2/18/2021

கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயம் 1C பாடசாலையாக தரமுயர்வு

மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயம் 1C பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

பாடசாலையினை தரமுயர்த்துவது தொடர்பில் பாடசாலைச் சமூகமும் பொது மக்களும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் முன்வைத்த கோரிக்கையின் பலனாக type 3 பாடசாலையாக இருந்து தற்போது 1C பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் க.போ.த சாதாரண தரம் வரை மாத்திரம் கல்வி பயிலக் கூடியதாக இருந்த இப் பாடசாலையானது க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவுவரை கற்கக்கூடிய வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அங்குள்ள கலைப்பிரிவில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து மட்டக்களப்பிற்கு வரவேண்டிய தேவை குறைக்கப்பட்டு அங்குள்ள பாடசாலையிலே தங்களது கல்வி நடவடிக்கைகளை தொடர கூடிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment