7/26/2021

வரண்டுபோன அரபின் வசந்தம்- துனீசியாவில் பிரதமர் பதவிநீக்கம்

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் வட  ஆபிரிக்க-மத்திய கிழக்கு  நாடுகளில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. நீண்டகால ஆட்சியாளர்களை தூக்கிவீசி புதிய தலைமைகள் உருவாகின. இந்த மாற்றங்களுக்கு "அரபின் வசந்தம்" என்று அரசியல் வானில் பெயரிடப்பட்டது. குடும்ப,மற்றும் சர்வாதிகார ஆட்சிகளை  மாற்றியமைத்து புதிய தலைமைகளை உருவாக்குவதே சிறந்தது என்றும், அதுவே  ஜனநாயகம்,மக்களாட்சி என்றெல்லாம் பாரிய நம்பிக்கைகள் விதைக்கப்பட்டன. லிபியாவில்  கடாபி போன்ற தேசிய தலைமைகள் மக்களின் பெயரால் ஆயுதக்குழுக்களால் கொன்றொழிக்கப்பட்டன.தூனிசியா - Wikiwand

ஆனால் அனைத்து எதிர்பார்ப்புக்கு மாறாக இந்த மாற்றங்கள் இன்று தோல்வியில் முடிவடைந்துள்ளன. ஜனநாயகம் என்னும் பெயரில் இந்த நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மை  தொடருகின்றது.  

துனீசியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், பிரதமரைப் பதவி நீக்கம் செய்த அதிபர் நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

பொருளாதாரம் மற்றும் சமூக கொந்தளிப்பு காரணமாக நாட்டில் ஏற்கனவே அமைதியின்மை நிலவி வந்த நிலையில், கோவிட் தொற்றை அரசு சரியாகக் கையாளவில்லை என்ற மக்களின் கோபம் போராட்டத்திற்கு வழிவகுத்தது.

2019ல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் கைஸ் சையத், இனி ஆட்சியை தான் கவனித்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

அவரது ஆதரவாளர்கள் இதைக் கொண்டாடினாலும், அதிபர் கைஸ் சையத் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.அரபு பிராந்தியம் முழுக்க நடந்த அரபு வசந்த போராட்டத்திற்கு, 2011-ம் துனீசியாவில் தொடங்கிய புரட்சியே காரணம் என அடிக்கடி கூறப்படுவதுண்டு. ஆனால், இது அந்த நாட்டில் பொருளாதார ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கவில்லை.

இது நாடுகளின் தோல்வியல்ல. ஐரோப்பிய அரசியல் வழிமுறைகளை உலகின் எந்த மூலை முடுக்குகளுக்கும் பொருத்தலாம் என்கின்ற சிந்தனை முறையின் தோல்வியேயாகும். 

»»  (மேலும்)

7/24/2021

மட்டுநகர் முதல்வரின் அநாகரீகம்- ஆணையாளர் குற்றச்சாட்டு

அரசியல் அநாகரிகங்கள் - 1 Thiyagarajah Saravanabavan (@thiyagarajahsa3) | Twitter
கடந்த 20.07.2021 அன்று மாநகர சபையில் இடம்பெற்ற சம்பவமொன்றின் பிரதிபலனாக என் இதயத்தில் அடிக்கப்பட்ட ஆணிகளைக் கழற்றி
உங்கள் சிந்தனைகளுக்குள் ஆழமாக புதைத்து வைக்க முயலுகின்றேன்.
இது என் வலிகளை உங்களுக்குள் இடமாற்றும் முயற்சியல்ல …
என் காயங்களை ஆற்ற……
உங்களுக்குள் என்னை இடமாற்றும் முயற்சி.
நான் என்றும் என் கதிரைக்கு முக்கியம் தந்ததில்லை.
கடமைக்கு மட்டுமே முக்கியம் தருகின்றேன்,
அதனால் எந்தக் கதிரையைக் கண்டும் நான் பயந்ததில்லை.
சுயகௌரவத்தை இழந்ததுமில்லை.
20.07.2021 அன்று பிற்பகல் ஒருமணி இருக்கும்…
அது நடந்தது.
எனது பிரதி ஆணையாளர் திரு. சிவராசா முன்னிலையில் , அலுவலக உதவியாளர் முன்னிலையில் எனது சுயமரியாதை சோரம் போனது.
“ பு * * மகனே “ - என என்னைப்பார்த்து சீறியது வேறு யாருமல்ல..
மட்டக்களப்பு வாழ் மக்கள் தமது நகரின் பிதாவாக மதிக்கக் கூடிய தகுதி பெற்ற அந்த முதல்வரேதான்.
நான் கடமை ஏற்று 6 மாதங்கள் கடந்துள்ளன,
நேரம் தவறி அலுவலகம் சென்றதில்லை…
விடுமுறை எடுத்ததில்லை….
சனி, ஞாயிறு , பொது விடுமுறை தினங்கள் கூட கடமையை மறந்ததில்லை.
ஆனாலும் அந்தக் கேவலமான வார்த்தை, கொதிநீராக என்மீது வீசப்பட்டது.
எதற்காக … ? ?
இன்னொரு அதிகாரியின் சுயமரியாதை பறிபோவதைக் கண்டு இரங்கியதற்காக …. . . .
ஒரு பெண் என்றும் பாராமல் , அவரது அறைக்குள் அத்துமீறி நுழைந்து …..
அந்த அதிகாரியை அழவைத்து கேவலப்படுத்தியதை தடுக்க முயன்றதற்காக…
அருவருக்கத்தக்க அந்த வார்த்தை முதல்வரது வாயிலிருந்து ….. தவறு உள்ளத்திலிருந்து என் மீது வீசப்பட்டது.
அவர் அந்த கேவலமான வார்த்தையை அழுத்தமாக … என் முகத்தைப் பார்த்துக் கூறினார்….
கல்வி அறிவற்ற ஒரு பாமரன் கூறத் தயங்கும் அருவருக்கத் தக்க வார்த்தை அது …
நகரபிதா உள்ளத்திலிருந்து ஈட்டியாகப் பாய்கிறது.
ஒரு மனிதனின் அரசியல் பலம்
இன்னொரு மனிதனின் சுயமரியாதையை
சுரண்டிச் சுரண்டி ரணமாக்குவதற்காகவா வழங்கப்பட்டது ?
ஒரு சபையினை வழிநடத்தும் தகுதியுடைய….
மட்டக்களப்பு நகரின் வழிகாட்டியாக..
ஒருவரின் உள்ளத்திலிருந்து…
“ பு …….. மகனே “
என்ற வார்த்தை …
அதுவும் அலுவலகத்தில்…
பலர் முன்னிலையில் !
வாழ்க சனநாயகம்.
மாற்று இனத்தவரிடம் சுயமரியாதையை இழக்கக் கூடாதென “ சுய மரியாதை இயக்கங்கள்“  
உருவாகின. இன்று அவர்களிடமிருந்து நமது சுயமரியாதையைக் காப்பாற்ற யாரிம் செல்வது ? நன்றி *முகநூல் மாநகர ஆணையாளர் திரு.தயாபரன்
»»  (மேலும்)

7/23/2021

ரிஷாட்டின் வீட்டின் முன்னாள் பணிப்பெண்ணும் வன்புணர்வு

பணிப்பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (23) தெரிவித்தார்.ENEWSTAG

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த மற்றுமொரு பெண் ஒருவரே இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 20 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் குறித்த சிறுமிக்கு முன்னதாக அங்கு இரண்டு பெண்கள் பணிபுரிந்துள்ளதாகக் கூறினார்.
அவர்கள் இருவரையும் தரகரான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா பண்டாரம் என்பவர் அழைத்து வந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அந்த பணிப்பெண்களில் ஒருவரின் தற்போதைய வயது 22 என்றும் மற்றையவரின் வயது 30 என்றும் குறிப்பிட்டார்.
டயகம பகுதியில் வசிக்கும் 22 வயது யுவதி  2015 - 2019 காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்துள்ளார்.
அதன்போது நபர் ஒருவரால் இரண்டு முறை பாலியன் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாக யுவதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான விசாரணையில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனான மதவாச்சி பகுதியை சேர்ந்த 44 வயதுடைய செயாப்தீன் ஷ்மதீன் என்ற நபரே வன்புர்ணவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து விசாரணை அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டயகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு புறம்பாக இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பேச்சாளர் முன்னாள் அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து குறித்த யுவதி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை வீட்டில் பணிபுரிந்த  டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரிஷாட்டின் மனைவியான ஷெஹாப்தீன் ஆயிஷா (46)இ மனைவியின் தந்தையான மொஹமட் ஷெஹாப்தீன் (70) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் சிறுமியை கொழும்புக்கு அழைத்துவந்து பணிக்கு அமர்த்திய தரகரான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர் எனப்படும் 64 வயதான  நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேக நபர்களை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
»»  (மேலும்)

கிளிநொச்சியில் 5.5 கோடி ரூபாவில் கண் மற்றும் என்பு முறிவு விடுதிகள்

கிளிநொச்சியில் 5.5 கோடி ரூபாவில் அமைக்கப்பட்ட கண் மற்றும் என்பு முறிவு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது.
Peut être une image de 1 personne, position debout et intérieur
(TAMILSELVAN MURUKAIYA) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 5.5 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட
கண் மற்றும் என்பு முறிவு விடுதி இன்று (23) சம்பிரதாயபூர்வமாக திறந்து
வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த பெரும் குறையை  நிவர்த்தி செய்யும் வகையில் SK. நாதன் அறக்கட்டளையின் ஸ்தாபகர் எஸ். கதிர்காமநாதன் அவர்களின் சொந்த நிதியில் அமைக்கப்பட்ட இவ் விடுதிகள்
இரண்டும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு இன்றைய தினம்  திறந்து வைக்கப்பட்டு வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைகழக மருத்துவப்பீடத்திற்கு  PCR  இயந்திரம், யாழ் போதனாவைத்தியசாலைக்கு CT scan  இயந்திரம் என வடக்கின் மருத்துவ துறைக்கு
பல்வேறு வகையில் உதவிகளை வழங்கி வரும்  SK. நாதன் அவர்களின் மற்றுமொரு உதவியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கான  இவ்விரு மருத்துவ விடுதிகளும் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக வைத்தியசாலையிடம்
கையளிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தலைமையில்
இடம்பெற்ற  இன்றைய இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.
கேதீஸ்வரன், நன்கொடையாளர் எஸ். கதிர்காமநாதன், கட்டத் திணைக்கள பொறியியலாளர் சி.சசிகரன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.
சத்தியமூர்த்தி, வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே. ராகுலன் மற்றும் வைத்தியர்கள்,தாதியர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)

மகாராஷ்டிராவில் நிலச்சரிவு - குறைந்தது 36 பேர் பலி

மகாராஷ்டிராவின் தலியே கிராமத்தில் நிகழ்ந்த பெரும் நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்த 32 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள சுடர்வதி கிராமத்தில் 4 பேர் இறந்துள்ளனர்.ராய்கட்டில் கடும் மழை

கடந்த 4 நாட்களாக மகாராஷ்டிராவில் தொடர்ந்து மிக கன மழை பெய்து வருகிறது.

அதுவும் கடந்த இரண்டு நாட்களாக கரையோர மாவட்டங்களான ரைகாட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய இடங்களில் தொடர் மழையால் நிலைமை மிகவும் மோசமானது. அப்பகுதியில் உள்ள வஷிஸ்தி, ஜக்புடி மற்றும் கஜலி நதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல கிராமங்களும் சிறு நகரங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

»»  (மேலும்)

7/22/2021

சீனக்காய்ச்சலால் சுமந்திரன் பாதிப்பு

சுமந்திரனின் ஒப்புதல் வாக்குமூலம்!

தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஏப்ரகாம் சுமந்திரன் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அளவுக்கு அதிகமான முறையில் சீன எதிர்ப்பு வாந்தி எடுத்திருக்கிறார்.

சீனாவில் ஜனநாயகமோ மனித உரிமைகளோ இல்லையென்றும், அங்கு ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என்றும் சொன்ன சுமந்திரன், ஜெனிவா ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டங்களில் சீனா தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வருவதால் சீனா இலங்கையில் செல்வாக்குப் பெறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். (எந்தத் தமிழ் மக்களை இவர் குறிப்பிடுகிறாரோ தெரியவில்லை)

அத்துடன் இந்தியாதான் தமிழ் மக்களுக்கு உதவுகிறது என்றும் தெரிவித்த சுமந்திரன், எனவே தாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து வேலை செய்வதாகவும் கூறியதுடன், ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் (அதாவது மேற்கு நாடுகள்) இலங்கையில் வந்து வேலை செய்ய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருக்கிறார். சுமந்திரன் தெரிவித்த இந்த சீன விரோத, இந்திய மற்றும் மேற்குலகம் சார்ந்த கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்க முடியாது. அது அவர் சார்ந்திருக்கும் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூடடமைப்பின் கருத்தாகவே கொள்ள வேண்டும்.

சுமந்திரனின் இந்தக் கருத்துகளையிட்டு ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஏனெனில் தமிழரசுக் கட்சி உருவான காலம் தொடக்கம் அது சீன விரோத, சோசலிஸ விரோதக் கருத்துகளையே கொண்டிருந்து வந்திருக்கிறது. தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துக்கு மார்க்சிஸ மறற்றும் சோசலிஸக் கருத்துகள் அறவே பிடிக்காது என செல்வநாயகத்தின் மருமகன் காலஞ்சென்ற பேராசிரியர் ஏ.ஜே.வில்ஸன் தனது கட்டுரையொன்றில் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

சுமந்திரனின் இந்தக் கருத்துகளுக்கு மாஓவின் பின்வரும் மேற்கோளை பதிலாகக் குறிப்பிடலாம்.
'எதிரி எதை ஆதரிக்கிறானோ அதை நாம் எதிர்க்க வேண்டும். எதிரி எதை எதிர்க்கிறானோ அதை நாம் ஆதரிக்க வேண்டும்'.


நன்றிகள்"முகநூல் தோழர் மணியம்
»»  (மேலும்)

7/20/2021

படைத்தலின் கடவுளை ஆசிரியனென்பேன் - பிரின்ஸ் காசிநாதர் பிறந்த தினம்


The Great Prince Casinader - 
படைத்தலின் கடவுளை ஆசிரியனென்பேன் நான் 
******

நாளை எனது பேராசான் பிரின்ஸ் சேரின் 95 வது பிறந்ததினம். இன்று அவர் இல்லை. ஆனால் மனம் நனைந்துருகியபடி, அவரது நல்நினைவுகளில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருக்கிறேன். 

எனது பேராசான், எங்கள் பாடசாலையின் தனித்துவமான அதிபர். தலைசிறந்த ஆங்கில ஆசான். ஆங்கில இலக்கியத்தில் ஞானமிக்கவர். இலங்கையின் தனித்துவமான பேராளுமைகளில் ஒருவர். தனது 20களின்பின் எமது பாடசாலைக்கென்றே வாழ்ந்த சரித்திரம்.

“நீ ஒரு சமூகப் பிராணி எனவே, என்றும் சமூகத்திற்குப் பிரதியுபகாரமாய் இரு” என்னும் கருத்தியலை நெஞ்சிலறைந்த மனிதர்.

”நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்” என்பதற்கு அவர் உதாரணம். 

போர்க்காலத்தில் பிரசைகள் குழுத் தலைவராக இருந்தார். மாடுமேய்க்கச் சென்றிருந்த சில முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் செங்கலடிக் கறுத்தப் பாலத்திற்கு அப்பாலுள்ள வயல்வெளிக்குள் தடுத்து வைத்திருந்தனர். பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை.

கீறீஸ்தவப் பாடசாலை எனினும், 1960-1980 காலத்தில் தெற்கே பொத்துவிலில் இருந்து வடக்கே மூதூர்வரை முஸ்லீம் மாணவர்கள் பெருமளவில் எமது பாடசாலையிலும் விடுதியில் தங்கியிருந்து கல்விகற்க அனுமதித்தவர். 

மட்டக்களப்பில் வேறெந்த பாடசாலைக்கும் இல்லாத அப்பெருமைக்கு, கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்த அவரது விரிந்த சமூக தொலைநோக்குச் சிந்தனையே காரணம். 

அவரது கல்வி மற்றும் சமூகச்சேவையின் காரணமாக, முஸ்லீம் சமூகத்தினருக்கு அவரிடத்தில் பெரும் மரியாதையும் அன்பும் இன்றுமுண்டு.

ஊர்ப்பெரியவர்கள் விடயத்தினை அவருக்கு அறியத்தந்தனர். 

அந்நாட்களில் கிழக்கின் தளபதியாகவும் இராணுவத்திற்குச் சிம்ம சொப்பனமாகவும் இருந்தவர் விடுதலைப் புலிகளின் தளபதி கருணா. அவரையெதிர்த்து எதுவும் செய்யமுடியாதிருந்த காலம்.

கருணா இவரது மாணவர் என்பது பலர் அறியாத கதை. ஒரு வார்த்தையில் விடயத்தை முடித்துவிட்டிருக்கலாம். ஆனால் அதிகாரத்திற்கு மண்டியிடுவதில்லை என்ற காரணத்தினால் அவர் மேலிடத்துடன் தொடர்புகொள்ளவில்லை.

தனியே, அவரது பழைய Hondaவில் செங்கலடி கறுத்தப்பாலத்தைக் கடந்து சென்று, விசாரித்து, அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடத்தினை சென்றடைந்தபோது “சேர், ஏன் இங்கு வருகிறீர்கள். சொல்லியிருந்தால் நான் வந்திருப்பேனே” என்றபடி இடைநிலைத் தளபதியான இன்னுமொரு ஒரு பழைய மாணவன் வந்திருக்கிறான். 

வந்த விடயத்தை அறிவித்திருக்கிறார். ”மேலிட உத்தரவு. விடமுடியாது” எனப் பதில் கிடைத்தது.

”சரி… உன்ட மேலிடத்திக்கு பிரின்ஸ் சேர் இந்த ஆக்களோடதான் திரும்பிப்போவார். இல்லாட்டி இங்கதான் இருப்பார் என்று சொல்” என்றுவிட்டு அங்கு உட்கார்ந்துகொண்டாராம்.

காலைநேரம் முற்பகலாகி, மதியமாகி, மாலையாகி இரவானது.

கிழக்கு மாகாணம் மட்டுமல்ல முழு இலங்கையின் இராணுவத்தையும், அரசாங்கத்தையும் நடுங்கவைத்த தளபதியினால் ஆசானின் நல்லலெண்ணத்தினைக் கடந்து அதிகாரம் செய்ய முடியவில்லை. 
அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

அன்றொருநாள் இக்கதையை அவர் சொல்லி முடித்தபின் ”சஞ்சயன், மனிதநேயத்திற்காக உயிரையும் விடலாம். எவருக்கும் அஞ்சவேண்டியதில்லை” என்றார்.

***

1977 என்று நினைக்கிறேன். ராஜன் செல்வநாயகம் மட்டக்களப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலம். அவர் எமது பாடசாலைக்கு ஒரு கட்டடம் கட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தார். 

ஒரு நாள் அதிபரின் அனுமதியின்றி பாடசாலைக்குள் வந்த அவர், கட்டடத் தொழிலாளிகளிடம் நேரடியாச் சென்று மேற்பார்வை செய்தார்.

”மிஸ்டர் ராஜன் செல்வநாயகம்” என்று ஒலித்தது கடுமையான குரல். 

”இது எனது பாடசாலை. என் அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது என்றார். 

”மன்னியுங்கள் சேர்” என்றுவிட்டு இடத்தை விட்டு அகன்றார் ராஜன் செல்வநாயகம். அதன்பின் அலுவலக வாசலில் நின்று அனுமதி பெற்ற பின்பே உள்ளே வரத்தெடங்கினார் ராஜன் செல்வநாயகம். 

***

ஆசான், ஆங்கில மொழி வழியில் எமது பாடசாலையிலேயே கற்றவர். அவரது கடைசி அதிபர் ஆங்கிலேயரான Rev. Cartmen. 

பல ஆண்டுகள் மட்டக்களப்பிற்குச் சேவையாற்றியவர். இவர் தனது வயதான காலத்தில் ஒரு முறை மட்டக்களப்பிற்கு வந்திருந்தார். அன்று புளியந்தீவு கண்ட ஊர்வலமும் பாடசாலை கண்ட கொண்டாட்டமும் சரித்திர நிகழ்வுகள். அதை ஒழுங்கு செய்வதவர் வேறு யாராக இருக்க முடியும்?

மட்டக்களப்பில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அமிர்தலிங்கத்தினை தேர்தலில் வென்று (அப்படித்தான் நினைவிருக்கிறது) 1990களில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரானார்.

இவரது ஆங்கிலப் புலமையையும் பேச்சுத் திறனின் காரணமாக இவர் பாராளுமன்றத்தின் பேச்சாளராக நியமிக்கப்பட்டார். 

பாராளுமன்றத்தின் குழுவொன்று இங்கிலாந்து செல்கிறது. இவரும் செல்கிறார். 

அங்கு, தனது அதிபரைத் தேடிக்கண்டுபிடித்து, நாளை மாலை அவரைச் சந்திக்க வருவதாக ஒப்பந்தம் செய்துகொள்கிறார். 

மறுநாள் காலை, இங்கிலாந்தின் பாராளுமன்றத்தினர் இலங்கையிலிருந்து சென்ற குழுவினரை தேனீர் விருந்திற்கு அழைக்கின்றனர். இவர் இலங்கைப் பாராளுமன்றப் பேச்சாளர். எனவே நீங்கள் கட்டாயம் சமூகமளிக்கவேண்டும் என இங்கிலாந்தின் பாராளுமன்றத்தினர் அறிவிக்கின்றனர்.
 
சற்றேனும் சலனப்படாது, ”மன்னிக்கவேண்டும், நாளை நான் எனது ஆசானைச் சந்திப்பதாக ஒப்பந்தம் செய்திருக்கிறேன். என்றால் வரமுடியாது” என்றாராம். 

அவரை ஆண்டாண்டுக் காலம் அறிந்தவர்களுக்கு இதுவென்றும் ஆச்சர்யமான செய்தியல்ல. அவரது நேரம் தவறாமை, வாக்கு மீறாமை ஆகியவை அவரது அடிப்படைக் குணங்கள். 

என்னிடமும் அவரது சில குணங்கள் உண்டு. என்னால் ஒப்பந்தம் செய்யப்பட்ட நேரம் தவறுகிறது என்றால் நான் பதறி அந்தரித்து, அசௌகரீயப்பட்டு, வெட்கப்படுவேன். இதற்கு ஆசானின் வழிவந்தமையன்றி வேறெதுவும் காரணமாக இருக்க முடியாது.

2018 மார்கழி மாதம் அவரைத் தோள்சுமந்து வழியனுப்பியிருந்தாலும், இன்றும் மனமெங்கும் நல்நினைவுகள் சுரக்கும் மனிதரவர்.

வாழ்வின் வழியெங்கும் நல்லாசான்கள் கிடைக்கும் வரம்பெற்றவன் நான். ஆனால், என்னால் வலியுணர்ந்த ஆசானொருவரும் இருக்கிறார். வாழ்வுக் காலத்தில் சீர்செய்ய முடியாத பழியும் சோகமும் அது. அதீத விலைகொடுத்துக்கொண்டு கற்ற பாடம். வாழ்வென்பது கற்றலுக்கானது அல்லவா?

