84 வயதாகும் மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி, விசாரணைக்கு முந்தைய நீடித்த தடுப்புக்காவலின்போது இறந்துள்ள செய்தி, வேதனை தருவதாகக் கூறியிருக்கிறது ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு. கொரோனா காலத்தில் போதுமான சட்ட அடிப்படை இல்லாவிட்டாலும் கூட காவலில் உள்ளவர்களை அரசுகள் விடுவிக்க வேண்டியது அவசியம் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு போலவே மனித உரிமைகளை வலியுறுத்தும் பலரும் ஸ்டேன் சுவாமியின் மறைவுக்கு தங்களுடைய கனத்த மனதுடன் கூடிய இரங்கலை பகிர்ந்து வருகிறார்கள். அவர் வாழ்ந்த ஜார்கண்ட் மாநிலத்தில் அவரைச் சுற்றி வலம் வந்த பல செயல்பாட்டாளர்களும் தங்களுடைய உணர்வுகளை பிபிசிக்காக ராஞ்சியில் இருந்து செய்திகளை வழங்கும் ரவி பிரகாஷிடம் பகிர்ந்து கொண்டனர்.
"பாதிரியார் ஸ்டேன் சுவாமி பழங்குடியினரின் உரிமைகளுக்கான உரத்த குரலாக இருந்தார், அவர் மக்களின் கோபத்திற்கு குரல் வடிவும் கொடுத்தார். சமூகத்தில் எங்கு மக்கள் துன்புறுத்தப்பட்டாலும் அங்கு அவரது குரல் ஓங்கி ஒலித்தது. அவர் ஒருபோதும் யாருக்கும் பயப்படவில்லை. அவர் இருந்தவரை, அவரது குரல் ஒருபோதும் தடுமாறவில்லை. வரவிருக்கும் காலங்களில் மக்கள் அவரை அப்படித்தான் நினைவில் கொள்வார்கள். அவர் விட்டுச்சென்றுள்ள வெற்றிடத்தை யாராலும் ஒருபோதும் நிரப்ப முடியாது."என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment