7/06/2021

சுவிஸ் விசாவுக்காக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து பிரசாந்தன் விடுதலையானார்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளர் பிரசாந்தன் ஆரையம்பதி நடைபெற்ற இரட்டைக் கொலை சம்மந்தமாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதன் பெயரில் கைது செய்யப்பட்டு  ஒரு வருடத்துக்கு மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் பிணையில் வெளிவந்த இவர் சாட்சிகளை அச்சுறுத்தினார் என்கின்ற போலி குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் கைதாகி இருந்தார்.

சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் மேல்முறையீட்டின் மூலம் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment