6/29/2021

கல்வி தரப்படுத்தல் ஏன்?


1970 இல் பதவிக்கு வந்த இடதுசாரிகளை கூட்டாகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசு நவீனகல்வி  முறையில் உருவாகிய பல்கலைக்கழக வாய்ப்புகளை இலங்கையின் சகல பிரசைகளும் சமமாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கியதே  கல்விதரப்படுத்தல் சட்டமாகும். அக்காலங்களில்  இலங்கையின் சனத்தொகையில்  5 சதவீதத்துக்கும் வீதமாக இருந்த யாழ் வேளாள மத்தியதர வர்க்கத்தினர்  மருத்துவ, பொறியியல் துறைகளில்  40-50 வீதமான பல்கலைக்கழக வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டிருந்தனர். இந்நிலையானது 1900 ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் இருந்த பார்ப்பனர்களின் நிலைக்கு ஒப்பானது. எப்படி  சிறுபான்மையான பார்ப்பனர்கள் பல்கலைக்கழக அரச பதவிகளில்  அபரீதமாக ஆதிக்கம் செலுத்தினாரோ அதேபோலத்தான் யாழ்-வேளாள மேட்டுக்குடிகள் இலங்கையில் ஆதிக்கத்தில் இருந்தனர். இந்நிலைமையானது மிக சிறுபான்மையான ஏழை சிங்கள மக்களிடையே பெரும் விசனத்தை உருவாக்கியிருந்தது. இந்த யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தினரை  தமிழர்களாகப் பார்த்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசு இன அடிப்படையில் ஆரம்பத்தில் தரப்படுத்தலைக் கொண்டு வந்தது. ஆனால் அது இனவாத பார்வை என்று விமர்சனங்கள் எழுந்தபோது சிங்களப் பகுதிகளில் கொழும்பு, கம்பகா  போன்ற மாவட்டங்களும் இப்படி அதிகவாய்ப்புகளை பெற்று வருவது கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே இனத்தின் அடிப்படையில் இருந்த தரப்படுத்தலுக்கான அளவுகோலை  1974ல் இனவாரியாகவோ மொழிவாரியாக அன்றி  மாவட்ட அடிப்படையில் மாற்றியது.அதாவது கல்விக்கான வசதி வாய்ப்புகளை அதிகம் கொண்டிராத மாவட்டங்களை   பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து அப்பகுதி மாணவர்களுக்கு ஒதுக்கீடுகளை  நிர்ணயித்தது. அத்தோடு அந்த அரசு கொண்டிருந்த  இனவாத அணுகுமுறை  முடிந்துபோனது.
இதனுடாக உண்மையிலேயே யாழ்-வேளாள மேட்டுக்குடிகளைப்போல சிங்களப்பகுதிகளிலும் இருந்த கொவிகம மேட்டுக்குடிகள் வைத்திருந்த கல்வி,உத்தியோக ஆதிக்கங்கள் முடிவுக்கு வந்தன.  யாழ்ப்பாணம், கொழும்பு,கம்பஹா  போன்ற பகுதிகளில் இருந்த சாதிய ரீதியாக மேலோங்கியிருந்த மத்தியதர வர்க்கத்தினர்  அதுவரை காலமும் பல்கலைக்கழக வாய்ப்புகளில் அபகரித்து வந்த இடங்கள் மட்டுப்படுத்தப்பட்டது. 
இந்த மட்டுப்படுத்தபட்ட வாய்ப்புகள் ஊடாக பெறப்பட்ட இடங்கள் கல்விபெறும் வசதிகளில் பின்தங்கியிருந்த தென் மாகாணம், கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. வடமாகாணத்திலும் கூட யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்த முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற மாவட்ட ஏழை மாணவர்கள் ஓரளவேயாயினும் பட்டதாரிகள் ஆகும் வாய்ப்பை இந்த தரப்படுத்தல் சட்டமே வழங்கியது. 
இதே வேளை யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஆசிரியர்களாக கடமை புரிந்துவந்த யாழ் மேட்டுக்குடி  உத்தியோகத்தர்கள் தமது பரம்பரையினரை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற பகுதிககளில் உள்ள பாடசாலைகளில் பதியச் செய்து அங்கே பரீட்சை எடுக்க வைத்து தாம் இழந்து போன வாய்ப்புகளை மீண்டும் பெற்றுக் கொண்டனர். ஏழ்மையான மாவட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீடுகளின் ஊடாக கிடைக்கப் பெற்ற பல்கலைக்கழக இடங்கள் யாழ்ப்பாண  வேளாள மேட்டுக்குடிகளால் களவாடப்பட்ட உண்மைகள் வெட்கத்துக்குரியன.
எது எப்படி இருந்த போதும் தமிழரசு கட்சியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மோசமான முறையில் இந்த தரப்படுத்தலைப் பற்றிய எதிர் பிரச்சாரங்களை தொடருவதை கைவிடவில்லை. யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகள் தாம்  அடைந்த பாதிப்புகளை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என கூக்குரலிட்டனர். அதேவேளை இந்தத் தரப்படுத்தல் காலம் வரை யாழ்பாணம் தவிர்ந்த மற்றைய தமிழ் மாவட்டங்களில் ஆரம்பக்கல்வி வசதியற்றும், பல்கலைக்கழக வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள போதிய தராதரங்களைப் பெறமுடியாத நிலையிலும் ஏழ்மை காரணமாக பின்தங்கியிருந்த மாணவர்களை இட்டு ஒருபோதும் தமிழ் அரசியல்வாதிகள் கவலைப்பட்டது கிடையாது. எப்படி இலவச கல்வியை எல்லோருக்கும் வழங்க கூடாது என்று ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற ஆதிக்க தலைமைகள் வெள்ளையரிடம் முறையிட்டனரோ அதேபோல இந்த மேட்டுக்குடிகள்  வடமாகாணத்தில் தாழ்த்தப்பட்ட தலித் மாணவர்கள் கல்வி கற்பதற்கு தடைவிதித்து சமூக நெருக்கடிகளை கொடுத்துக்கொண்டேயிருந்தனர்.  அவர்களுக்கான கல்விபெறும் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என இவர்கள் ஒருபோதும் கோரியதில்லை. 
ஏனைய தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை இன்றி கவனம் கொள்ள மறுத்த யாழ்ப்பாண வேளாள தலைமையும்  தனக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து மட்டுமே அழுதுபுலம்பியது. தனது நலன்களை காக்க கிழக்கு மாவட்டங்களின் மாணவர்களுக்குரிய உயர்கல்வி வாய்ப்புகளை தொடர்ந்தும் யாழ்ப்பாணத்துக்கு தாரைவார்க்கக் கோரியதாகவே இந்தத் தரப்படுத்தலுக்கெதிரான கூக்குரல் இருந்தது. இதையே தமிழீழம் கேட்பதற்கான பிரதான காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பிரச்சாரப்படுத்தினர். அப்படியென்றால் தமிழர்விடுதலைக்கூட்டணியினர்   தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவா அல்லது யாழ்ப்பாணத்தின் பிரதிநிதிகளாகவா இருந்தனர் என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகள்  தொடர்ந்து கிழக்குமாகாண மாணவர்களின் பல்கலைக்கழக வாய்ப்புகளை தம்மிடம் மட்டுமே தக்கவைப்பதற்காக அர்தமற்ற கோரிக்கையை முன்வைத்து தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த சட்டத்தின் பெயரிலேயே  தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் விளக்கமற்றுக் கிடந்த கிழக்கு மாகாண மக்களும் தமிழர்விடுதலைக் கூட்டணி பித்தர்களும் அன்று தமிழீழத்தை ஆதரித்தனர். தமது பரம்பரையினர் முதன்முதலாக பட்டம் பெறும் வாய்ப்புகளை வழங்கிய சிங்கள அரசுக்கு எதிராக யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகளுடன்  இணைந்து போராட்டக்களத்தில் குதித்தனர். அன்றைய கிழக்கு மாகாணத்தின் அறியாமையை என்னவென்று சொல்வது. அது ஒரு அற்புதமான மடத்தனம். ஆனால் இன்றைய கிழக்கின் நிலை வேறு.
»»  (மேலும்)

6/25/2021

மீண்டும் தீயா

MSC MESSINA  என்ற கொள்கலன் கப்பல் நடுக்கடலில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் மலாக்கா ஜலசந்திக்கு இடையில் இந்திய பெருங்கடலில் பயணிக்கும் போது குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கப்பல் கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் உள்ளதாக கூறப்படுகின்றது.
லிபேரியா நாட்டு கொடியுடன் குறித்த கொள்கலன் கப்பல் பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

»»  (மேலும்)

அமைச்சராகிறார் பஸில்

பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் எம்.பி.யாக பதவியேற்ற பின்னர் அடுத்த மாதம் பாராளுமன்றத்துக்கு வருவார் என்று அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அமைச்சரவை மறுசீரமைப்பில். நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன்இ பசில் ராஜபக்ஷ ஜூலை 6 ஆம் திகதி எம்.பி.யாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக அறியமுடிகின்றது.
பசில் ராஜபக்ஷவுக்கு இடமளிப்பதற்காக ரஞ்சித் பண்டாரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

»»  (மேலும்)

6/24/2021

'முன்னாள் விடுதலைப் புலிகள்' 16 பேர் உள்பட 94 பேருக்கு பொது மன்னிப்பு


 

பௌத்தர்களின் புனித நாளான பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, 94 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

சிறு குற்றங்கள் மற்றும் யுத்த காலப் பகுதியில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட 93 பேரை விடுதலை செய்வதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 16 தமிழ் அரசியல் கைதிகள் அடங்குவதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இந்த 16 பேரும் முன்னாள் விடுதலைப் புலிகள் என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.

»»  (மேலும்)

6/22/2021

இரங்கல் தெரிவித்தார் இராஜாங்க அமைச்சர்

மட்டக்களப்பு நகர் - மன்ரசா வீதியில் அமைந்துள்ள எனது வீட்டுக்கு முன்னால் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலை, மன வேதனையைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது, நான் கொழும்பில் இருந்த நிலையில், தொலைபேசி ஊடாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்க கூறியதுடன் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை உடன் முன்னெடுக்குமாறும்நீதியை நிலை நாட்டுமாறும், பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவருக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன். 

எனது வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் பிறிதொரு நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் மேற்படி நபர் காயமடைந்து, அதன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதில் மிக மிக வேதனை அடைகின்றேன். காலம் தாழ்த்தாது உரிய நீதியை நியாயத்தை நாட்ட கூடிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறு கூறியுள்ளேன். அத்துடன் இந்த விடயத்தில் எந்த எனது தனிப்பட்ட
விதமான பகையோ! கட்சி சார்ந்த அரசியலோ! இல்லை என்பதையும் தெளிவாகவும் , ஆணித்தரமாகவும் கூறிக் கொள்ள விரும்புகிறேன் .

»»  (மேலும்)

6/21/2021

பாதுகாப்புக்கன்றி பழிவாங்கவே சூடு


இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

அதில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 5.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
மணல் லொறியொன்றின் சாரதியே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறிய பொலிஸ் பேச்சாளர் சம்பவம் இடம்பெற்ற போது ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மூன்று நாட்களுக்கு முன்னதாக டிப்பர் சாரதியுடன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பிரதிபலனாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த டிப்பர் சாரதி முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அந்த உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

»»  (மேலும்)

அமைச்சர் வியாளேந்திரனின் வீட்டு வாயிலில் படுகொலை


மட்டக்களப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் மட்டக்களப்பு வீட்டிற்கு முன்பாக சற்று நேரத்துக்கு முன்பு இடம் பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் சென்ற ஒருவர் மீது இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் முச்சக்கர வண்டியில் வந்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியபோது பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தலையில் காயமடைந் நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
»»  (மேலும்)

6/20/2021

சந்தனமடு வீதி



சந்தனமடு பிரதேசத்தில் சுமார் 60.35 மில்லியன் ரூபா செலவில் இரண்டு கிலோமீட்டர் நீளமான பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஏழை விவசாயிகளின் அன்றாடப் போக்குவரத்து  இலகுபடுத்தப்படுகின்றது. 

விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய  பொருட்களை இலகுவாக ஏற்றிச்சென்று சந்தைபடுத்துவதை நோக்கமாகக் கொண்டே இப்பாதையானது உருவாக்க ப்படுவதாக  பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வின்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் சசிநந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும்கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

6/17/2021

கடலில் பஸ்களை போடுவது ரகசியம் என்ன?


“கடலில் காவியம் படைப்போம் என்று கூறி எமது மக்களுக்கு காடாத்து செய்தவர்கள்தான் கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிக்கும் புதிய திட்டத்தை விமர்சிக்கின்றனர்" அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலடி:

“கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு ஏதுவான கடல் நீரடி பாறைகளுக்கு ஒத்த பொறிமுறையை செயற்கையான முறையில் உருவாக்கும் பாவனைக்கு உதவாத புகையிரதப் பெட்டிகள், பேருந்துகள் கப்பல்கள் மற்றும் கொங்கிறீற் துண்டங்கள் போன்றவற்றை கடலின் அடியில் போடுகின்ற செயற்பாடு சுமார் 40 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் நீண்ட காலமாகப் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

17 ஆம் நூற்றாண்டில் இருந்து அமெரிக்காவில் இந்த முறையை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜப்பான் போன்ற நாடுகளில் கடந்த 150 வருடங்களாக இந்தப் பொறிமுறையில் ஆர்வம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைவிட, இந்தியாவின் தமிழகத்தின் பல்வேறு பகுகளிலும் கடந்த பல ஆண்டுளாக இவ்வாறான செயற்கை இனப்பெருக்க பொறிமுறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, கடந்த 2017 ஆண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியேறிய கப்பல் ஒன்று எண்ணெய் ராங்கர் உடன் மோதியமையினால் ஏற்பட்ட எண்ணெய் பரவல் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. இதனால் கடல் வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவாக மீள்வதற்கு செயற்கையான கடல் நீரடிப் பாறைகளை உருவாக்கும் இதே பொறிமுறைதான் முன்மொழியப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி, பாவனைக்கு உதவாத பேருந்துகளை கடலில் இறக்கும் வேலைத்திட்டத்தினை எமது அரசாங்கம் ஏற்கனவே, தென்னிலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கு தென்னிலங்கையில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, வடக்கு கடல் பிரதேசத்தில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளினாலும் ஏனைய சில காரணங்களினாலும் கடல் வளம் குறைவடைந்து வருவதாகவும் கடல் நீரடிப் பாறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதனை விஞ்ஞான ரீதியான ஆய்வறிக்கைகளும் உறுதிப்படுத்தியிருந்தன.

இந்நிலையிலேயே, தேவையான ஆய்வுகள் மூலம் பொருத்தமான இடங்கள் தெரிவு செய்து, குறித்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஆனால், சிலர் சுயநலன்களுக்காவும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், இந்தச் செயற்றிட்டம் தொடர்பாகவும், கடந்த காலங்களைப் போன்றே தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர்.

Source: https://thesamnet.co.uk/?p=74326

கடலில் காவியம் படைப்போம் என்று ஓவியம் தீட்டி உசுப்பேற்றி எமது மக்களுக்கு காடாத்தி செய்தவர்கள்தான், பேருந்துகளை கடலில் போட்டு கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக ஊழையிடுகின்றனர் ” என்று தெரிவித்தார்.
»»  (மேலும்)

6/16/2021

மட்டக்களப்பில் சதோச,ஒலுசல விற்பனைக் கூடங்கள்


மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் கெளரவ பந்துல குணவர்த்தன அவர்கள் இன்று மட்டக்களப்புக்கு வருகை தந்தார்.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக நெல் கொள்வனவு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாகவும் மட்டக்களப்பில் ச.தொ.ச 'மெகா' சுப்பர்மார்க்கற் அமைப்பது தொடர்பாகவும் ஒரே கூரையின் கீழ் பனை அபிவிருத்தி சபை, ஒசு சல ,பால்சபை,மக்கள் வங்கி கிளை,மற்றும் பல அரச தனியார் நிறுவனங்களின் விற்பனை கூடங்களையும் திறப்பது தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தவைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கருணாகரன் அவர்களும்.மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .சுதர்சினி. ஸ்ரீகாந்த் அவர்களும். மற்றும் பல அரசாங்க உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 
»»  (மேலும்)

6/14/2021

பயனற்றுப் போகும் அதிகார முயற்சிகள்


 கொரோனா கோலோச்சும்  இன்றைய கால கட்டம், வாழ்வா சாவா என்றுதான் இருந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் பல முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருந்தாலும் கொரோனாவின் ஆதிக்கம் வலுத்தே வருகிறது. கொரோனாவை அரசாங்கம், அரசியலுக்காகவும் அதிகாரத்துக்காகவும் பயன்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தவண்ணம் காணப்படுகிறது.  அதற்கு மாவட்டம், மாகாணம், தேசியம் போன்ற மட்ட வேறுபாடுகளும் இல்லை.  இருந்தாலும், அதற்குள்ளும் அரசியல் செய்யத்தான் வேண்டும் என்ற நிலையில், பொருளாதார அரசியல்,  சமூக அரசியல், இன அரசியல் சார்ந்து நாடு நகர்கிறது.

மட்டக்களப்பு மாவட்டமானது, கிழக்கின் முக்கிய  அரசியல் அதிகாரங்கள், பலம்மிக்கதாக நகர்கின்ற பிரதேசமாகும். இந்த நிலையில்தான் மாவட்டத்தின் ஓட்டமாவடியை மையப்படுத்திய  பதிவாளர் செயற்பாடு, கோரளைப்பற்றுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

அது ஒரு விழாவுக்கு நிகராக, கடந்த 31ஆம்திகதி மகிழ்ச்சி கொண்டாடவும் பட்டது.  அதற்குள் அது ஓர் அரசியல் கபளீகரம் என்று சொல்லுமளவுக்கான வேலைத்திட்டம் நடைபெற்று, ஒரு வாரத்துக்குள் இல்லாமலும் செய்யப்பட்டிருக்கிறது.

இதில்,  தமிழர்கள் பிரயோகித்த அஸ்திரம் பயனற்றுப் போயிருக்கிறது. எடுத்த முயற்சி பயனற்றுப் போனதைக் குறித்துக் கவலை கொள்ளாமல், இனி எடுக்கும் நடவடிக்கைகள், முயற்சிகள், சிந்தித்து நகர்த்தப்பட வேண்டும் என்று பாடம் கற்றுக் கொண்டதாகவே கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், ஒரு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் அதிகாரத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக கொள்ளப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவு முடிவாக இருக்கச் செய்யப்பட வேண்டும். இல்லையானால் தேசிய மட்டத்தில் இருக்கும் அதிகாரத்துக்கு அது இழுக்கே.

நாட்டில் நடைபெற்றுவரும் எந்தவொரு விடயமும், இன ஆதிக்க அரசியலாகப் பெயர் சூட்டப்படுவதற்கு அந்நடவடிக்கையின் தன்மை, அதன் ஆதிக்கம், ஆளுகை மற்றும் பல விடயங்களும் காரணமான இருப்பதாகவே கொள்ள வேண்டும். இந்தப் பதிவாளர் பிரிவு மாற்றப்பட்டதற்கும் அவ்வாறான காரணம் இருப்பதாக குற்றமும் சாட்டப்படுகிறது.

இவ் விடயத்துக்கு இறுதி நேரத்தில்,  முன்னாள் கிழக்கு மாகாணத்தின் இரண்டு முதலமைச்சர்கள் சம்பந்தப்பட்டனர். ஒருவர் கிழக்கின் முதல் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன். 

மற்றையவர் நசீர் அஹமட். தற்போதைய நாடாளுமன்றத்தில் இவர்கள் இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுப்பினர்கள். அதற்கும் மேலாக இருவரும் ஆளும் தரப்புடன் நெருக்கமானவர்கள்.

இப்போது, இந்தப்பதிவாளர் பிரிவின் மாற்றத்திற்கு காரணமாக இருந்தவர் சிவநேசதுரை சந்திரகாந்தன். அது நிறுத்தப்பட்டதற்கு, நசீர் அஹமட் காரணம். இதனை முஸ்லிம், தமிழ் அரசியல் ஆதிக்கமாகக் கொண்டாலும், இது கடந்த சில வருடங்களிலிருந்து தொடங்கப்பட்டதொரு விடயமல்ல  என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். 

1973 - 1974களிலிருந்து ஆரம்பமான இந்த பதிவாளர் விடயம், கடந்த காலங்களில் ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படாமை காரணமாக தூண்டப்படவில்லை.

 ஆனால், கடந்த 2012 காலப்பகுதியில் இப் பதிவாளர் விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனால் கையிலெடுக்கப்பட்டு நகர்த்தப்பட்டு வந்துள்ளது; இதனை அவர் உறுதிப்படுத்துகிறார். 

அப்போதிலிருந்து, திரைமறைவில் மாவட்டத்திலிருந்த ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளால் காதும் காதும் வைத்தது போன்று, சமாளிக்கப்பட்டே வந்திருக்கிறது. 

இந்த அரசாங்க காலத்தில் இவ்விடயம், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனால் கையிலெடுக்கப்பட்டு, நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த இப்பிரச்சினை, நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்வதனைவிடவும், மூடிக்கிடந்த பிரச்சினை வெளியில் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.

இந் நடவடிக்கை சரிவராமல் போனதற்கு, அதன் ஆரம்பகாலங்களிலிருந்தான வரலாறுகளும் நடைமுறைகளும் காரணமாகும். ஆனாலும், இனிவரப்போகும் சிக்கல்கள்தான் மிகச்சிரமமானவையாக இருக்கப்போகின்றன. 

அதில் முக்கியமானது, கோரளைப்பற்றிலுள்ள மூன்று பிரதேச செயலகங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, 1990களில் உருவாக்கப்பட்ட கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, 2003 களில் 08 கிராமசேவையாளர் பிரிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவையே அவை.

தமிழ் அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் முஸ்லிம்களுடைய  உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்ற கோணத்தில் பார்க்கப்பட்டு கொண்டுவரப்பட்ட பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபை, கல்வி வலயங்கள், வைத்தியசாலைகள் என கிழக்கில் பல உதாரணங்கள் காணப்படுகின்றன. 

இவ்வாறான நிலையிலேயே எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியதாக, பதிவாளர்  விவகாரம் இருக்கிறது. இது முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான சந்திரகாந்தனுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் இரண்டு பக்கங்களுக்கும் சாதக பாதகங்களையே, கடந்த காலங்களில் கொடுத்திருக்கின்றன. 

அதில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்கிற போட்டி, கடந்த அரசாங்கங்களில் எப்படியோ இப்போதைய அரசாங்கத்திலும் அப்படியே இருக்கிறது.   

தற்போதைய அரசாங்கத்திலும் சரி, கடந்த காலங்களிலும் சரி தம்மை கிழக்கிலுள்ள தமிழர்கள் அடக்க முனைகிறார்கள் என்பதான முஸ்லிம்களின் பார்வை ஒன்றிருக்கிறது. ஆனாலும் தமிழர்களின் பெரும்பாலானவர்களில் முஸ்லிம்களும் தங்களுடன் இணைந்தே வருவார்கள், செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையே இருக்கிறது. 

இந்த எண்ணம், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும் இருந்தாலும் கூட, இந்த எதிர்பார்ப்பை முன்நகர்த்துவதற்கு அரசியல் தரப்புகளும் சரி, சமூக மட்டத்தினரும் சரி   முயற்சிகளை மேற்கொண்டதாக இல்லை. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இப்போதும் நப்பாசையுடன்தான் இருக்கிறது என்பதற்கு, கடந்த மாகாண சபையின் முதலமைச்சை, முஸ்லிம்களுக்கு வழங்கியதை உதாரணமாகக் காட்டுகிறார்கள்.

இது பிழை என்றும் சரியென்றும் வாதாடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம்களுடன் இசைந்து பேசி, அதனைத் தரமுயர்த்த முடியும் என்ற நம்பிக்கை இப்போதும் அக்கட்சிக்கு இருக்கிறது. 

ஆனால், அது நடைபெறக்கூடியதல்ல என்கிற முடிவுடன் ஆளும் தரப்பையும், ஆளும் தரப்பு ஆதரவு அணியையும் கல்முனை மக்கள் நாடிக் கொண்டிருக்கின்றனர்.

நாடாளுமன்ற உறப்பினர்  ஹாபிஸ் நசீர் அஹமட், ஓட்டமாவடி பிரதேச பதிவாளர் விவகாரம் குறித்து வெளியிட்ட கருத்தில், “ஆயுத அடக்குமுறைக்கு அடி பணியாத இனத்தை, அதிகார ஒடுக்குமுறைகளால் அடிமைப்படுத்த முயற்சி” என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அவருடைய கருத்துகளின் படி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு, இறப்புகளுக்கான பதிவுச்சான்றிதழ்கள், கடந்த 48 வருடங்களாக, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தாலே வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதாகும். 

ஆனால், ஓட்டமாவடி பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. 1990களிலாகும். எல்லோரும் சொல்வதுபோல், 48 வருடங்களாக இருந்த நிலைமையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதல்ல. 

அவ்வாறானால் கோரளைப்பற்று மேற்கு எனப்படும் ஓட்டமாவடி பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டபோது, மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இந்தப்பதிவாளர் மாற்றம், நடைபெறாமல் இருந்தது தவறு என்பதை, இதில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியதாகும். 

இன விடுதலைப் போராட்டப் பயங்கரம், இன்னல்கள், காட்டிக் கொடுப்புகள், காணாமல்போதல்கள், நெருக்குதல்கள், நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டிருந்த தமிழர்கள், இவ்வாறான விடயங்களை கணக்கில் கொள்ளவில்லை.

தங்களுடைய பொருளாதாரத்தை, சமூக மேம்பாட்டு விடயங்களை அடைந்து கொள்வதற்கான காலம் என்ற வகையில், இப்போது சில நகர்வுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமே என்ற வகையில்தான்,  பதிவாளர் விவகாரம் பார்க்கப்பட வேண்டும். அந்த வகையில் இது தொடக்கமாகவே இருக்கவேண்டும்; இருக்கும்.

இந்த ஒழுங்கில், கோரளைப்பற்றிலிருந்து வேறு வேறு வருடங்களில் பிரிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான இரண்டு பிரதேச செயலக பிரிவுகளுக்குமான எல்லைகள் பிரிக்கப்பட்டு, பொதுச் சொத்துகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியமை நேர்மையான நியாயத்தின் படி நடைபெற வேண்டும்.

அது நடைபெறும் போது,  “மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள், ஏற்கெனவே, காணி மற்றும் வாழிடங்களுக்கான நிர்வாக எல்லைகளில், சிலரின் அதிகாரத் தொல்லைகளுக்கு உட்பட்டு உள்ளனர். இன்னும் அவ்வாறான அதிகாரப் பயங்கரவாதமே தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. 

அதிகாரப்பகிர்வை கோருகின்ற ஓர் இனம், தம்முடன் பிணைந்து வாழும் மற்றொரு இனத்தைத தொடர்ச்சியாக நசுக்குவதும் வஞ்சிப்பதும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. ஆயுதக்கலாசாரத்தால் ஓரினத்தை மண்டியிட வைப்பதில், தோற்றுப்போன அரசியல்வாதிகள், தற்போது அதிகார பலத்தின் மூலம் அவர்களை ஒடுக்கமுடியுமென நப்பாசை கொண்டுள்ளனர்.  

