2/10/2021

ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுமா? புதைக்க இடமளிப்போம்: பிரதமர்

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்


ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்,

“நீரின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு வாய்ப்பு இல்லையென சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, பாராளுமன்றத்தில் நேற்று (09) தெரிவித்தார். அப்படியாயின், மரணமடையும் முஸ்லிம்களை புதைப்பதற்கு இடைமளிப்பீர்களா” என வினவினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “ புதைப்பதற்கு இடமளிப்போம்” என்றார்.

எழுந்து நின்றிருந்த மரிக்கார் எம்.பி. “மிக்க நன்றி” எனக் கூறியமர்ந்தார்.


0 commentaires :

Post a Comment