ஜெர்மனி நாட்டின் பழைமை வாய்ந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று கொலோன் பல்கலைக் கழகம். அப்பல்கலைக் கழகத்தில் கடந்த 58 ஆண்டுகளுக்கு மேலாக பல காலமாக இயங்கிவந்த தமிழ்த்துறை வரும் செப்டம்பரில் மூடப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.
2014 முதல் தமிழ்த்துறைப் பேராசிரியராக பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்கோலஸ் அம்மையார் அதனை 2020 ஆம் ஆண்டுவரை மிகவும் சிறப்பாக நடத்திக்காட்டியவர். பல வெளிநாட்டு ஆய்வாளர்களைக் கொண்டு தமிழ்நாட்டின் திராவிடர் இயக்கம்பற்றியெல்லாம் ஆய்வுகளையும், சொற்பொழிவுப் பாடங்களையும் நடத்தியவர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கட்கு அறிமுகமானவர்.
கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் பங்கேற்றவர். பன்முகத்தன்மையாளர்.
இவருடன் உதவிப் பேராசிரியர் ஸ்வென் வொர்ட்மான் மற்றும் சிலரும் இணைந்து சிறப்பாக அத்துறையை, தமிழ் கற்று நடத்தி வந்தனர்.
நிதிப்பற்றாக்குறையால் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க பாதித் தொகையான ஒரு கோடியே 24 லட்சத்தை தமிழ்நாடு அரசு அளிப்பதாக 2019 இல் கூறியது. இதை அங்கிருந்த தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரும் உறுதி செய்தனர்.
பிறகு, கரோனாவினால் தமிழ்நாடு அரசு அதை வழங்காமல் இருந்து வந்தது.
எனவே, பேராசிரியர் ஸ்வென் வொர்ட்மானைப் பணி நீக்கம் செய்து, தமிழ்ப் பிரிவை மூட கொலோன் பல்கலைக் கழகம் முடிவு செய்தது. இதைத் தடுக்க ஜெர்மனியின் 8 நகரத் தமிழர்கள், 'ஐரோப்பியத் தமிழர்கள் கூட்டமைப்பு' என்னும் அமைப்பைத் தொடங்கி, உலகத் தமிழர்களிடமிருந்து 25 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலிக்க முடிந்தது.
எதிர்க்கட்சித் தலைவராக அன்று இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை கொலோன் பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப் பரிந்துரையும் செய்தார்.
0 commentaires :
Post a Comment