2/09/2021

பிள்ளையான் சறுக்கிய இடம்

சந்திரகாந்தன்  முதல்வராக இருந்த காலத்தில் பலவிதமான அபிவிருத்திகளை செய்து பெயரெடுத்தவர். யுத்தத்தால் அழிந்து கிடந்த கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பை தூக்கி நிமிர்த்திய அரசியல்வாதி யாரென்று கேட்டால் எந்த குழந்தையும் சொல்லும்பெயர் பிள்ளையான். அவர் தெரிந்தவர்களுக்கும் பிள்ளையான்.தெரியாதவர்களுக்கும் பிள்ளையான்.பெரியவர்க்கும் பிள்ளையான் சிறியவர்க்கும் பிள்ளையான். அதுதான் அந்தப்பெயரின் சிறப்பு. 


அரசியல் வாதிகள் அபிவிருத்தி திட்டங்களை தொடக்கி வைக்கும் போது கல் வைப்பது வழமை. ஆனால் அதில் பல கற்கள் முளைப்பதில்லை. கடந்தகாலங்களில் மண்டூர் பாலத்துக்கு ஒருவர் வைத்த கல் இன்னும் முளைக்கவில்லை. தேர்தல்கள் வந்தால் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பலர் அபிவிருத்தி திட்டங்களுக்கு கல் வைப்பர்.  தொடக்கநாள் விழாவோடு சிலரின் பணிகள் முடிவடைந்துவிடும். ஏனெனில் சிலர் மக்களை ஏமாற்றுவதற்காக  நிதி ஒதுக்கீடு கிடைக்காமலேயே திட்டங்களை  அறிவித்து அதிகாரிகளையும் அழைத்து கல் வைத்து விடுவார்கள்  ஆனால் பிள்ளையான் அப்படியல்ல. வைத்தும் 
அவர் கல் வைத்தால் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை உரியகாலத்தில் பெற்றுவிடுவார். அதிகாரிகளை தூங்கவிடமாட்டார். அடிக்கடி வருகைதந்து கட்டட பணிகளில் சிறுசிறு பிழைகளைக்கூட துல்லியமாக அவதானித்து திருத்தம் கோருவார். இப்படியாக தொடங்கிவைத்த எந்த பணிகளையும் அவர் முடித்து மக்களுக்கு கையளிக்காமல் விட்டதில்லை. 

ஆனால் மட்டக்களப்பு நகரின் மத்தியில் பிரமாண்டமாக ஒரு நூலகத்தை கட்டுவதற்காக தொடக்கிவைத்தார். சுமார் 20கோடி ரூபாய்கள் திட்டமிடப்பட்டது.  அதில் சுமார் 9 கோடிகளை ஒதுக்கி ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவுற்ற தருணத்தில் அவரது ஆட்சிக்காலம் ஒருவருடம் முன்பாகவே கலைக்கப்பட்டது. அதன்காரணமாக அந்த வேலைத்திட்டம் முடக்கப்பட்டது.


தொடர்ந்துவந்த 'நல்லாட்சி' என்று பீத்திக்கொண்ட ரணில்- சம்பந்தன் கூட்டரசாங்கம்  அத்திட்டத்தை கைவிட்டது. வெறும் அரசியல் காழ்ப்புக்காக மிகப்பெரிய மக்கள் நல திட்டமொன்று பாழாக்கப்பட்டது.

கடந்த தேர்தலின் போது  சிறையிலிருந்த பிள்ளையான் தான்  வெல்லுகின்ற பட்ஷத்தில் மீண்டும் நூலக பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி வெற்றியடைந்ததும் ஐந்து வருட சிறையிலிருந்து வெளியேவந்த பிள்ளையான் ஒரு நாள்கூட அயர்ந்து தூங்கவில்லை.  மறுநாளிலிருந்தே ஓடத்தொடங்கினார்.  பதவிகிடைத்த பின்னர்  தேர்தல் விஞ்ஞாபனத்தை கையிலே வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக பணிகளை முடிக்கிவிடுகின்றார். 

திகிலிவட்டை  பாலம் திட்டவரைபு  தொடங்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகள் புதிய  கட்டட தொகுதிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. கரடியனாறு விவசாய பயிற்சி பண்ணை புனரமைக்கப்படவுள்ளது. நேற்றையதினம் குடும்பிமலைப்பகுதிக்கு அருகேயுள்ள மாவெட்டுவான் அணைக்கட்டுக்கு  கல்வைக்கப்பட்டுள்ளது.


ஐந்து வருடங்களுக்கு முன்னர் எந்த இடத்தில் பிள்ளையானின் அபிவிருத்தி முயற்சியொன்று தடைப்பட்டு நின்றதோ அந்த நூலக கட்டட   பணிகள் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 








   

0 commentaires :

Post a Comment