நன்றிகள் முகநூல்
செ.சஞ்சயன்
»»  (மேலும்)

ஹிஷாலினியின் கொலை


ஹிஷாலினியைச் சீரழித்து கொலை செய்தது இந்தச் சமூகக் கட்டமைப்பு.....

ரிசாட் பதியூதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதுடன், அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகியுள்ளார் என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

இந்தச் சிறுமியின் மரணம் தொடர்பாக சில இனவாத ரீதியான கருத்துக்களையும், பிரதேசம் சார்ந்த போராட்டங்களையும், இந்த விவகாரத்தில் அரசியல் இலாபம் பெற முனையும் கூட்டங்களையும், அதேநேரம் இதுதொடர்பில் சரியான ஆழமான கருத்துக்களைப் பதிவு செய்திருந்த சமூக ஆர்வலர்களையும், சமூக நலன்சார் அமைப்புகளையும் காணக்கிடைத்தது. 

சிறுமியின் மரணம் குறித்து மேலோட்டமாக ஆராய்வதாலும் ஆவேசப்படுவதாலும் மாத்திரம் இதுபோன்ற கொடிய சம்பவங்களை தடுத்து நிறுத்திவிட இயலாது என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்யவேண்டியுள்ளது. 

குறித்த சிறுமி தனது கல்வியை 13 வயதில் இடைநிறுத்தியுள்ளதுடன், குடும்ப வறுமையின் காரணத்தால் அவர் வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளார். இதுபோன்று பல சிறுமியர், சிறுவர்கள் கல்வியை இடைநிறுத்திவிட்டு நகர்புறங்களிற்கு தொழில் தேடிச் செல்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். 

பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும், பெருந்தோட்டங்களைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு தொழில் பேட்டைகளை நோக்கி அணிவகுப்பது அதிகரித்துள்ளது. இன்றைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமையில், மந்த கதியில் இயங்கும் கல்வி நிறுவகங்களிடம் முறையான கொள்கைத் திட்டம் இல்லாத காரணத்தினால் இந்நிலைமை எதிர்காலத்தில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 

தற்போது இலவசக்கல்வியை பாடையிலேற்றி தனியார் மயப்படுத்துவதற்கும் மிலிட்டரிமயமாக்குவதற்கும் செயற்படுகின்ற இன்றைய கோட்டாபய அரசாங்கத்தினதும், இதற்கான அத்திவாரத்தையிட்ட கடந்த ஆட்சியாளர்களினதும் ஆட்சியிலும் கல்வி என்பது வியாபார பண்டமாக்கப்பட்டுள்ளது. 

அதனால், இலவசக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்குக் கூட இந்த ஆட்சியாளர்கள் தயக்கம் காட்டுவதுடன், மக்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டத்தை காட்டும் வகையில் சில மேலோட்டமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் நகர்ப்புற பாடசாலை கல்விக்கும், தோட்டப்புற பாடசாலை கல்விக்கும் இடையில் நிரம்பவே வித்தியாசங்கள் உள்ளன. ஒருபுறம், நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருப்பதுடன், தோட்டப்புற பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இன்னொருபுறம், பல்தேசிய கம்பனிகளுக்கும் பண முதலைகளுக்கும் தாரைவார்க்கப்பட்ட காணிகளில் பாரிய ஹோட்டல்களும், கிளப்புகளும் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதுடன், தோட்டப்புற பாடசாலைகளில் கல்வி கற்பதற்கான ஒழுங்கான கட்டட வசதிகள் இல்லாத நிலை காணப்படுகிறது. 

தோட்டப்புறங்களில் முறையாக கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதுடன், வசதிகள் அற்ற பாடசாலைகள் ஏராளம் உள்ளன. தோல்விகண்ட மற்றும் தோட்டப்புற மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத ஆட்சியாளர்களும், அவர்களுக்கு துணை நின்றவர்களுமே இதற்கு முழு பொறுப்பாளிகளாவர். இவர்களின் பாராமுகத்தினால் ஹிஷாலினி போன்ற சிறுவர்கள் பலர் கல்வியை இடைநிறுத்தி விட்டு தொழிலுக்குச் செல்கின்றனர். 

 இவ்விடத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு பிரதான விடயம் இம்மக்களது பொருளாதார நிலைமையாகும். பொருளாதார ரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்ட, பாதிப்படைந்த சமூகம் பெருந்தோட்ட சமூகமாகும். இதுவரையிலும் வாழ்வாதாரத்திற்கான ஊதியத்தை வென்றெடுப்பதற்கு இம்மக்கள் போராடி வருகின்ற நிலையில், இவர்களை முன்னிறுத்தி அரசியலை மேற்கொள்ளும் மலையக அரசியல்வாதிகள் இம்மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தும் ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசியும் வருகின்றனர். இதனால் உறுதியான பொருளாதாரத்தை வென்றெடுக்க முடியாத காரணத்தினால் தோட்டப்புறங்களில் மற்றைய பிரதேசங்களைக் காட்டிலும் நவீன கல்வி எட்டாக்கனியாகவே உள்ளது. பொருளாதார பின்னடைவு இம்மக்களை எல்லாத் துறைகளிலும் மேலெழும்பவிடாது எட்டி உதைத்துக் கீழே தள்ளிக்கொண்டிருக்கிறது. 

அரசாங்கத்தின் வர்த்தமானியில் 1000 ரூபா நாட்சம்பளம் உறுதி செய்யப்பட்ட பின்னரும் கூட அது பல இடங்களிலும் வழங்கப்படாது மறுக்கப்பட்டு வருகிறது. அதற்கான முழுப்பொறுப்பையும் இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், வாக்குறுதிகளை வழங்கியவர்கள் இவர்களே! ஆனால், இவர்கள் இன்று கம்பனிகளின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் 1000 ரூபா விடயத்தை திசை திருப்பிவிட்டு, தானும் தன்னைச் சார்ந்த மலையக அரசியல் கோஸ்டிகளும் ஒதுங்கிக்கொள்ளப் பார்க்கிறார்கள். அதேநேரம், மலையகத்தின் எதிர்த்தரப்பு தற்பொழுது நீண்ட விடுமுறையில் இருந்துகொண்டு, மௌனம் சாதித்து வருகின்றது. 

இவ்வாறான ஆட்சியாளர்களினாலும், மலையகத்தின் ஏமாற்று அரசியல்வாதிகளினாலும் மலையக மக்களின் வாழ்வும், அம்மக்களின் எதிர்காலமும் நாசமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தீர்மானகரமான புள்ளியில் இருந்து மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்கவே காலம் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

 
அதேநேரம், சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சித்தியெய்யாத, ஓரளவு கல்வி கற்ற மலையக இளம் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளதுடன், இவர்களை முன்னேற்றம் கண்ட சமூகமாக மாற்றிட அடுத்தக் கட்டத்தை நோக்கி வழிநடத்திச் செல்ல நாட்டின் அரசியல் கட்டமைப்பும், பொறிமுறையும் தவறிழைத்துள்ளதால், இவ்விளம் தலைமுறையினர் கார்மெண்ஸிகளிற்கும், புடவைக்கடைகளுக்கும், சில்லறைக் கடைகளுக்கும், சந்தைத் தொகுதிகளுக்கும், ஹோட்டல்களுக்கும், ஸ்பாக்களுக்கும், உடலுழைப்புச் சக்தி தேவைப்படுகின்ற கம்பனிகளுக்கும், பங்களாக்களுக்கும் தொழில் தேடிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். 

ஒழுங்குமுறையான பாதுகாப்பு இல்லாது (தங்குமிட வசதி, உணவு, சுகாதாரம், பாலியல் போன்றன) பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகளே இதில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். வஞ்சிக்கப்படுகிறார்கள். 

பங்களா எஜமானிக்கோ, எஜமானுக்கோ சேவகம் செய்ய மலையகப் பெண்கள்தான் தேவை என்ற எண்ணக்கரு உருவாகியுள்ளது. இதற்கான ஏஜண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மலையக அரசியற் பின்னணியும் வரலாறு முழுவதும் காணப்படுகிறது. 

இவ்வாறான காரணங்களினாலே ரிஷாடின் வீட்டில் சிறுமி உயிரிழக்க நேர்ந்துள்ளது. இதுவொன்று மாத்திரமல்ல, பல சம்பவங்கள் வெளிவராவிட்டாலும், பல இடங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்களின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. வயது, விபரங்கள் மாற்றப்பட்டு வயது குறைந்தவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூட கதைகள் அடிப்படுகின்றன. 

அதேநேரத்தில், குறித்த சிறுமியின் மரணத்துடன் இனவாதக் கருத்துக்களும் மேலேழுந்தவண்ணம் உள்ளன. இது, குடி, சாதி, இனம், மதம், மொழி சார்ந்த பிரச்சினை கிடையாது. இது இலங்கையில் காணப்படுகின்ற வர்க்க முரண்பாட்டின் விளைவு. 

முதலாளித்துவ அடிவருடி ஆட்சியாளர்களின் ஆட்சிக்கு எதிராக இன, மத, பேதமின்றி மக்கள் இணைந்து துணிந்து போராட முன்வந்திருக்கின்ற வேளையில், மேலேழுகின்ற பிரிவினைவாதக் கருத்துக்கள் மக்களை பிளவுபடுத்தவே செய்யும். 

இவ்விவகாரம் தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்குள் மோதிக்கொள்ளும் விவகாரம் அல்ல. மத்திய கிழக்கு நாடொன்றில் இலங்கைப் முஸ்லிம் பெண்மணி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டச் சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கும். இது வர்க்கப் முரண்பாட்டின் விளைவு என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 

ஹிஷாலியின் விவகாரத்தின் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் பார்வையையும் இனவாத ரீதியில் திசை திருப்புவதற்கும் ஒரு தரப்பு முயல்கிறது. இதன் இலாபம் யாருக்கென்று நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்குள் முரண்பாட்டை உருவாக்கிக்கொண்டோ, பெரும்பான்மை சமூகத்துடன் குரோதத்தை வளர்த்துக்கொண்டோ இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியாது. தடுத்து நிறுத்தவும் முடியாது. 

ஆகவே, ஏமாற்றுக்காரர்களின் வித்தைகளுக்கு ஏமாந்துப் போகாது ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து இவ்வாறான விடயங்களுக்கு எதிராகப் போராட வேண்டும். சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தகுந்த விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் ஹிஷாலியின் மரணத்தின் பின்னணியை அம்பலப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட அத்தனை குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட வேண்டும். இனிமேலும், இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாவண்ணம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

இறுதியாக, இந்த ஆட்சியாளர்களின் ஆட்சியில் சட்டம் எத்திசைக்கும் வளையும் என்பதையும் சுட்டிக்காட்டி, மக்களுடைய ஆட்சி அதிகாரைத்தை நிலைநாட்ட மக்கள் ஒற்றுமையாகப் போராட வேண்டுமென்று கூறி முடிக்கிறேன். 

நன்றிகள் 
தோழர்.Sadhees Selvaraj
»»  (மேலும்)

7/19/2021

சட்டவிரோத கருக்கலைப்பு தொடரும் சோகம்

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   மோரா தோட்ட மேற்பிரிவிலுள்ள வீடொன்றில் நான்கு பிள்ளைகளின் தாயொருவர் (வயது 36) திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த திங்கட்கிழமை (12) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தகவலறிந்து அவ்வீட்டுக்குச் சென்ற பொலிஸார் வீட்டிலிருந்த இரத்தகறைபடிந்த ஆடைகள் சிலவற்றை மீட்டனர். அத்துடன் ஆடையொன்றால் சுற்றப்பட்டிருந்த சுமார் 7 மாதங்கள் மட்டுமே மதிக்கத்தக்க பெண் சிசுவொன்றின் சடலத்தையும் மீட்டனர். பால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில்  அரசியல் விடுதலை கிடைத்துவிடப் போவதில்லை- நிலவன். | Uyirpu

வீட்டுக்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான கருக்கலைப்புக் காரணமாகவே இவ்விரு உயிரிழப்புகளும் இடம்பெற்றிருப்பதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மரணமடைந்த பெண்ணுடன் அடிக்கடி தொடர்பைப் பேணிவந்த 35 வயதான பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர். 

தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகளும் இடம்பெற்றன. பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம்இ டிக்கோயா-கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதன்பின்னர் இந்தச் சம்பவம் குறித்த பின்னணியை யாரும் தேடியதாக இல்லை. இலங்கையில் நாளொன்றுக்கு 600 -1000 வரையிலான சட்டவிரோத கருக்கலைப்பு இடம் பெறுவதாகக் கூறப்படுகின்றது. இது தாய்மாருக்கு பெரும் ஆபத்தாகவும் அமைகின்றது.

»»  (மேலும்)

7/17/2021

ஐரோப்பாவை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்-120 பேர் பலி

 

மேற்கு ஐரோப்பாவில் பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் குறைந்தது 120 பேர் இறந்துள்ளனர். ஐரோப்பை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்

வரலாறு காணாத மழையால் நதிகளில் உடைப்பு ஏற்பட்டு, அப்பிராந்தியமே பெருமளவு சேதமடைந்துள்ளது.

ஜெர்மனியில் பலி எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தீர்க்கமான போருக்கு அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல் அழைப்பு விடுத்துள்ளார்.

பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

»»  (மேலும்)

7/15/2021

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளர் பிரசாந்தன் கடமைகளை பொறுப்பேற்றார்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

கட்சியின் பொதுச் செயலாளர் தனது உத்தியோகபூர்வ காரியாலய கடமைகளை பொறுப்பேற்றார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தனது விடுதலைக்குப் பின்னர் நேற்றைய தினம் 14/07/2021 அன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னிலையில் தனது உத்தியோகபூர்வ காரியாலய கடமைகளை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

முள்ளிவாய்க்காலில் வெடிபொருள் மீட்பு

 முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருள் எச்சங்கள், இன்று (14) மீட்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்புரவு செய்யும் போது வெடிபொருட்கள் போன்றவை இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வெடிபொருட் அகற்றும் பிரிவினர் கிளிநொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு குறித்த பகுதி தோண்டப்பட்ட போதுஇ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஒருவகையான வெடிபொருள் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
»»  (மேலும்)

7/13/2021

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த அமிர்தலிங்கம் நினைவுகளும் மேதகு வின் கயமைகளும்


(இன்று யூலை 13 அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு நாள் 'மே.த.கு' வால் அனுப்பப்பட்ட கொலைஞர்கள் அவரைக் கொன்று போட்ட நாள்)

“நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை” என்பது இலங்கை தமிழர்களது அரசியல் வாழ்வில் மிகவும் பிரபல்யமானதொரு மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்தவிடாமல் சிறிமா பண்டாரநாயக்கா தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு முட்டுக்கட்டைபோட்டது. “பொலிசாரை அனுப்பி மாநாட்டில் கலந்துகொண்ட 9 அப்பாவி தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுகொன்றது” என்பதே வரலாறாக ஒவ்வொரு தமிழர் மனதிலும் இன்றுவரை உலாவரும் செய்தி ஆகும். இந்த வரலாற்றையே மேதகு திரைப்படமும் முன்வைத்துள்ளது.
இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள்தான் இன்றுவரை தமிழர் தரப்பு போராட்டங்களுக்கு நியாயம் சேர்த்து வருபவையாக இருக்கின்றன. ஆனால் உண்மை சம்பங்களாக விபரிக்கப்படுகின்ற குரூரங்களின் வரலாற்று சூழலையும் இச்சம்பவங்களின் பின்னணியில் மறைக்கப்பட்டிருக்கின்ற தகவல்களையும் தேடி ஆராய்கின்றபோது மேலும் பலவிதமான அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவரகாத்திருக்கின்றன.
அது மட்டுமன்றி இது போன்ற இழப்புகளை தவிர்த்திருக்கக்கூடிய வாய்ப்புகளை தமிழ் தலைவர்கள் திட்டமிட்டே கருத்தில் எடுக்காதிருக்கின்றனர். சிலவேளைகளில் இன்னுமொருபடி மேலேபோய் தமிழ் தலைமைகளே இதுபோன்ற குரூரமான வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
1970 ஆண்டு தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து இடதுசாரிகள் கூட்டணி அரசாங்கம் அமைத்திருந்தனர். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான மக்கள் நல திட்டங்கள் பல நாடெங்கும் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உப உணவுப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் அதிக கவனமெடுத்து செயற்பட்டது.
வெங்காயம், மிளகாய்…போன்ற பயிரிடல்களில் ஈடுபட்ட ஏழை விவசாயிகள் பலர் இந்த சிறிமா ஆட்சியில்தான் கூடிய இலாபம் சம்பாதித்து சமூகத்தில் முன்னணிக்கு வரும் அரியவாய்ப்புகளை பெற்றுகொண்டனர். அதேபோன்று உழைப்பாளர்கள் நலன்சார்ந்த கூட்டுறவு சங்கங்கள்இ தொழிற்சங்கங்கள்…… போன்ற அமைப்புகளும் இந்த காலத்தில்தான் அதிக வளர்ச்சி கண்டன.  இத்தகைய அபிவிருத்தி முயற்சிகள் அனைத்துக்கும் யாழ்மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா  சிறிலங்கா சுதந்திர கட்சி சார்ந்து செயற்பட்டமை உறுதுணையாக அமைந்தது.
இதன்காரணமாக யாழ் மாவட்டத்தினை மேலும் பலவழிகளிலும் அபிவிருத்தி செய்ய அவருக்கு அரசாங்கத்தின் பூரண ஆதரவு கிட்டியது. இதனை மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அந்த காலத்தில் (1970-1977) பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இராஜன் செல்வநாயகம் அவர்களின் அபிவிருத்தி திட்டங்களுடன் ஒப்பிடலாம்.
நீண்டகாலமாக இராஜன் செல்வநாயகத்திற்கு முன்பிருந்தே தமிழரசு கட்சி எம்.பி.யாக இருந்துவந்த செ.இராஜதுரையினால் செய்யப்பட்ட அபிவிருத்திகளை விட 1970 – 1977 வரையான காலப்பகுதிகளில் இராஜன் செல்வநாயகம் பன்மடங்கான வளர்ச்சி திட்டங்களை மட்டக்களப்பில் செய்து முடித்திருந்தமை இன்னும் பலருக்கு ஞாபகமிருக்கலாம்.
அதேவேளை 1970 ம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் படுதோல்வி கண்டதனால் பாராளுமன்ற வாய்ப்பைகூட இழந்திருந்தார் அமிர்தலிங்கம். அந்தவகையில் அல்பிரட் துரையப்பாவோ  அமிர்தலிங்கத்தினை விஞ்சிய ஒரு மக்கள் தலைவனாக யாழ்பாணத்தில் மிளிர்ந்தார்.
துரையப்பாவின் வேலைத்திட்டங்கள் யாழ்ப்பாணத்தின் ஏழைகள் விவசாயிகள் மற்றும் சமூகத்தின் தாழ்நிலை வகுப்பிலிருந்தவர்கள் போன்ற பலதரப்பட்டோரதும் வாழ்க்கைத்தரத்தினை அதிகரித்தது. தமது அரசியல் வாழ்வில் எப்போதும் மேனிலை வர்க்கத்தினருக்கான அரசியலை முன்னெடுத்து வந்த தமிழ் தலைமைகள் இந்த சமூகமாற்றத்தை ஒரு போதும் விரும்பியிருக்கவில்லை.
இந்தஒடுக்கப்பட்ட  வகுப்பினரது வளர்ச்சிநிலையானது அமிர்தலிங்கம் போன்ற தமிழரசுகட்சி பிரமுகர்களும் அவர்களது ஆதரவு தளமான மேட்டு குடியினரும் நடத்திவந்த  சமூக அதிகாரத்தை ஆட்டம் காணச்செய்யும் அல்லது கேள்விக்குள்ளாக்கும் நிலையை நோக்கி நகர்ந்தது. இதுவும் அவர்களுக்கு உவப்பானதொன்றாக இருக்கவில்லை. அடுத்து வரபோகின்ற 1977 ம் ஆண்டு பொதுதேர்தலில் இன்னிலைமைகள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் அச்சமுற்றனர்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கடுமையான வயோதிப தளர்வினை எதிர்நோக்கியதன் காரணமாக 1970 இன் பின்னர் தமிழரசுக் கட்சிக்குள் அடுத்தகட்டத் தலைமையை நோக்கிய குடும்பிப் சண்டைகள் ஆரம்பமாயிற்று. கிழக்கில் இருந்து இரண்டாம் தலைமையாக வளர்ச்சி பெற்றிருந்த சொல்லின் செல்வர் இராஜதுரை அவர்களுக்கே அந்த வாய்ப்புகள் அதிகம் இருந்தது.
ஆனாலும் அ.அமிர்தலிங்கம் தாம் சார்ந்த குழாம் ஒன்றினை தமிழரசுக் கட்சிக்குள் மறைமுகமாக கட்டிவளர்த்து தலைமைப் பதவியைப் பிடிக்க குள்ளத்தனமாக செயற்பட்டு வந்தார். அதேவேளை கட்சியின் செயற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்துபவராக தன்னை எப்பொழுதும் அடையாளப் படுத்துவதில் கண்ணாயிருந்தார்.
1972 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்களாதேசம் எனும் ஒரு நாட்டின் உருவாக்கம் நிகழ்ந்தது. இதற்கு பாகிஸ்தான் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு புதியதொரு நாட்டை உருவாக்க முன்நின்று உழைத்ததே காரணமாகும். இந்த வங்காளதேஷ் எனும் நாட்டின் உதயத்தை வரவேற்றுப் பேசிய அமிர்தலிஙம் இதேபோன்று இலங்கையிலும் இந்தியா தலையிட்டு ஒரு “யாழ்தேஷ்” மலர உதவவேண்டும் என அன்னை இந்திரா காந்தியை கேட்டுக்கொண்டார்.
அதாவது ஒரு நாடு பிளவுபடும் அளவிற்கு இனமுரண்பாடுகள் இல்லாத சூழலில் எடுத்த எடுப்பில் அவ்வப்போது உணர்ச்சி மேலிட உரத்துப் பேசுவதின் பழக்கதோசமே இந்த கருத்தாகும்;. சே.பொன் அருணாசலம் காலத்தில் இருந்து தேவையான போது இப்படித் தனிநாடு குறித்தும் தமிழ் அரசு குறித்தும் தடாலடியாகப் பேசுவது யாழ்த்தலைமைகளின் வழக்கமாக இருந்தது.
அமிர்தலிங்கம் காலத்துக்கு முன்னர் கூட பாகிஸ்தான் உருவான வேளையில் தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் அதேபோன்றதொரு தனிநாட்டுப் பிரிவினையை தானும் ஏற்படுத்தப் போகிறேன் என்றும் அதை செய்துமுடிக்கப் போகும் “ஜின்னா” தானே என்றும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் அதுவெல்லாம் எப்படிப் போலிப் பேச்சாகவும் உணர்ச்சி வசப்பட்ட வெற்றுவார்த்தைகளாக இருந்ததோ அதே போன்றே அமிர்தலிங்கமும் “யாழ்தேஸ்” கேட்டமையும் அமைந்தது. கிழக்கில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளும் சமூக பொருளாதார தேவைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு இவையனைத்துக்குமான தீர்வு ஒரு தனிநாடே என்ற சிந்தனை இவர்கள் மனதில் உருவாகி இருந்திருந்தால் இப்படி எடுத்த எடுப்பிலேயே தனிநாட்டைக் குறிக்க “யாழ்தேஸ்” எனும் வார்த்தை வெளிவந்திருக்க முடியாது.
ஆகவே அமிர்தலிங்கமும் தனது கடந்தகால ஆசான்களின் பாணியில் யாழ்ப்பாணத்தின் பிரச்சனைக்காக மட்டுமே போராடினார். தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான முடிவு என்பது யாழ்ப்பாணத்தின் படித்த வர்க்கத்தின் பிரச்சனைகளுக்கான முடிவு காண்பதே எனும் எண்ணமே அவர் மனதில் இருந்தது.
மக்களின் வாழ்வியல் தேவைகளை ஓட்டிய வேலைத்திட்டங்களை கொண்டிராத தமிழரசு கட்சியினர் சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் மோதுவதென்பது சற்று சிரமமானதொன்றாக இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஆகவேதான் மக்களின் மனங்களை கவரும் மொழியுணர்வுகளே வழமைபோல் தமிழரசு கட்சிக்கு கைகொடுத்தது.
தமிழை வளர்க்கின்றோம், தமிழை ஆராய்ச்சி செய்கின்றோம், தமிழுக்கு தொண்டுசெய்கின்றோம் என்று மொழிசார்ந்த வேலைத்திட்டக்களையே மக்களின் முன்வைத்தனர். இந்த வேலைத்திட்டங்களின் முதுகெலும்பாகதான் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு யாழ்பாணத்தில் நடாத்தப்படுவதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டது.
இந்த நாலாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1974 ல் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட வாய்ப்பினை அமிர்தலிங்கம் தனது எதிர்கால அரசியலை ஸ்திரப்படுத்தி கொள்ளும் நோக்கில் நன்றாக பயன்படுத்த முனைந்தனர்.
அமைதியாக நடாத்தபட வேண்டிய ஆராய்ச்சி மாநாட்டை ஆர்ப்பாட்டமாக நடத்துவது என்பது அறிவுடமையானதொன்றல்ல. ஆனால் சாதாரணமாக நடத்தப்பட வேண்டிய இம்மாநாட்டை பெரியதொரு விழாவாக்கி நடத்த முயன்றனர்.
இதற்காக இன பிரிவினை கருத்துக்களை அள்ளி வீசக்கூடிய பேச்சாளர்கள் இந்தியாவிலிருந்து வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தமிழ் ஆராய்ச்சிக்காக நடாத்தப்பட வேண்டிய இம்மாநாடு பிரிவினைக்கு தூபமிடுவதாக அமைந்துவிடக்  கூடாது என்பதில் அரசு கவனமாயிருப்பது இயல்பே.
இதன்காரணமாக தமிழ் நாட்டிலிருந்து வருகை தரவிருந்த உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் ஜனார்த்தனன் (அன்றைய சீமான்) போன்ற பேச்சாளர்களுக்கு இலங்கையரசு வீஸா தரமறுத்திருந்தது. அவரை தனிதமிழீழ கோரிக்கையை தூண்டிவிட கூடிய உணர்ச்சிகரமான பேச்சாளராக அரசு கருதியதே அதற்கு காரணம். ஆனால் இந்த வீஸா மறுப்பும் மாநாட்டுக்கான தடைமுயற்சிகளும் அல்பிரட் துரையப்பாவின் தூண்டுதலின் பெயரிலேயே நடைபெறுவதாக அமிர்தலிங்கம் குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த துரையப்பாவோ யாழ்பாண மேயர் எனும் வகையில் இந்த மாநாட்டுக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தான் தயாராகயிருப்பதாகவும் அறிக்கைவிட்டார். ஆனால் நீதிமன்றங்களில் குதர்க்கம் பேசி தேர்ச்சி பெற்ற அமிர்தலிங்கம் “யாரின் உதவியுமின்றி தன்னால் தனித்து மாநாட்டை நடாத்த முடியும் என மறுப்பறிக்கை விட்டார்.
அதற்கு பதிலிறுத்த துரையப்பா தனது உதவிகள் ஏற்றுகொள்ளபடாவிட்டாலும் தான் இதற்கு தடையாக இருக்க போவதில்லை என சொன்னார். “யார் தடைசெய்தாலும் மாநாடு நடந்தே தீரும்” என்று வேண்டாத விவாதங்களில் ஈடுபட்டார் அமிர்தலிங்கம். இதனுடாக மாநாட்டினை ஒட்டி மிக மோசமானதொரு பதட்ட சூழலினை தோற்றுவிக்க அவரே காரணமாயிருந்தார்.
இப்படியாக அரசாங்கத்தினது பல முட்டுக்கட்டைகளையும் பாரிய ஆபத்துக்களையும் வென்று தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படபோகிறது என்ற ஒரு மாய தோற்றத்தை வடக்கு கிழக்கு மக்களிடம் ஏற்படுத்துவதில் அமிர்தலிங்கம் வெற்றி கண்டார்.
இறுதியாக இறைமையுள்ள ஒரு தேசமான இலங்கையரசின் சட்டதிட்டங்களை மீறி கள்ள தோணியில் ஜனார்தனன் போன்ற இந்திய பேச்சாளர்களை யாழ்பாணம் கொண்டுவந்து சேர்ப்பதில் அமிர்தலிங்கம் இறங்கினார்.
அதுமட்டுமன்றி உதவி அமைச்சர் சோமவீர சந்திரசிறீ, யாழ் மேயர் அல்பிரட்துரையப்பா போன்றோர் மீதான கொலை முயற்சிகளில் ஈடுபட்டமைக்காக இலங்கை பொலிசாரினால் தேடப்பட்டு வந்த சிவகுமாரன் போன்ற தமிழ் மாணவர் பேரவை இளைஞர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இரைளஞர் பேரவை பட்டாளமும் இம்மாநாட்டில் முக்கியஸ்தர்களாக உலாவந்தனர்.
உண்மையில் தமிழ் ஆராய்ச்சி மாநாடுதான் நடத்தபட வேண்டுமாக இருந்திருந்திருந்தால் இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இவைமட்டுமல்ல குழப்பங்களை ஏற்படுத்தும் வண்ணம் இன்னும் பல தேவையற்ற பொறுப்புகளை அமிர்தலிங்கம் போன்றோர் இந்த இளைஞர் பட்டாளத்திடம் வழங்கியிருநதனர்.
அதாவது விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த ஜனார்த்தனன் அவர்களை இலங்கை பொலிசார் கைதுசெய்து விடாமல்  பாதுகாக்கும் பொறுப்பை பொலிசாரால் தேடப்பட்ட சிவகுமாரன் குழுவினரிடமே வழங்கியிருந்தமை நிலைமைகளை மேலும் சிக்கலாக்கியது.
