7/19/2021

சட்டவிரோத கருக்கலைப்பு தொடரும் சோகம்

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   மோரா தோட்ட மேற்பிரிவிலுள்ள வீடொன்றில் நான்கு பிள்ளைகளின் தாயொருவர் (வயது 36) திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த திங்கட்கிழமை (12) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தகவலறிந்து அவ்வீட்டுக்குச் சென்ற பொலிஸார் வீட்டிலிருந்த இரத்தகறைபடிந்த ஆடைகள் சிலவற்றை மீட்டனர். அத்துடன் ஆடையொன்றால் சுற்றப்பட்டிருந்த சுமார் 7 மாதங்கள் மட்டுமே மதிக்கத்தக்க பெண் சிசுவொன்றின் சடலத்தையும் மீட்டனர். பால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில்  அரசியல் விடுதலை கிடைத்துவிடப் போவதில்லை- நிலவன். | Uyirpu

வீட்டுக்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான கருக்கலைப்புக் காரணமாகவே இவ்விரு உயிரிழப்புகளும் இடம்பெற்றிருப்பதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மரணமடைந்த பெண்ணுடன் அடிக்கடி தொடர்பைப் பேணிவந்த 35 வயதான பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர். 

தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகளும் இடம்பெற்றன. பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம்இ டிக்கோயா-கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதன்பின்னர் இந்தச் சம்பவம் குறித்த பின்னணியை யாரும் தேடியதாக இல்லை. இலங்கையில் நாளொன்றுக்கு 600 -1000 வரையிலான சட்டவிரோத கருக்கலைப்பு இடம் பெறுவதாகக் கூறப்படுகின்றது. இது தாய்மாருக்கு பெரும் ஆபத்தாகவும் அமைகின்றது.

0 commentaires :

Post a Comment