2/13/2021

யாழ்ப்பாணத்தை அதிரவைத்த கன்பொல்லையில் வெடித்தகுண்டு





கன்பொல்லை தியாகிகள் நினைவு
கறுப்பாகிக் கிடந்த ஈழமண்ணில் சாதிய தீண்டாமைக்கெதிரான சமத்துவத்துக்கான போராட்டத்தில் வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் வெடித்துச் சிதறிய கன்பொல்லைத் தியாகிகள் மா.சீவரத்தினம், க.செல்வராசா, கி.வேலும்மயிலும் ஐம்பத்தியோராம் ஆண்டு நினைவு. இப்போராட்டம் 1966லிருந்து1971வரை நிகழ்ந்தது.

சிவந்த வணக்கங்கள்!
இந்த நாட்களிலே சமத்துவத்துக்கான போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட எட்டு வழக்குகளில் சிறை சென்ற சமூக விடுதலைப் போராளிகள். மு.தவராசா, ஆ.சிவகுரு, ந.இளையதம்பி (கிளி), இ.மார்க்கண்டன் (வாசு), ச.வல்லி (முறிகண்டி), வே.கிருஷ்ணபிள்ளை (கொழும்பான்), ப. செல்வராசா வரிசைப்பட்ட ஏழு தோழர்களையும் காயம்பட்ட ந.மார்கண்டு (பட்டி), செங்காரியப்பா, ஆ.தம்பையா, மு.அபிமன்யு, மு.பொன்னன், செங்காரி பூரணம், தம்பையா கண்ணியம்மா வேறோர் கைக்குண்டு வழக்கில் சிறை சென்ற சி.காசியன் (ஜெயம் இவர்களும் நினைவுகொள்ளப்பட வேண்டும்.

கிராமத்தில் இன்றும் நினைவுக் கூட்டமும் அதனையொட்டிய நினைவுகளும் நடைபெறுகின்றன. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சித் தோழர் செந்தில் கலந்து நினைவுப் பேருரை ஆற்றியுள்ளார்.

தகவல் முகநூல் சத்தியதாஸ்

0 commentaires :

Post a Comment