.
ஐந்து வருட அரசியல் பழிவாங்கலில் இருந்து விடுதலையான பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் நாள்தோறும் மக்களை சென்று பார்த்து குறைநிறைகளை கேட்டறிந்து வருகின்றார்.
அந்தவகையில் இன்று கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார். ஒருபுறம் இரு மாதகாலமாக கிராம மக்கள் அளித்துவரும் பெருவாரியான வரவேற்புகள் தொடருகின்றன. மறுபுறம் மக்களுக்கு ஏராளமான தேவைகளும் எண்ணிலடங்காத பிரச்சினைகளும் குவிந்து காணப்படுவதினையும் பாடசாலைகள் மற்றும் மைதானங்கள் அதே போன்று வீதிகள் போன்ற பல்வேறு விதமான பொது தேவைகள் செறிந்து காணப்படுவதனையும் மக்களுடன் உரையாடி தகவலறிந்து வருகின்றார் சந்திரகாந்தன்.பாடசாலைகள்,மைதானங்கள், வீதிகள் என்று பல்வேறு விதமான குறைபாடுகளும் நிறைந்த இடங்களை சந்திரகாந்தன் நேரடியாகவே சென்று பார்வையிட்டு வருகின்றார்.
0 commentaires :
Post a Comment