1/28/2021

கரடியனாறு விவசாயப் பண்ணை துரிதமாக விருத்தியடையும்





யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்துறைகளுள் விவசாயம் குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கரடியனாறு விவசாய பண்ணையும் ஒன்றாகும்.  மட்டக்களப்பின் விவசாயத்துறையை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இந்த விவசாயப்பண்ணை திறம்பட இயங்குதல் அவசியம். எனவே பண்ணையின் செயற்பாடுகளை துரிதப்படுத்தி அபிவிருத்தி செய்யும் நோக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விசேட முன்னெடுப்பொன்றினை மேற்கொண்டுள்ளார்.

கரடியனாறு விவசாய பண்ணை தொகுதிக்கு களவிஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து  விசேட கூட்டமொன்றினை  நடத்தியுள்ளார். இக்கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் போன்றவற்றை வழங்குதல்,

புதிய ரக விதைகளையும் விரைவாக பலன் தரக்கூடிய நாற்றுகளையும் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தல்,

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவையான விதைகளை இங்கேயே உருவாக்குதல்,

மாவட்டத்தில் உள்ள இரண்டு லட்சம் ஏக்கர் வயல் காணிகளிலும் எவ்வாறு விளைதிறனை அதிகரிப்பது,

இவ்வாறு உற்பத்தியினை பெருக்குவதன் மூலம் குறைந்தது 3000கோடி ரூபா வரையிலான பணத்தினை வேளாண்மை மூலமாக எமது மாவட்டத்திற்குள் கொண்டு வருதல்,

மண் பரிசோதனைகள் மூலம் பொருத்தமான பயிர் நிலங்களை கண்டுபிடித்து அங்கு பொருத்தமான முதலீட்டாளர்களை இனம் கண்டு பாரிய அளவான நிலப்பரப்பில் விவசாயத்தினை மேற்கொள்ளுதல்
 
வளம் குறைந்த மண்ணினை கொண்ட விவசாய காணிகளை எவ்வாறு வளமான காணிகளாக மாற்றுவதற்கான ஆய்வுகளை முன்னெடுத்தல், 

மாவட்டத்தில் காணப்படக்கூடிய குளங்களை புனரமைத்து விவசாயத்திற்கு தேவையான நீர் பாசனத்தினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல், 

மாவட்டத்தில் விவசாயத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அதிகளவில் வழங்குவதன் மூலமாக விவசாயம் சம்பந்தமான அறிவு பூர்வமான ஒரு சமூகத்தினை கட்டியெழுப்புதல்,

அதனை எதிர்காலத்தில் NVQ 4 பயிற்சி நெறிவரை தரம் உயர்த்துதல். இவ்வாறு தொடர்ச்சியான பயிற்சிகள் மூலம் நவீன விவசாய முறைகளைப் புகுத்தி ஏனைய நாடுகளைப் போன்று விவசாயத்தை நவீன மயப்படுத்தி விளைச்சலை அதிகரித்தல்,

விதைகளையும், விளைச்சலையும் பாதுகாப்பாக வைக்க கூடிய களஞ்சிய சாலைகளை உருவாக்கி விவசாயிகளை பாதுகாத்தல் 

போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment