3/30/2021

கந்தன் கருணை படுகொலை நினைவு தினம்

கந்தன் கருணை எனப்படுவது  யூலியன் வாலாபாக், கீழ் வெண்மணி வெலிகடை சிறைபடுகொலைகளுக்கு நிகரான  புலிகலின் வதை முகாம் படுகொலை.  1987மார்ச் 30 இல் 60 இற்கு மேற்பட்ட   கொன்று பலியாக்கப்பட்ட தோழர்கள் போராளிகளின் இரத்தம் கழிவு கால்வாயில் வெள்ளமென ஓடியதை கண்கண்ட சாட்சியமான தோழர்களும்  காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.  இரத்த சாட்சியங்கள் இம் மரணத்துள் உயிர்த்தவர்கள் சிலர் இன்னும் வாழ்கின்றனர்
குரூரமான  மரணங்கள். சொந்த சகோதரர்கள் எனப்படுவோரால் அரங்கேற்றப்பட்ட மாபாதகம். தமிழ் தேசிய வெட்கம்.. அருணா என்ற கொடியவன் ஜெனரல் டயரின் பாத்திரத்தை ஏற்றிருந்தான்.
இது உயரியசமூக கனவுகளுடன் புறப்பட்டவர்களின் உயிரின் வலி.  இவை போன்ற பல நூறு மரணங்கள். கூட்டம் கூட்டமாக எம் சமூகத்தின் அவல சரித்திரத்தில்.


நன்றிகள் தோழர் சுகு

»»  (மேலும்)

3/27/2021

முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தர் பிறந்த தினம்


இன்று சுவாமி விபுலானந்தரின் 129ஆவது பிறந்த தினம்...

அதிகாலை வேளை கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளரும் ஊழியர்களும் வாழைச்சேனை விபுலானந்த வீதியிலுள்ள விபுலானந்தர் சிலையினை சுத்தம் செய்து மரியாதை செய்தனர்.
»»  (மேலும்)

3/25/2021

தாயகம் குருசேவின் மூன்று நூல்கள் வெளியீடு.


தாயகம் குருசேவ் அவர்களின் 3 நூல்கள் வெளியிடப்பட இருப்பதாக அறிகிறேன் . தோழர் குருசேவின் உன்னத எழுத்துக்களின் காலம் இருண்டது. ஆர்வமூட்டிய நம்பிக்கையூட்டிய மனிதர்களில் ஒருவர். எல்லாரும் போனாப்போல நானும் போறேன் சாமி மலை என்ற ஏஈ மனோகரனின் பாடல் வரிக்கேற்ப எழுதும் கும்பல்கள் பல பரவலாக உலகளாவிய அளவில் தமிழ் பாசிசத்திற்கு அடியழித்து திரிந்த காலம்.
மறைந்த துக்ளக் ஆசிரியர் சோவிற்கு நிகரான எழ்ழலுடன் ஈழத் தமிழ் ஆசாடபூதிதனமும் ஜனநாயகவிரோதமானதுமானதுமான அரசியலை கேள்விக்குள்ளாக்கியவர் சர்வதேச பிரக்ஞையுடன் ஈழ அரசியலை இணைத்துபார்த்தவரும் பிரான்சில் எமது முற்போக்கு மரபில் அழுத்தமான பங்களித்தவருமான மறைந்த தோழர் உமாகாந்தனுடன் அன்னியோன்னியமான மனிதர். இவ்வாறு காற்றடிக்கிற பக்கம் சாயாத விழுந்த பாட்டுக்கு குறிசுடாத சில மனிதர்கள் ஊரிலும் உலகளாவிய அளவிலும் சிலர் இருக்கிறார்கள் .சிலர் மறைந்து விட்டார்கள். அவர்கள் தான் இந்த சமூகத்தின் நோய்க்குணங்குறிகளைவெளிப்படுதினார்கள். வெளிப்படுதுகிறார்கள். நேரடி பரிச்சயம் இல்லாவிட்டலும் நாமெல்லாம் தோழர்கள் என்ற மானசீக உணர்வை ஏற்படுதியவர்கள் இவர்கள் வாழ்த்துக்கள் தோழர் குருசேவ்!

நன்றிகள் தோழர் சிறிதரன் (சுகு)

»»  (மேலும்)

3/24/2021

ஜெனிவா ஒரு காகித துப்பாக்கி

இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியும் வெற்றியும்


இலங்கையை மிரட்டி அடிபணிய வைப்பதற்காக பலம் பொருந்திய மேற்கு நாடுகளால் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவந்த தீர்மானம் 22 நாடுகளின் ஆதரவைப் பெற்று ‘வெற்றி’ பெற்றுள்ளது. இந்த முடிவு முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுதான். இந்தத் தீர்மானம் இலங்கைக்குத் தோல்வி எனக் காட்டப்பட்டாலும், நீதி செத்துவிடவில்லை என்ற உண்மையும் இதில் பொதிந்து கிடக்கிறது.

தீர்மானத்தை ஆதரித்த நாடுகள் மேற்கத்தைய வலதுசாரி நாடுகளும் அவற்றின் பாரம்பரிய அடிவருடி நாடுகளும்தான். தீர்மானத்தை எதிர்த்த 11 நாடுகளில் மேற்கத்தைய ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளான சீனா, ரஸ்யா, கியூபா, வெனிசூலா, எரித்திரியா, பொலிவியா, பிலிப்பைன்ஸ் என்பனவும் மற்றும்  பாகிஸ்தான், பங்களாதேஸ், சோமாலியா, உஸ்பெக்கிஸ்தான் என்பனவும் அடங்குகின்றன.

வாக்காளிப்பில் கலந்து கொள்ளாத 14 நாடுகளில் இந்தியா, யப்பான், இந்தோனேசியா, லிபியா, நேபாளம் என்பன முக்கியமானவை. வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நாடுகளும் மேற்கு நாடுகளின் இலங்கைக்கு எதிரான மிரட்டல் போக்கை ஏற்றுக் கொள்ளவில்லை எனப் பொருள் கொள்வதில் தவறேதும் இல்லை. மனித உரிமைப் பேரவையில் உள்ள 47 நாடுகளில் 22 நாடுகள் மட்டும் தீர்மானத்தை ஆதரித்ததின் மூலம் இது ஒரு சிறுபான்மைத் தீர்மானம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தத் தீர்மானத்தால் இலங்கைக்கு பெரிதாக ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இப்படியான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் அவை இன்றுவரை வெறும் காகிதங்களாகவே இருக்கின்றன. உதாரணமாக, கியூபா மீதான அமெரிக்க பொருளாதாரத் தடையை நீக்கும்படி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அமெரிக்கா இன்றுவரை அத்தீர்மானங்களை சட்டை செய்யவில்லை. அதேபோல, பாலஸ்தீனத்தில் தான் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் எனப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், இஸ்ரேல் அவற்றை மதித்து நடக்கவில்லை.

உண்மையில் சட்ட விரோதமாக நடந்து குற்றமிழைத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐ.நா. தீர்மானங்களை மதிக்காதபோது, அரசியல் உள் நோக்கங்களுடன் இலங்கைக்கு எதிராக வேண்டுமென்றே மேற்கு நாடுகளால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை மதித்து நடக்கும் என எதிர்பார்க்க முடியாது.

 நன்றிகள் தோழர்-மணியம்
»»  (மேலும்)

3/12/2021

கிழக்கு மாகாணசபை தேர்தல்_ ஜனாதிபதி_ பிள்ளையான் உரையாடல்




இன்று காலை மு.ப10.00 மணியளவில்   ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்களுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது 

இதில் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் எதிர்கால கிழக்கு மாகாணசபை தேர்தல் போன்ற பல முக்கியமான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டததாக தெரியவருகின்றது.

 இதன்போது விரைவில் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தருவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பலவிதமான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்து சந்திரகாந்தன்  முன்வைத்த வேண்டுகோளின் பேரில்  எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலும் கூடுதலான நிதி உதவிகள் வழங்கப்படுமென ஜனாதிபதி உறுதிமொழி அளித்தார்.

அத்துடன் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் நேரடியாக கலந்துரையாடி குறைபாடுகள் இருந்தால் அவற்றை உடனுக்குடன் தீர்த்து கொள்ள இருப்பதாகவும் இச்சந்தர்ப்பத்தில் முடிவுகள் எட்டப்பட்டது. 
»»  (மேலும்)

3/08/2021

மட்டக்களப்பில் சர்வதேச பெண்கள் தினம்

சர்வதேச பெண்கள் தினமான இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் தின நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை 3 மணி அளவில் இடம்பெற்ற நிகழ்வில் சுமார்  700 பெண்கள் பங்குபற்றினர். "பெண்களின் வலிமைக்கு வலு சேர்ப்போம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வினை






மகளிர் அணி செயலாளர் செல்வி மனோகரி தலைமையேற்று நடத்தினார். இந்நிகழ்வில் தமது குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் பெண்களின் ஆளுமையை நிலைநிறுத்தி வெற்றி கண்ட பெண்கள் தெரிவுசெய்யப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். மேலும் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பற்றது.

கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரது பங்களிப்பும் கட்சியின் பிரதி செயலாளர் ஜெயராஜ் அவர்களின் வழிநடத்தலும் இந்நிகழ்வை மென்மேலும் சிறப்பாக உதவியது.
»»  (மேலும்)

3/06/2021

"உங்களுக்கு ஒரு வீடு" மண்முனை பிரதேசத்தில் ஆரம்பம்

 "உங்களுக்கு ஒரு வீடு" என்கின்ற திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் உள்ள ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் 5 வீடுகளை வழங்கும் தீர்மானத்திற்கமைய மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேசத்தில்  முதற்கட்டமான வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பற்றது.

புதுமண்டபத்தடி கி.சேவையாளர் பிரிவு மற்றும் நெடியமடு கிராம சேவையாளர் பிரிவில் ஆகிய இரு இடங்களில்

இடம்பெற்றது.

மட்/மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் இணைப்புச் செயலாளர் திருமதி மங்களேஸ்வரி சங்கர்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதிச் செயலாளர் ஜெயராஜ், வவுணதீவு பிரதேச அமைப்பாளர் போன்றோர் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

3/03/2021

கராத்தே வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைத்தார் சந்திரகாந்தன்


மட்டகளப்பு S.K.O விளையாட்டு கழகத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கராத்தே மாணவர்களுக்கான தரப்படுத்தல் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த திங்களன்று இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட  பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் கராத்தே வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

»»  (மேலும்)

3/01/2021

ரி எம் வி பி அணி பத்து தமிழரசுக் கட்சி அணி 5

ஆரையம்பதி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தர்மரெத்தினம் தயானந்தன் தெரிவு


 ஆரையம்பதி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன்தலைமையில் இன்று இடம் பெற்றது.

இதன் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அமோக ஆதரவுடன் 
 தர்மரட்ணம் தயானந்தன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். 

இச் சபையானது 17 உறுப்பினர்களை கொண்டிருந்த போதும் இதில் 16 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருந்தனர் இதில் ஒருஉறுப்பினர் நடுநிலை வகிக்க ஏனைய உறுப்பினர்கள் புதிய தவிசாளர் தர்மரட்ணம் தயானந்தனுக்கு ஆதரவாகவும் ஏனைய ஐந்து உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர் இதன் அடிப்படையில் புதியதவிசாளராக தர்மரட்ணம் தயானந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் மட்டக்களப்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள் புதிய தவிசாளருக்கும் அங்கிருந்த ஏனைய உறுப்பினர்களுக்கும் பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது....

நன்றி batti tv
»»  (மேலும்)

என்னை கலைக்க முயன்றார்கள் நான் கட்சியைக் கலைத்து விட்டேன்


நுவரெலியா – தலவாக்கலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியுடன் தொழிலாளர் தேசிய முன்னணி முடிவடைந்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து எம்.எஸ்.செல்லசாமி விலகிச் சென்ற சந்தர்ப்பத்தில், தொழிலாளர் தேசிய சங்கத்தில், மயில் சின்னத்திலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சூழ்ச்சி காரணமாகவே தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னம் இல்லாது செய்யப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே, தொழிலாளர் தேசிய முன்னணி என்ற கட்சியை நாம் யாப்பு எழுதி உருவாக்கினோம்.

இவ்வாறான நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வருகை தந்துள்ள ஒரு கூட்டம், தொழிலாளர் தேசிய முன்னணியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே, என்னை அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்தக் கட்சியை அவர்களின் தேவைக்கு ஏற்ப நடத்த முயற்சித்து வருகின்றனர்.

இதனாலேயே கட்சியை கலைக்கும் தீர்மானத்தை எடுத்து, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகினேன். இனிவரும் காலங்களில் அவர்கள் வேறொரு அரசியல் கட்சியை உருவாக்கி, செயல்படுவதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.

தொழிலாளர் தேசிய முன்னணி மூலம் அடைய நினைத்த அரசியல் இலக்குகளை, எதிர்வரும் காலத்தில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலின் ஊடாக அடைய முயற்சிப்பேன்.

இதேவேளை, என்னுடன் பேசி தீர்க்க வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்பட்ட போதிலும், அதைப் பேசி தீர்த்துக்கொள்ளாமல், நயவஞ்சகமான முறையில் என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட நயவஞ்சக செயல்பாடுகளை, மக்களுக்கு வெளிப்படுத்துவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

»»  (மேலும்)