மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வியாளேந்திரனின் மெய்ப்பாதுகாவலரில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் மட்டக்களப்பில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் நேரடி குற்றவாளியான வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர்களின் ஒருவரான பேரின்பராஜா லிங்கேஸ்வரன் என்பவருக்கே மேற்படி கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொலைக்குற்றச்சாட்டின் பெயரில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அங்கு இடம்பெற்ற அண்டிஜன் பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது.
இன்றுகாலை சிறைச்சாலையில் உள்ள 122 கைதிகளுக்கு எடுக்கப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனையில் 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதைத்தொடர்ந்து தோற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் மடடக்களப்பில் இருந்து இயக்கச்சியிலுள்ள கொரோனா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தெரியவருகின்றது.
0 commentaires :
Post a Comment