கடந்த ஒரு வாரமாக சிலிக்கொடியாற்றில்
இடம்பெற்ற மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியில் சுமார் 28 விளையாட்டு கழகங்கள் பங்கேற்று இருந்தனர்.
இதில் இறுதிச்சுற்றுக்கு பனையறுப்பான் கஜமுகா விளையாட்டுக் கழகம் மற்றும் காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகமும் தெரிவாகி நேற்றைய தினம் இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இடம்பெற்றன.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் இரண்டு அணிகளுமே ஒரு கோள்களும் போடவில்லை பின்னர் பெனால்டி முறை வழங்கப்பட்டது. இதில் காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகமானது வெற்றிக்கிண்ணத்தை தன்வசப்படுத்திக்கொண்டது.
இப் போட்டிக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் அவர்கள் பிரதம அதீதியாக சிறப்பித்திருந்தமை குறிப்பிடக்கத்தக்கது.
0 commentaires :
Post a Comment