொடர்பாக அக்கறையற்றவர்ளாகவே இருக்கிறார்கள்.

சாதியை வைத்தே வாக்குகளைச் சேர்த்து கூட்டமைப்பையோ டக்ளசையோ வெல்ல வைக்கும் இவர்கள் சமூகத்தின் துன்பங்களைக் கண்டுகொள்வது இல்லை.

டானியலும் சண்முகதாசனும் இல்லாத குறையை உணரமுடிகிறது. அவர்களின் தேவை எவ்வளவு அவசியமானது என்பதை உணரமுடிகிறது.

மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்கள் சிங்கள அரசாங்க உதவியோடு ஆயுதம் ஏந்திப் போராடவேண்டும்.
ஆயுதங்கள் மூலம் சாதியை ஒழிக்க முடியாது.
சாதிவெறிபிடித்த இந்துக்களை சைவர்களை அடக்கமுடியும்.
இல்லையேல் தமிழ் தேசியத்தில் இருந்து விடுபட்டு இஸ்லாமியர்களாக அல்லது பௌத்த சிங்களவர்களாக மாறவேண்டும்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் காப்பாற்றியது இலங்கை அரசாங்கத்தின் தவறு.
அரசாங்கம் இறுதித் தாக்குதலை குடாநாட்டுக்குள் நடாத்தியிருந்தால் இனப்பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும்.

Via
Vijaya Baskaran
»»  (மேலும்)

9/21/2021

ஆப்கானில் அதிகார மோதல் உச்சகட்டம் :தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை?

ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதில் இருந்து, அவர்களுக்குள் மோதல் அதிகரித்துள்ளது. தற்கால அமைச்சரவை பட்டியல் வெளியான நிலையில், இன்னும் புதிய அரசு அமைக்கப்படாமல் குழப்பமான சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில், தலிபான் சுப்ரீம் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா கொல்லப்பட்டதாகவும், துணை பிரதமர் முல்லா பரதர் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.

இதுதொடர்பாக வெளியான செய்தியில், ‘தலிபான் தீவிரவாதிகளின் இரு பிரிவுகளுக்கிடையே அதிகார போட்டி வலுத்துள்ளது. தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா சுட்டுக் கொல்லப்பட்டார். ஹக்கானி பிரிவுடனான சண்டையில் முல்லா பரதர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார். தலிபான் அமைச்சரவையில் தலிபான் அல்லாத மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவருக்கு பதவி கொடுக்க வேண்டும்; அப்ேபாது தான் உலகின் பிற நாடுகள் தலிபான் அரசை அங்கீகரிக்கும் என்று வலியுறுத்தி வந்தார். இவரது கருத்து எடுபடாததால், அவரை சில நாட்களாக காணவில்லை.

பின்னர், கந்தகாரில் தான் இருப்பதாக கூறினார். இதுதொடர்பாக வீடியோவையும் வெளியிட்டார். ஆனால், இவர் பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹக்கானிக்கு பிரிவுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. தலிபான் அரசில் ஹக்கானிஆதிக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது’ என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

நீட் தரப்படுத்தல் -ஆராய்வு அறிக்கை வெளியானது

மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அது பற்றிய ஒரு விரிவான ரிப்போர்ட் இது. முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை அளித்த நீதிபதி ஏ.கே. ராஜன் மற்றும் குழுவினர்.

மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அந்தத் தேர்வித் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

இந்தக் குழுவில் சமூக சமத்துவதற்கான மருத்துவர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், முன்னாள் துணை வேந்தர் எல். ஜவஹர் நேசன், மருத்துவத் துறைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட 9 பேர் இடம்பெற்றிருந்தனர்.

நீட் தேர்வானது சமூக, பொருளாதார, கூட்டாட்சி அரசியலை எவ்விதத்தில் பாதித்திருக்கிறது, அரசுப் பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற, நகர்ப்புற ஏழைகளை இந்தச் சேர்க்கைமுறை எவ்விதத்தில் பாதித்திருக்கிறது என்பதை ஆராய்வது, அப்படித் தடைகள் இருந்தால் அந்தத் தடைகளை நீக்குவதற்கான வழிகளைப் பரிந்துரைப்பது, மாணவர்களைத் தேர்வுசெய்ய நீட் தேர்வு சமத்துவமான வழிதானா என்பதை ஆராய்வது, காளான்களைப் போல முளைத்து வரும் நீட் பயிற்சி மையங்கள் தமிழகக் கல்வி முறையின் மீது ஏற்படும் தாக்கத்தை ஆராய்வது போன்றவை இந்தக் குழுவின் பணிகளாக வரையறுக்கப்பட்டிருந்தன.