குறித்த  இனத்தின் மீது, பாரபட்சங்களைச் செலுத்தும் இந்தக் கருவறுத்தல்கள் தொடர்வதற்கு நான், ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை’’ என்று முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கருத்துகள் வௌிப்பட்டுள்ளன. இக்கருத்துகள் பொப்பிக்கப்படும்.பொய்ப்பிக்கப்படவும் வேண்டும்.


"நன்றி தமிழ் மிரர்

இல.அதிரன்

athirantm@gmail.com



»»  (மேலும்)

சீனா vs G7


சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது," என சீனா, ஜி7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது.

சீனாவை விஞ்சும் நிலையை தாங்கள் ஒன்றிணைந்து எட்ட வேண்டும் என இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சி மாநாட்டில் அந்த நாடுகளின் தலைவர்கள் எடுத்துள்ள முடிவுக்கு, லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதே போன்ற ஒரு திட்டத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. அதற்கு போட்டியாகவே ஜி7 அமைப்பின் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

எழுச்சி பெற்று வரும் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேற்குலக நாடுகள் செயல்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி கொண்டுள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

»»  (மேலும்)

6/11/2021

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்


இலங்கையில் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக சடுதியாக அதிகரித்து வருகிறது.

இலங்கையில் முதல் முறையாக நாளொன்றில் 100ற்கும் அதிகமான கோவிட் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று தகவல் வெளியிட்டது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை ஒரே நாளில் 101 உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகக் கூறுகிறது.

இறுதியாக 53 ஆண்களும், 48 பெண்களும் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.


»»  (மேலும்)

பயணத்தடை 21 வரை தொடரும்


பயணத்தடை 21 ம் திகதிவரை நீடிப்பு
தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் பயணத் தடை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பயணத் தடை காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட மேலும் சில சேவைகளுக்கு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதன்படி, ஆடைத் தொலிற்சாலைகள், முக்கிய கட்டுமான தளங்கள், வாரத் சந்தை, கரிம உர உற்பத்தி நடவடிக்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கி நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

6/07/2021

மட்டக்களப்பு சிறையதிகாரி மரணம்

மட்டக்களப்பு சிறைச்சாலை சிரேஸ்ட சார்ஜன் தரத்திலான அதிகாரி இராஜசேகரம் இன்று காலை காலமாகியுள்ளார்.
கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

»»  (மேலும்)

6/04/2021

இலங்கைக்கு பயணத்தடை

கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் - டொபாகோ ஆகிய 07 நாடுகளே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானிய பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது
»»  (மேலும்)

பிறப்பு பதிவு இடமாற்ற எதிரொலி வாழைச்சேனை பிரதேச சபையிலும்



நேற்று வியாழன் அன்று கூடிய வாழைச்சேனை பிரதேச சபையில் கொண்டு வரப்பட்ட இரு தீர்மானங்களும் தேற்கடிக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கி வந்த 03 முஸ்லிம் உறுப்பினர்கள் சபை அமர்வுகளை பகிஸ்கரித்தன் காரணமாக குறித்த தீர்மானங்கள் நேற்று தோற்கடிக்கப்பட்டுள்ளன.

 இப் பிரச்சனைகளுக்கு பின்னணியாக ஒட்டமாவடி வாழைச்சேனை பிரதேச செயலக பணிகள் சார்ந்து நடைபெறும் பிறப்பு பதிவு நடைமுறையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே காரணமாக சொல்லப்படுகின்றது.


 அதாவது இதுவரை காலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிறப்பு பதிவுகள் ஒட்டமாவடி பிரதேச செயலகத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந் நிலையில் அண்மையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதன் காரணமாக வாழைச்சேனையில் பிறந்த குழந்தைகளை அவ் வைத்தியசாலை அமைந்துள்ள வாழைச்சேனை பிரதேச செயலகத்திலேயே பதிவு செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை ஓர் இனவாத செயற்பாடாக  முஸ்லிம் அரசியல்வாதிகள் சித்தரிக்க முனைகின்றனர். 
இதன் தொடர்ச்சியாகவே வாழைச்சேனை பிரதேச சபையும் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
»»  (மேலும்)