சிறைக்குள் இருந்தும், மோடியை எதிர்த்து ஒரு தேர்தல் வெற்றி!
சமூக செயற்பாட்டாளரான அகில் கோகாய் பா.ஜ.க அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது 13 வழக்குகளைப் பதிவு செய்தது தேசிய புலனாய்வு முகமை.
அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் துவங்கிய ரைஜோர் தள கட்சியின் சார்பாக சிவ்சாகர் தொகுதியில் போட்டியிட்டார் அகில் கோகாய்.
பிள்ளையானுக்கு பிரதமர் ரணில் ஆளனுப்பி நேரம் பேசியது போல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தால் உடனடியாக பிணை வழங்குவோம் என்றும், பா.ஜ.க-வில் இணைந்தால் தேர்தலில் போட்டியிட்டு பா.ஜ.க அமைச்சராகலாம் என்று ஆசைகாட்டப்பட்டார். ஆனாலும் அவர் உறுதி தளரவில்லை.
இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் 57,173 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் அகில் கோகாய்.
பிள்ளையானுக் எதிராக சுமந்திரனும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தரும் பரப்புரை செய்துதபோல் பிரதமர் மோடியே அதில் கோகாய்க்கு எதிராக தேர்தல் பரப்புரை செய்த நிலையில், அகில் கோகாய் சிறையிலிருந்து கொண்டே
ஒருநாள் கூட நேரடியாக பரப்புரை செய்யாமலேயே வெற்றி பெற்றுள்ளார்.
ஒருநாள் கூட நேரடியாக பரப்புரை செய்யாமலேயே வெற்றி பெற்றுள்ளார்.
0 commentaires :
Post a Comment