»»  (மேலும்)

9/20/2021

சிறையில் உள்ள இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு' - கோட்டாபய ராஜபக்ஷ உறுதி

இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்ட செயற்பாடுகள் முடிவடைந்ததன் பின்னர், அவர்களை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க தாம் தயங்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, ஐநா தலைமையகத்தில், பொதுச் செயலாளரை நேற்றைய தினம் (செப்டம்பர் 19) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். Colombo, Sri Lanka. 7 mai 2020. Les prisonniers quittent la prison de  Welikada à Colombo, Sri Lanka, le 7 mai 2020. Plus de 250 prisonniers ont  été libérés jeudi grâce à une

இந்த சந்திப்பின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.

»»  (மேலும்)

9/16/2021

சமூக நீதிப் போராளி நந்தினி சேவியர் மறைந்தார்






எமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நந்தினி சேவையர் ஐயா அவர்கள் காலமான செய்தி எம்மை துயரத்தில் மூழ்க வைத்துள்ளது.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு வெகுஜென அமைப்பின் ஊடாகவும், படைப்பிலக்கிய ஆளுமை வீச்சுடனும் நந்தினி சேவையர் ஐயா நீங்கள் மேற்கொண்ட பணிகள் எமக்கு இன்றும் நினைவில் தேங்கிக்கிடக்கிறது. உங்கள் ஞாபகங்கள் ‘நெல்லிமரப் பள்ளிக்கூடத்தோடு’ தொலைந்து போகவில்லை. உங்கள் சமூகப்போராட்ட நினைவுகளும், ஞாபகங்களுமே உங்கள் மறைவிலும் எங்களை முன்னோக்கி நகர்த்திச் செல்ல தூண்டுதலாக என்றும் நிலைத்திருக்கப் போகிறது.

“கடுகரென்ற நோஞ்சான் கிணத்துக்கட்டில ஏறி துலாக்கயித்தைப் பிடிச்சிட்டான் என்றதை அறிந்த பஞசாச்சர வாத்தியார் பிரம்பு தும்பு தும்பாக முறியும் வரை அடித்தானே” அன்று! அப்போ உங்களுக்கு வந்த கோபம்தானே ஐயா ‘நெல்மலிமரப் பள்ளிக்கூடம்’.

அந்த உங்கள் கோபத்தின் விதைகளை எங்களுக்குள்ளும் நீங்கள் விதைத்து வேர்கொள்ள வைத்தே உங்கள் வாழ்வின் பயணத்தை நிறுத்தி விட்டீர்கள்.

எமது சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிய ஒடுக்குமுறைப் போராட்டத்தையும், தீ மூண்ட நாட்களையும் காண்பதற்கான இரண்டு கண்கள் சிறுபான்மைத் தமிழர் மகாசபையையும், சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜென அமைப்பும். நீங்கள் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜென அமைப்புடன் மிகத் தீவிரமாக செயல்பட்டவர். அந்தவகையில் அவ்விரண்டு அமைப்புக்களையும் நினைவில் ஏந்தி நின்று உங்களை வழி அனுப்பி வைக்கின்றோம்.

உங்கள் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 இலங்கை தலித்சமூக மேம்பாட்டு முன்னணி


»»  (மேலும்)

9/04/2021

நியூசிலாந்து தாக்குல் பயங்கரவாதி காத்தான்குடியைச் சேர்ந்த ஆபில் சம்சுதீன்?

நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் குறித்த நபர் காத்தான்குடி - 01 ஐ சேர்ந்த ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டவர் எனவும் இவரே குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர்இ தனது 7 வயதில் வெளிநாடு சென்று பின்னர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளார்.
இவர் கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 சகோதரங்களை கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக பிறந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இவருடைய ஒரு பெண் சகோதரியும் தந்தையாரும் கனடாவில் வசிக்கும் நிலையில்இ ஏனைய இரண்டு சகோதரர்களும் கட்டார், சவுதியில்  வசிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 





»»  (மேலும்)