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் எனும் நூலினை எழுதிய புஸ்பராசா அவர்கள் தனது நூலில்  96 ஆம் பக்கத்தில் இந்தவிடயங்களை ஒப்புக்கொண்டுள்ளார். “மாநாட்டுக்கு உலகத் தமிழ் இளைஞர் பேரவையின் தலைவர் ஜனார்த்தனன் வந்த செய்தியை அமிர்தலிங்கம் மூலம் அறிந்துகொண்டேன்.யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றில் வைத்து ஜனார்த்தனனை சந்தித்தேன். ஜனார்த்தனனது பாதுகாப்பு ஏற்பாடுகளை சிவகுமாரனே செய்தார்” என்கிறார் அவர். இவையெல்லாம் தமிழை ஆராட்சி செய்வதற்கோ அன்றி தமிழுக்கு தொண்டு செய்வதற்தோ தமிழை வளர்ப்பதற்கோ செய்யப்பட்டதல்ல. மாறாக எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு அமிர்தலிங்கத்தின் செயற்பாடுகள் பங்களித்தன.
வரலாற்றின் மனிதன் என்கின்ற அ.அமிர்தலிங்கம் அவர்களது பவளவிழா மலரில் இச்சம்பவம் குறித்து ஜனார்த்தனன் பின்வருமாறு விபரிக்கின்றார்.
“செய்தித்தாள்களில் நான் உரையாற்றுவேன் என அறிவிப்பு. காலை ஊர்வலத்தை தொடங்கிவைத்து பேசியபோதே என்னை கைது செய்ய பொலிசார் முயற்சிசெய்ய அவரிடம் அமரர் நவரத்தினம் பேச்சுக்கொடுத்து இடைமறிக்க தலைமறைவானேன். மாலை வீரசிங்கம் மண்டபத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்துவிட்டதால் வெளியே அமைக்கப்பட்ட திடீர் மேடையை அடைந்தேன். காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘உம்மைக் கைது செய்து கொழும்பு நாலாவது மாடிக்கு அழைத்துசெல்லும் உத்தரவிது.’ எனக்காட்ட பேசிவிட்டுத்தான் வருவேன், பேசாது இங்கிருந்து போக தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என நான் மறுக்க வேறுவழியின்றி கூட்டத்தைக் கலைத்து அங்கேயோர் ‘ஜாலியன் வாலாபாக்’ நடத்த காவல்துறையினர் முடிவுசெய்து அகன்றனர். அலையைக் கிழித்துவரும் கலம்போல் அமிர்வந்தார். கரவொலி விண்ணைப்பிளக்க கையில் இருந்த மாலையை எனக்கு அணிவிக்க அதை அவருக்கு நான் திரும்ப மாலையிட அந்த மணமேடை – பின்னர் 12 உயிர்களை தியாகவடிவில் காணும் அவலம் ஏற்பட்டது.”
இந்த வாக்குமூலங்கள் ஊடாக நாட்டின் சட்டத்தை காக்கும் கடமையில் ஈடுபட்ட பொலிசார் ஆத்திரமூட்டப்பட்டு சிவகுமாரன், ஜனார்த்தனன் போன்றோரை கைதுசெய்யும் முயற்சியில் வான்நோக்கி சுடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனை “அமிர்தலிங்கம் சகாப்தம்” எனும் நூலை எழுதிய கதிர் பாலசுந்தரம் அவர்கள் பின்வருமாறு விபரிக்கின்றார்.
“1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராட்சிமாநாடு நடந்தது. உலகமெங்கும் இருந்து அறிஞர்கள் வந்திருந்தனர். மக்கள் வெள்ளம் அலைபுரண்டது. யாரோ ஒரு இந்தியர் பேசப்பேவதாக பொய்க்கதை பரவியது. திடீரென வந்த பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். குண்டாம்தடிகளால் மக்களை அடித்தர், ரைபிள்களால் சுட்டனர். மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து 9 பேர் பலியாகினார்கள்.”
நடந்த உண்மைகளை இதற்குமேல் இன்றைய பரம்பரை புரிந்து கொள்ள வேண்டும். இவையனைத்தும் தாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக மகாநாடு நடந்ததாகவே தமிழர் விடுதலைக் கூட்டணி கணக்குப் போட்டிருக்க வேண்டும். ஏனெனில் 10-01-74 இல் நடந்த இந்த 9 பேரினுடைய இறப்பும் சிங்களப் பேரினவாத அரசின் தமிழ் படுகொலை என்று பிரச்சாரப் படுத்தி தேர்தலில் களம்மிறங்க அமிர்தலிங்கத்துக்கும் அவர் சார்ந்த கூட்டணியினருக்கும் நல்ல வாய்ப்பபை ஏற்படுத்திக்கொடுத்தது.
கிழக்கு மாகாணத்தில் இருந்து இந்த தமிழ் ஆராட்சி மாநாட்டுக்காக தமிழர்விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட வாகன சேவையினுடு  யாழ்ப்பாணம் சென்ற கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் யாருமே இந்த படுகொலையின் பின்னணியில் இருந்த சூட்சுமங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அமிர்தலிங்கத்துக்கும் அல்பிரட் துரையப்பாவுக்கும் இடையே இருந்த அதிகாரப் போட்டி சண்டைகள் குறித்து அவர்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை. இந்த சூழ்நிலையிலையே தம் கண்முன்னே நடைபெற்றிருந்த கொலைகளை திட்டமிட்ட சிங்களப் பொலிசாரின் படுகொலையே என நம்பினர். வெடிச்சத்தங்களும் மகாநாட்டில் ஏற்பட்ட குழப்பமும் கொலை செய்யப்பட்ட 9 உடல்கள் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி இறக்கப்பட்டமையும் தம் கண்ணெதிரே நடந்தேறியமையால் இப்படுகொலையானது சிங்கள அரசின் திட்டமிட்ட படுகொலையென்றே அவர்களை நம்பவைத்தது.
தப்பிப் பிழைத்து கிழக்கு மாகாணத்துக்கு வந்த சேர்ந்த அவர்கள் தாம் கொண்டுவந்த செய்திகளை அங்கே பரப்பினர். “கண்ணால் கண்டதும் பொய்” என்பதை அவ்வேளை கிழக்கிலங்கை மக்களிடத்தில் காலம் ஒருதரம் நிரூபணமாக்கிச் சென்றது.
இந்த தமிழாராட்சி மாநாட்டு அனர்த்தங்களுக்கு பின்பு நடந்த முக்கியமாதொரு சம்பவம் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு வன்முறை மீதான விருப்பத்தை மென்மேலும் அதிகரிக்க ஏதுவாக்கிற்று பொன் சிவகுமாரன் யாழ்பாணத்தில் நடந்த இருவேறு குண்டுத்தாக்குதல் கொலை முயற்சிகளுக்காக ஏற்கனவே தேடப்பட்டு வந்தவர் என்பதை மேலே கண்டோம்.
1974 ஆம் ஆண்டு ஆனி மாதம் 5 ஆம் திகதி கோப்பாய் வங்கியயொன்றில் பொதுமக்களின் நகைகளை கொள்ளையிட முயற்சிக்கையில் வங்கி ஊழியர்களாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் பொலிசாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டார். அக்கைதின் போது “சயனைட்” எனும் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தற்கொலை தமிழர்விடுதலைக் கூட்டணியினரால் பரபரப்பாக்கப்பட்டு வீரச்சாவாக வர்ணிக்கப்பட்டது. அதனுடாக ஒருவித கீரோயிச மனப்பாங்கின் மீதான பற்றுதலை இளைஞர்களுக்கு ஊட்டிவிடுவதில் கூட்டணிப் பேச்சாளர்கள் வெற்றியடைந்தனர்.
அஞ்சலிக் கூட்டங்களின் போது பொதுமக்களையும் மாணவர்களையும் அணிதிரட்டிய த.வி.கூட்டணியினரும் அவர்களது கிளையினரான தமிழ் இளைஞர் பேரவையினரும் இப்படி ஆயிரம் ஆயிரம் சிவகுமாரன்கள் உருவாக வேண்டும் என்று வன்முறைக்கு வித்திட்டனர்.
மறுபுறம் இதுபோன்ற பல நிகழ்வுகளில் முக்கிய பேச்சாளராகிய அமிர்தலிங்கம் தன்னைத்தானே தமிழீழத்தின் தளபதியாக வரித்துக்கொண்டதன் ஊடாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை தனக்கானதாக மென்மேலும் உறுதி செய்து கொண்டார்.
ஆனால் அவர் தொடக்கிவைத்த தீவிரவாத போக்கு காலப்போக்கில் அவரையும் பலி கொண்டது.
»»  (மேலும்)