அமெரிக்காவின் 46 ஆவது குடியரசுத் தலைவராக 78 வயது நிரம்பிய ஜோபைடன் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று, நேற்று பதவியேற்றார். அவருடன் ஜனநாயகக் கட்சி சார்பில் குடியரசுத் துணைத் தலைவராக தமிழ்நாட்டுத் தொடர்புள்ள - கருப்பின மக்களுக்கான போராளி முற்போக்கு சிந்தனையுள்ள சட்ட நிபுணர் திருமதி கமலா ஹாரிஸ் அவர்களும் துணை தலைவராக பதவியேற்றார்!
இது குறித்து இந்தியாவின் திராவிடர் கழகம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்
புதிய நம்பிக்கையை உலக நாடுகளுக்கும் ஏற்படுத்தும் வண்ணம் புதிய ஆட்சி மலர்ந்துள்ளதாக நம்பிக்கை வெளியிடட்டுள்ளது.
தலைவர் வீரமணி விடுத்துள்ள அச்செய்தியில் டிரம்பின் பல ஆணைகளை ரத்து செய்து, கரோனா தொற்றுத் தடுப்புக்கு முன்னுரிமை கொடுத்து முதல் கையெழுத்திட்டு, பாரீஸ் பருவ நிலை கால ஒப்பந்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட 15 ஆணைகளில் கையெழுத்திட்டார் என்பது ஒரு புதிய நம்பிக்கையை உலக நாடுகளுக்கும் ஏற்படுத்துவதாகும். இந்தியாவுடன் நட்புறவு செழிக்கட்டும்!
பதவியேற்கும் அதிபருக்கும், துணை அதிபருக்கும், அவருடைய குழுவினருக்கும் நமது கனிந்த வாழ்த்துகள்! என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment