2/13/2021

டெங்கு நோய்க்கெதிரான களப்பணியில் எம்.பி

இன்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேத்தாளை கிராமத்தில் எமது பணிப்புரைக்கும், பங்குபற்றுதலுக்கும் அமைவாக பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோரின் ஏற்பாட்டின கீழ் டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஒழுங்கு செய்யப்பட்டது.

பாடசாலைகள்,வணக்கஸ்தலங்கள்,மைதானங்கள்,மயானம் போன்ற பொது இடங்களை சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பொது பரிசோதகர்கள்,கிராமசேவகர் மற்றும் கிராம அபிவருத்திச் சங்க உறுப்பினர்கள்,பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

எதிர்வருகின்ற காலங்களில் மாவட்டத்தில் காணப்படுகின்ற வீதிகளுக்கு புதிய வடிகால்களை அமைப்பதன் மூலமாகவும் இருக்கின்ற வடிகால்களை சரியாக சுத்தம் செய்வதன் மூலமாகவும் சரியான முறையில் மழைநீர் வடிந்தோடக்கூடிய முறைமையை உருவாக்கி மாரி காலங்களில் பாரிய பிரச்சினையாக உள்ள வெள்ள நிலைமைகளையும் தேவையற்ற விதத்தில் நீர்தேங்கி நிற்பதனையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நுளம்புகளின் பெருக்கத்தினையும் டெங்கு நோய் தாக்கத்தினையும் கணிசமான அளவில் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.




0 commentaires :

Post a Comment