2/13/2021

மட்/முதல்வரின் வீட்டு வேலையாட்களுக்கு மாநகரசபை சம்பளம்


மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவனின் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அமர்த்தப்பட்டிருந்த இரண்டு தொழிலாளர்களுக்கு மாநகரசபை ஊடாக சம்பளம் வழங்கப்பட்டு வந்த செய்திகள் அம்பலமாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து இதுவரை அவர்களுக்காக மாநகர சபையால் செலவு செய்யப்பட்ட இருபது இலட்சம் ரூபாய்களையும் திருப்பி அறவிட ஆணையாளரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வரின் தனிப்பட்ட செல்வாக்கை சமூக வலைத்தளங்கள் ஊடாக உயர்த்துவதற்காக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மாநகரசபை சுகாதாரத் தொழிலாளியும் நீக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் பயன்படுத்தி வந்த இரண்டு சொகுசு வாகனங்களில் ஒன்று ஆணையாளரால் கையேற்கப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணத்தை சூறையாடிவந்த முதல்வருக்கு எதிராக புதிய ஆணையாளர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஆதரவு பெருகிவருகின்றது.

0 commentaires :

Post a Comment