பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் டெங்கு நோயை கட்டுப்படுத்துதல் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசமானது மட்டக்களப்பு மாவட்டத்திலேயே மிகவும் டெங்கு நோய் தாக்கம் அதிகம் கொண்ட இடம் என்பது சுட்டிக் காட்டப்பட்டது.
நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்துவது, டெங்கு நோய்த்தாக்கத்தினையும் மரணங்களையும் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தயோகத்தர்கள்,கிராம சேவகர்கள் உட்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment