“நீரின்றி அமையாது உலகு”
என்கின்ற தொனிப்பொருளுக்கு அமைவாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் கௌரவ நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் பங்களிப்புடன் தேசிய நீர்வழங்கல் திணைக்களத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட “பிரஜா ஜல அபிமானி” என்கின்ற நாடு பூராகவும் ஆயிரம் கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக காஞ்சிரங்குடா பிரதேசத்திற்கான பாதுகாப்பான குடிநீர் வசதி திட்டத்தினை இன்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
அத்தோடு இதுபோன்று எதிர்வரும் காலங்களில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் இந்த குடிநீர் விநியோகத்தினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான திட்டமுன்மொழிவினை கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்காரஅவர்களிடமும் கௌரவ பிரதமர் அவர்களிடமும் சந்திரகாந்தன் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரகாந்தன் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில்தான் வவுணதீவின் பல கிராமங்கள் குடி நீர் மற்றும் மின்சாரங்களை முதன்முதலாக பெற்றுக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment