இன்று மட்டக்களப்பு மாவட்டதில் மாயவட்டை பேரில்லாவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள மாவெட்டுவான் அணைக்கட்டு புனரமைபிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுஇணைத் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் ஆகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ சோபா சேர் ஜெயரஞ்சித் மற்றும் திருமதி மங்கலேஸ்வரி சங்கர் (மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவரின் செயலாளர்) அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களது நாட்டை கட்டியெழுப்பும் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைபிரகடனத்தின் கீழ் “நீர்ப்பாசன செழுமை”தேசிய வேலைத்திட்டம்-2021 திற்கு அமைவாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மேற்படி அணைக்கட்டு கட்டி முடிக்கப்படும் வேளையில் சுமார் 600 ஏக்கர் சிறுபோக வேளாண்மைக்குரிய நீர் பாய்ச்சல் மேலதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 commentaires :
Post a Comment