மனித உரிமை போராளியும் ஊடகவியலாளருமான யேர்மனியை வசிப்பிடமாக கொண்ட ஜெமினி என்றழைக்கப்படும் கங்காதரன் அவர்கள் காலமாகியதை ஒட்டி பலத்தரப்பட்டோரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவருமான சந்திரகாந்தன் அவர்களும் தனது முகநூல் அஞ்சலி குறிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.
'காலம்சென்ற ஊடகவியலாளர் ஜெமினி அவர்கள் நடாத்திய தேனீ இணையத்தளமானது கிழக்கு மக்களின் அரசியல் எழிச்சியில் கொண்ட வகிபாகம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு கிழக்கு போராளிகளின் நீதிக்கான குரல்களுக்கு என்றும் மதிப்பளித்து வந்த ஜெமினி அவர்களின் ஜனநாயக பண்பு மாண்பு மிக்கதும் என்றும் எமது நன்றிக்குரியதுமாகும்.
புகலிட இலக்கிய,அரசியல் பரப்பில் முக்கிய இணையத்தளமான தேனீயின் ஆசிரியராக இருந்து இவர் ஆற்றிய பணிகள் என்றும் மறக்கமுடியாதன.
எமது தமிழ் தேசிய போராட்ட பாதையில் 2004ஆம் ஆண்டில் நாம் எதிர்கொள்ள நேர்ந்த கிழக்கு பிளவின் போது எமது பக்க நியாயங்களை புரிந்து கொண்ட விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஊடகவியலாளர்களுள் ஜெமினி அவர்கள் முதன்மையானவர் ஆகும்.
ஜெமினி அவர்களின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் தோழமைகளுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில் எனது இதய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றேன். எனவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment