நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் தந்த விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் விவசாயத்தை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூபா 147 மில்லியன் ரூபாய் செலவில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் நிலக்கடலை பதப்படுத்தல்நிலையம் திறந்து வைக்கப்பட்ட்டது.
அதேபோன்று ஏற்றுமதிக்காக வழங்கப்பட்ட ரூபாய் 350 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படும் பச்சை வெள்ளரிக்காய், மிளகாய், தர்பூசணி என்பனவற்றை ஏற்றுமதிக்கு முன் பகுதியாக பதப்படுத்துவதற்கு ரூபா 600 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கான அடிக்கல்லும் நடப்பட்டது.
அத்துடன் கௌரவ விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய செயற்பாடுகளை அவதானிக்கும் வண்ணம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல இடங்களுக்கு விஜயம் தந்து நிலைமைகளை அவதானித்ததுடம் அங்குள்ள மக்க்குக்கு எதிர்காலத்தில் விவசாய விருத்திக்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் தான் முன்னெடுப்பேன் என்ற உறுதிமொழியினை வழங்கியதுடன் அங்குள்ள கமநல அமைப்புக்களுக்கு 4 உளவு இயந்திரங்களையும் வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் அங்கு பயன்படுத்தப்படாத ஏராளமான காணிகளையும் உற்பத்திகளை ஊக்குவிக்கும்
பொருட்டு இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற எமது கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கோரிக்கையினை ஏற்று மிக விரைவாக அங்குள்ள காணிகளை பகிர்ந்தளிக்க நவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தற்போதைய கொவிட் சூழலிலும் அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றும் வண்ணம் உள்ளூர் உற்பத்தி, விவசாயம் போன்றவற்றை விருத்தி செய்து தன்னிறைவு அடையும் வண்ணமாக பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அதில் குறிப்பாக கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. அதன் மூலமாக 25,000 மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை நாடளாவிய ரீதியில் வழங்குவதற்கான வேலைத்திட்டங்களும் தற்போது நடைபெற்றுக் வருகின்றது.
0 commentaires :
Post a Comment